side Add

ஊழல் இருக்கும் வரை- பொருளாதார மீட்சியில்லை!!

இலங்­கை­யின் பொரு­ளா­தா­ரம் மோச­மான கட்­டத்தை எட்­டி­விட்­டமை தெளி­வா­கத் தெரி­கின்­றது. இலங்கை ரூபா­வின் மதிப்பு என்­று­மி­ல்­லா­த­வாறு சரி­வைச் சந்­தித்து வரு­வ­தால் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற பொருள்­க­ளுக்கு அதிக தொகை­யைச் செலுத்த வேண்­டிய நிர்ப்­பந்­தம் அர­சுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இதற்­குத் தேவை­யான மேல­திக நிதி­யைத் திரட்­டு­வ­தும் இல­கு­வான காரி­ய­மாக இருக்­கப் போவ­தில்லை. அது­மட்­டு­மல்­லாது பெரு­ம­ளவு ரூபா நோட்­டுக்­களை அரசு அச்­சிட்டு வரு­வ­தான தக­வல் உவப்­பா­ன­தொன்­றல்ல. இத­னால் பண­வீக்­கம் பெரு­ம­ளவு அதி­க­ரித்து மக்­கள் சிர­மங்­களை எதிர்­கொள்­ளவே செய்­வர்.

பொருள்­க­ளுக்கு அதி­க­ளவு பணத்­தைக் கொடுக்க வேண்­டிய நிலைக்கு இவர்­கள் தள்­ளப்­ப­டு­வ­தால், பொரு­ளா­தார ரீதி­யி­லான சிர­மங்­க­ளை­யும் எதிர்­கொள்­ளப் போகின்­ற­னர். அது­மட்­டு­மல்­லாது எரி­வா­யு­வின் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தால் அத­னைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­கள் அதிக சுமையை எதிர்­கொண்­டுள்­ள­னர். எரி­வா­யு­வைப் பயன்­ப­டுத்தி சிற்­றுண்டி வகை­க­ளைத் தயா­ரிப்­ப­வர்­கள் அவற்­றின் விலை­களை உயர்த்­தவே செய்­வார்­கள். இதன் சுமை­ நுகர்­வோ­ரின் தலை­க­ளையே அழுத்­தப் போகின்­றது.

வாழ்க்­கைச் செலவு
அதி­க­ரித்து வரு­கி­றது
சாதா­ரண மக்­கள் தமது போக்குவரத்­துச் சாத­ன­மாக பஸ்­க­ளையே நம்­பி­யி­ருப்­ப­தால் பஸ் கட்­டண அதி­க­ரிப்பு அவர்­க­ளைப் பாதிக்­கவே செய்­யும். இன்­ன­மும் அதி­க­ரிப்­புக்­கள் தொடர்­வ­தற்­கான சாத்­தி­ய­மும் உண்­டென்­பதை மறுத்­துக்­கூற முடி­ய­வில்லை. அதி­க­ரிப்­புத் தொடர்­பான அர­சின் அறி­விப்­புக்­க­ளால் வசதி வாய்ப்புக்கள் கொண்ட தரப்பினருக்கு எவ்­வித பாதிப்­பும் ஏற்­ப­டப் போவ­தில்லை.

ஆனால் சாதா­ரண எளிய மக்­க­ளின் நிலை­தான் மோச­மாக மாறி­வி­டப் போகின்­றது. சாதா­ரண பொது­மக்­கள் பாதிக்­கப்­ப­டும் வித­மாக அவர்­க­ளின் அத்தியாவசிய நுகர்வுப் பொருள்களுக்கு கட்­டண அதி­க­ரிப்பை மேற்­கொள்­வது ‘நல்­லாட்சி’ அர­சுக்கு ஏற்­பு­டை­ய­தா­கத் தெரி­ய­வில்லை.

இந்த நாட்­டின் பொரு­ளா­தா­ரம் மோச­மான நிலைக்­குச் சென்­ற­மைக்கு இங்கு இடம்­பெற்று வரு­கின்ற ஊழல் மற்­றும் மோச­டி­களே முதன்­மைக் கார­ண­மா­கும். உயர் பத­வி।­களை வகிக்­கின்ற அர­சி­யல்­வா­தி­க­ளும், அரச அதி­கா­ரி­க­ளும் தமது எண்­ணம் போன்று ஊழ­லில் ஈடு­பட்டு அரச நிதியை ஏப்­பம் விடு­வ­தால் பொரு­ளா­தா­ரம் மோச­மான பாதிப்பை எதிர்­கொண்டு வரு­கின்­றது.

