ஏமாற்­றம் தந்த கொள்கை விளக்­கம்!!

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று தனது கொள்கை விளக்க அறிக்­கையை இரண்­டா­வது தட­வை­யாக நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தார். நடை­பெற்­று ­வ­ரும் ஆட்­சி­யின் 8ஆவது நாடா­ளு­மன்­றக் கூட்­டத் தொட­ரின் ஆரம்­பத்­தில் அவர் முன்­வைத்த கொள்­கை­வி­ளக்க அறிக்­கைக்­குப் பின்­னர் இரண்­டா­வது தட­வை­யாக இந்த ஆட்­சி­யின் எஞ்­சிய இரண்டு வருட காலத்துக்கான கொள்­கை­ வி­ளக்க அறிக்­கையை அவர் முன்­வைத்­தார்.

ஆட்­சிக்கு வரும்­போது மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­யில் எத­னை­யும் உருப்­ப­டி­யாக நிறை­வேற்­றி­யி­ருக்­காத நிலை­யில் அவ­ரது இந்­தக் கொள்கை விளக்க உரைக்கு மிகுந்த முக்­கி­யத்­து­வ­மும் எதிர்­பார்ப்­பும் இருந்­தது. எஞ்­சி­யி­ருக்­கும் காலத்­தில் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு என்ன செய்­யப்­போ­கி­றார்­கள், எப்­ப­டிச் செய்­யப்­போ­கி­றார்­கள் என்­ப­தற்­கான விளக்­க­வு­ரை­யாக இந்­தக் கொள்­கை­வி­ளக்க உரை அமைந்­தி­ருக்­க­வேண்­டும். ஆனால், அப்­ப­டி­யல்­லா­மல் ஏமாற்­றம் தரும் விதத்­தி­லேயே அவ­ரது உரை அமைந்­தி­ருக்­கி­றது.

3 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் தனது கொள்­கை­வி­ளக்க உரை­யில் அவர் முன்­வைத்த அதே சவால்­களை எதிர்­கொள்­ள­வேண்டி இருக்­கி­றது என்றே 3 ஆண்­டு­க­ளின் பின்­ன­ரும் அவர் தனது உரை­யில் கூறி­யி­ருக்­கி­றார். ஆனால், தமது நோக்­கத்தை அடை­ வ­தற்­கான பாதை­யில் கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் பெரும் அடை­வு­க­ளைத் தமது அரசு கண்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­யி­ருக்­கின்­றார்.

இருந்­தா­லும் அதற்கு உதா­ர­ணங்­க­ளாக அவர் குறிப்­பிட்­டி­ருப்­பவை எல்­லாமே நாட்­டின் மிக முக்­கிய பிரச்­சி­னை­க­ளின் பக்­க­வி­ளை­வு­க­ளோடு தொடர்­பு­பட்­ட­வை­யாக இருக்­கின்­ற­னவே தவிர முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காண்­ப­தற்­கா­ன­தாக இல்லை.

குறிப்­பாக நாட்­டின் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணும் விட­யம் தொடர்­பில் அரச தலை­வ­ரின் கொள்கை விளக்க உரை எந்­த­வி­த­மான காத்­தி­ர­மான கருத்­தை­யும் முன்­வைக்­க­ வில்லை. இடை­ந­டு­வில் நின்­றி­ருக்­கும் புதிய அர­ச­மைப்பு முயற்­சி­கள் எந்த வகை­யில் முன்­ன­க­ரப்­போ­கின்­றன என்­ப­தற்­கான எந்த சமிக்­ஞை­யும் அதில் இல்லை.

“எவ்­வா­றான விமர்­ச­னங்­கள் எழுந்த போதி­லும் வடக்கு – கிழக்கு மக்­க­ளின் பொறு­மை­யி­ழப்பை நிரந்­த­ர­மா­கச் சம­ர­சப்­ப­டுத்த வேண்­டு­மா­யின் மக்­க­ளின் விருப்­பத்­தை­யும் இணக்­கப்­பாட்­டை­யும் பெற்ற அர­சி­யல் வேலைத்­திட்­டம் ஒன்றை ஆரம்­பித்­தல் வேண்­டும்” என்று மட்­டுமே அவர் கூறி­யி­ருக்­கி­றார். அதற்கு மேல் அத­னைச் சாத்­தி­ய­மாக்­கு­வ­தற்­கான வழி­வகை குறித்து அவ­ரது உரை­யில் ஏதும் இல்லை.

அதை­விட புதிய அர­ச­மைப்பு முயற்­சி­யில் இருந்து அரச தலை­வர் முற்­றி­லு­மா­கப் பின்­வாங்­கி­விட்­டாரோ என்று அச்­சப்­ப­டக்­கூ­டிய வகை­யில் மாகாண சபை­கள் குறித்த அவ­ரது கருத்து அமைந்­துள்­ளது.

“நிலை­யான நாட்­டின் அடித்­த­ளம் தேசிய நல்­லி­ணக்­கமே ஆகும். உண்­மை­யான தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மா­யின் சமத்­து­வத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட அர­சி­யல் தீர்­மா­னங்­களை இயற்­றத்­தக்க கட்­ட­மைப்பை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும். அந்த நோக்கை வெற்றி கொள்­வ­தற்கு தற்­போது செய­லில் இருந்­து­வ­ரும் மாகாண சபை முறை­மையை மேலும் பலப்­ப­டுத்­து­வது காலத்­தின் தேவை­யா­கும் என்று நான் நம்­பு­கி­றேன்” என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் அவர்.

தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக்குத் தற்­போ­தைய மாகாண சபை முறைமை ஒரு தீர்­வாக மட்­டு­மல்ல தீர்­வுக்­கான அடிப்­ப­டை­யா­கக்­கூட அமை­யாது என்று தமிழ் மக்­கள் முற்­றி­லு­மாக நிரா­க­ரித்­து­விட்ட நிலை­யில் அந்த மாகாண சபை முறை­மையை மேலும் பலப்­ப­டுத்­து­வது காலத்­தின் தேவை என்று அவர் கூறி­யி­ருப்­பது புதிய அர­ச­மைப்பு முயற்­சி­யைக் கைவிட்டு அர­ச­மைப்­புத் திருத்­தம் மூலம் மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்­க ைளத் தமது வச­திக்­கேற்ப அதி­க­ரிப்­ப­தையே குறிக்­கி­றதோ என்று சந்­தே­கிப்­ப­தற்கு நிறை­யவே இடம் உண்டு.

அவர் அப்­படி நடந்­து­கொண்­டால், இந்த உரை­யில் அவரே குறிப்­பி­டும் ‘‘தமிழ் மக்­க­ளின் சம உரி­மை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட வேண­வாக்­களை ஏற்­றுக்­கொள்­ளல்’’ என்­ப­தன் அடிப்­ப­டை­யி­லான தீர்­வாக நிச்­ச­யம் இருக்­காது. அந்த வகை­யில் அரச தலை­வ­ரின் கொள்கை விளக்க உரை தமிழ் மக்­க­ளுக்கு ஏமாற்­றம் தரு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது. யானைப் பசிக்­குச் சோளப் பொரி போன்று இருக்­கி­றது அவ­ரது உரை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close