எரிவாயு சிலிண்டர் வெடித்து- தரைமட்டமான உணவகம்!!

எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில், 21 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புரோவர்ட் கவுண்டியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் ஆள் இல்லாத உணவகத்தில் விபத்து நடந்துள்ளது.

விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விபத்தில் கட்டடத்தில் உலோக சட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே தப்பியது. அருகாமையில் இருந்த உடற்பயிற்சி கூடம் முதற்கொண்டு அனைத்தும் நாசமாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like