மகிந்த அர­சின் காலத்­தி­லும், அரச தலை­வர் மைத்­திரி – தலைமை அமைச்­சர் ரணில் ஆகியோரது தலை­மை­யி­லான கூட்­டு­அ­ர­சி­லும் இடம்­பெற்ற மிகப்­பெ­ரிய ஊழல்­கள் பொரு­ளா­தா­ரத்­தின் அத்­தி­பா­ரத்­தையே ஆட்டம் காண வைத்து விட்­டன. இத­னால் அப்­பாவி மக்­களே பெரி­தும் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். இது­வரை ஊழல் வாதி­கள் எவ­ருமே கைது செய்­யப்­ப­ட­வில்லை. அவர்களைக் கைது செய்வதற்கான துணிவு அர­சி­டம் இருப்­ப­தா­க­வும் தெரி­ய­வில்லை. நாட்டு மக்களது பொரு­ளா­தா­ரச் சுமை­க­ளைக் குறைப்­பதே ஓர் அர­சின் தலை­மை­யான கட­மை­யாக இருத்­தல் வேண்­டும்.

பெரும் பின்­ன­டை­வில்
ஏற்­று­ம­தித் துறை­கள்
நாட்­டின் ஏற்­று­ம­தித் துறை­கள் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன. தேயி­லை­யின் உற்­பத்தி பெரும் வீழ்ச்­சியை எதிர்­கொண்­டுள்­ளது. தனி­யார் வச­முள்ள தேயி­லைத் தோட்­டங்­கள் தேயிலை உற்­பத்­தி­யில் பெரும் வீழ்ச்­சி­யைக் கண்­டுள்­ளன. தொழி­லா­ளர்­க­ளுக்­கும், தனி­யார் தோட்ட முத­லா­ளிமாருக்கும் இடை­யி­லான உற­வு­கள் மோச­ம­டைந்­துள்­ளமை இதற்­கான முதன்­மைக் கார­ண­மா­கும்.

சில முத­லா­ளி­மார் தேயி­லைத் தோட்­டங்­க­ளி­லுள்ள மரங்­களை வெட்டி விற்­பனை செய்­வ­தி­லுள்ள அக்­க­றை­யைத் தேயி­லைத் தோட்­டங்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தில் காட்­டு­வ­தில்­லை­யெ­னத் தோட்­டத் தொழி­லா­ளர்­கள் குற்­றம் சுமத்­து­கின்­ற­னர். தேயி­லைச் செடி­கள் பரா­ம­ரிப்­பின்­றிக் காணப்­ப­டு­வ­தால் தமது வரு­மா­னத்­தி­லும் இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

இத­னால் இவர்­கள் பொரு­ளா­தார ரீதி­யான சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். இறப்­பர் துறை­யும் பெரும்­பா­திப்பை எதிர்­கொண்டு வரு­கின்­றது. இத­னால் பாதிக்­கப்­ப­டு­வ­தும் அந்­தத் தோட்­டங்­க­ளில் பணி­பு­ரி­கின்ற தொழி­லா­ளர்­கள்­தான்.

அரச நிறு­வ­னங்­கள் பெரும் நட்­டத்தை எதிர்­கொண்டு வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தவ­றான முகா­மைத்­து­வ­மும், ஊழல் மோச­டி­க­ளுமே இதற்­கான கார­ண­மா­கும். உயர் பத­வி­க­ளில் உள்ள அர­சி­யல்­வா­தி­கள் தமக்கு வேண்­டி­ய­வர்­களை இந்த நிறு­வ­னங்­க­ளின் முக்­கிய நிர்­வா­கி­க­ளாக நிய­மிப்­ப­தால் அது பெரும் மோச­டி­க­ளுக்கு வழி­வ­குத்து விடு­கின்­றது. இந்த நிலை மாற்­றப்­ப­டாதவரை, அரச நிறு­வ­னங்­க­ளில் இலா­பத்தை எதிர்­பார்க்க முடி­யாது. சுருக்­க­மா­கக் கூறி­னால் நேர்­மை­யில்­லாத அர­சி­யல் வாதி­க­ளும், அரச அலு­வ­லர்­க­ளும் இருக்­கும் வரை­யில் இந்த நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு விமோ­ச­னம் கிடைக்­காது.

You might also like
X