side Add

எம்.ஜி.ஆரால் குழப்பமடைந்த பொலிஸார்!!

எம்.ஜி.ஆருக்கு வவுனியாவில் சிலை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முன்னாயத்த நடவடிக்கைகளைப் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வ்வுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பில், தினசந்தைக்கு முன்பாக உள்ள பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனிற்கு சிலை வைப்பதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று அதற்கான அடிக்கல் நாட்டபடவிருந்த நிலையில் பொலிஸார் தலையிட்டு அதனை நிறுத்தியதுடன், உரிய அனுமதி எடுத்த பின்னர் சிலையை அமைக்குமாறு தெரிவித்தனர்.

இதனால் அடிக்கல் நடுவதற்கு தோண்டப்பட்ட குழி தற்போது மூடபட்டு வருகின்றது.

You might also like