ஏ 9 வீதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து – தடுக்கக்கோரி பிரேரணை

ஏ 9 வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகத்  தெரிவித்து அதனைத் தடுக்க பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

வடக்குமாகாணசபை அமர்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இதன்போதே அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தால் இந்த பிரேரணை முன் வைக்கப்பட்டது.

ஏ9 சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களாலேயே அதிகளவான விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்புக்களும் அதிகமாகின்றன.  ஆகவே இதனைத் தடை செய்ய வேண்டும்.

பழுதடைவு காரணமாக நிறுத்தப்படும் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகனத் தரிப்பிடம் அமைக்க வேண்டும் என்றும் அவைத் தலைவர் தெரிவித்தார்.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close