எப்போது விடிவு பிறக்கும்?

நெடுந்­தீவு வீதிப் புன­ர­மைப்பு சம்­பந்­த­மாக உத­ய­னில் பிர­சு­ர­மான செய்­தியை வாசித்ததால் ஏற்­பட்ட மன ஆதங்­கம் கார­ண­மாக இந்த ம­டலை வரை­கி­றேன்.

நெடுந்­தீவு இலங்­கை­யின் மிகச் சிறந்த சுற்­றுலா மையம். யாழ்.மாவட்­டத்­தில் அமைந்­தி­ருப்­ப­தால் தேடு­வா­ரற்­றுக் கிடக்­கி­றது.

ஆயி­ரத்து 400 குடும்­பங்­கள் வாழும் இந்த ஊர் மக்­க­ளது முக்­கிய போக்­கு­வ­ரத்து மார்க்­கம் இங்­குள்ள முதன்மை வீதியே.

அங்­குள்ள மக்­க­ளின் பிர­தான போக்­கு­வ­ரத்­துச் சாத­னம் துவிச்­சக்­க­ர­வண்­டியே. பாதை­யின் சீர்­கேடு கார­ண­மாக துவிச்­சக்­கர­ வண்­டி­யில் பய­ணிப்­போர் தம்­மு­டன் காற்­ற­டிக்­கும் ‘பம்’­­மை­யும் எடுத்­துச் செல்­ல­வேண்­டி­ய­நிலை.

தற்­போது எவ­ரா­லும் கவ­னிப்­பற்று கைவி­டப்­பட்­ட ­நி­லை­யில் குன்­றும் குழி­யு­மாக அந்த முதன்மை வீதி காணப்­ப­டு­கி­றது.

அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் கிரா­மப் புறங்­க­ளில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டாற்றான், கிரா­மங்­கள் வளர்ச்­சி­ய­டை­யும். மக்­க­ளின் பரம்­ப­லும் சீரா­கும்.

தீவுப் பகு­திக்கு ‘றோலர்­கள்’­­­போன்ற கன­ரக வாக­னங்­களை நகர்த்­து­வது கடி­னம் என்­ப­தால், வீதி­யைச் செப்­ப­னிட முடி­யா­துள்­ளது என்று சப்­புக்­கட்­டுக்­கா­ர­ணம் காட்­டு­வது நியா­ய­மற்­றது.

இதற்கு முன்­னைய காலங்­க­ளில், அங்கு வீதி­யைச் செப்­ப­னிட கன­ரக வாக­னங்­களே பயன்­ப­டுத்­தப்­பட்­டன. எனவே சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் இது விட­யத்­தில் தலை­யிட்டு இந்த வீதி அமைப்பை ‘‘ஐரோட்’’­­­திட்­டத்­தில் உள்­வாங்க வேண்­டும் என்­பது என­தும், இவ்­வூர் மக்­க­ளி­ன­தும் எதிர்­பார்ப்­பா­கும்.செய்­வார்­களா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close