கடந்து வந்த- 10 வருடங்கள்!!

இலங்­கை­யில் இனப்­பி­ரச்­சினை ஆரம்­பித்த காலத்­தி­லி­ருந்து தமி­ழர்­க­ளில் பல­ரும் காணா­ம­லாக்­கப்­பட்­ட­னர். இது விட­யத்­தில் சிங்­க­ள­ வர்­கள் அல்­லது ஆயு­தம் தாங்­கிய சிங்­க­ள­வர்­கள் முதன்­மைச் சூத்­தி­ர­தா­ரி­க­ ளாக இனங்­கா­ணப்­ப­டு­கின்­ற­னர். 2009 ஆம் ஆண்டு மே 18ஆம் திக­திக்­குப் பின்­பான நாள்­க­ளில் பெருந்­தொ­கை­யா­ன­வர்­களை உயி­ரு­டன் இலங்கை இரா­ணு­வத்­தி­டம் கைய­ளித்த நிலை­யில் அவர்­க­ளுக் என்ன நடந்­தது என்­ப­தாக அவர்­தம் உற­வு­க­ளின் நீண்ட காலத் தேடலே தற்­போது முனைப்­ப­டைந்­துள்ள காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விவ­கா­ர­ம் ஆகும்.

அந்­தக் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­கள் பத்து வரு­டங்­க­ளாக அழு­து­கொண்­டி­ருக்­கி­றன்­றன. காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களை மீட்­டுத் தரக்­கோரி அவர்­கள் சாத்­வீக வழி­யில் போராடி 25.2.2019அன்­று­டன் 2 வரு­டங்­கள் நிறை­ வா­கி­யி­ருந்­தன. அதற்­காக வட மாகா­ணம் முழு­தும் கடை­ய­டைப்­பு­க­ளும், போராட்­ட­மும் நடந்­தே­றின.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள்
தவிர்ந்­தோ­ரின் நிலைப்­பாடு

கிளி­நொச்­சி­யில் நடந்த இந்­தப் போராட்­டத்­தில் ஏ9 வீதி­யில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் உச்சி வெயி­லில் பதா­கை­க­ளைத் தாங்­கி­ய­வாறு அழு­து­கொண்டு சென்­ற­னர். அத்­தோடு பெருந்­தொ­கை­ய­பன இளை­ஞர்­கள் மோட்­டார் சைக்­கிள்­க­ளில் ஓடி ஓடி அலை­பே­சி­க­ளில் தம்­மைப் போராட்­டத்­து­டன் சித்­தி­ரித்­துப் படங்­க­ளும், செல்­பி­க­ளும் எடுத்­த­னர். அந்த இளை­ஞர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­க­ளு­டன் பங்­கா­ளி­க­ளாக மாறவோ அவர்­க­ளுக்­குத் தாக சாந்தி செய்வதற்கு ஒரு தண்­ணீர்ப்­பந்­த­லை­யா­வது அமைக்­கவோ முன்­வ­ர­வில்லை.

கிளி­நொச்சி கந்­த­சு­வா­மிக் கோவி­லில் இருந்து 155ஆம் கட்டை வரை கொழுத்­தும் வெயி­லில் நின்று உற­வு­கள் கண்­ணீர் விட்­டுக் கத­றி­னார்­கள். இந்த ஊர்­வ­லத்­தில் கலந்­து­கொண்ட ஒரு பகு­தி­யி­னர் ஊர்­வ­லத்­தில் தாமும் பங்­கு­பற்­றி­யதை ஆதா­ரப்­ப­டுத்­தும் நோக்­கில் ஊர்­வ­லத்­தின் நடு­வில் பல கோணங்­க­ளில் தம்­மைப் படம் பிடித்த சம்­ப­வங்­க­ளும், வெளி­நா­டு­க­ளில் அர­சி­யல் தஞ்­சம் கிடைக்­கா­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு வலுச்­சேர்க்­கும் வித­மா­கத் தமது உற­வுக்­கா­ரர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தைக் காட்­டும் வகை­யில் படம் பிடித்த சம்­ப­வங்­க­ளும் நடந்தன.

காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­குள் அடங்­கு­ப­வர்­கள்
இந்­தக் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுள் முன்­னாள் விடு­த­லைப்­பு­லிப் போரா­ளி­களே அதி­கம் காணப்­ப­டு­கின்­ற­னர். 2009ஆம் ஆண்­டின் பின்­பான காலத் தில் தமி­ழர் அர­சி­ய­லுக்­குத் தலைமை தாங்­கிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ ன­ரதோ, ஈ.பி.டி.பியி­ன­ரதோ, ஏனைய தமிழ்க் கட்­சி­யி­ன­ரதோ, இன்று முளை­விட்­டுள்ள புதிய கட்­சி­யி­ன­ரதோ உற­வு­களோ, பிள்­ளை­களோ இந்­தக் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பட்­டி­ய­லுக்­குள் வர­வில்லை. ஏன் எனில் அவர்­கள் எவ­ரும் இன விடு­த­லைக்­கா­கப் போரா­ட­வில்லை. இத­னால் 2009ஆம் ஆண்­டின் பின்­பான தமி­ழர் அர­சி­யல் என்­பது புலி நீக்­கம் செய்­யப்­பட்ட அர­சி­யலே. அது மாத்­தி­ர­மல்ல காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விட­யத்­தில் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் ஐ.நா.மனித உரி­மைக் கூட்­டங்­க­ ளின்­போது கடந்த பத்து வரு­டங்­க­ளாக வெளி அரங்­கில் நின்று குரல் எழுப்­பி­னார்­களே தவிர அதற்­கப்­பால் சென்று சட்­ட­பூர்­வ­மா­கக் களத்­தில் இறங்­கிக் காணா­ம­லாக்­கப்­பட்ட ஒரு நப­ரைக்­கூட மீட்­டெ­டுக்­கவோ அதற்கான சட்ட பூர்­வ­மான அறிக்­கை­யைப் பெறவோ முய­ல­வில்லை.

காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கம்
கிளி­நொச்­சி­யில் நடந்த பேர­ணி­யின்­போது பாதிக்­கப்­பட்ட மக்­கள் ஓ.எம்.பி எனப்­ப­டும் (ஒவ்­பீஸ் ஒவ் மிஸ்­ஸிங் பேர்­சன்) காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான பணி­ய­கம் வேண்­டாம் எனக் கோச­மிட்­ட­னர். இந்­தப் பணி­ய­கத்­தால் இது­வரை ஆக்­க­பூர்­வ­மாக எது­வும் நடக்­க­வில்லை என்­பதை உணர்ந்த நிலை­யி­லேயே அவர்­கள் அவ்­வாறு கேசம் எழுப்­பி­னர். இதற்கு எதி­ரா­கப் போராட்­டத் துக்­குள் கள­மி­றங்­கிய சிலர் ‘‘நாம் கஸ்­ரப்­பட்டு ஓ.எம்.பியைக் கெர்ண்டு வந்­தோம் நீங்­கள் வேண்­டாம் என்­று­கோ­ச­மி­டக்­கூ­டாது’’ என எதிர்க்­கோ­சம் எழுப்­பி­னர். நிறு­வப்­பட்ட காலத்­தி­லி­ருந்து இன்­று­வ­ரை­யில் வினைத்­தி­ற­னான செயற்­பாட்­டைக் கொண்­டி­ருக்­கா­விட்­டா­லும்­கூட காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­கள் விட­யத்­தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எழுத்­து­மூல ஆவ­ணத்­தைப் பெறக்­கூ­டிய அலு­வ­ல­மாக இருக்­கக்­கூ­டி­யது இந்த ஓ.எம்.பி. அலு­வ­ல­கம் மாத்­தி­ரமே. அதைக் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பத்­தி­னர் நன்கு பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டுமே தவிர அந்­தப் பணி­ய­கத்தை வேண்­டாம் என்­ப­தும் தவ­று­தான்.

அர­சி­யல் தலை­வர்­க­ளின்
அக்­க­றை­யின்மை

காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளைப் பற்­றிப் பேசி­னால் சிங்­கள அர­சு­க­ளு­டன் தாம் முரண்­பட வேண்டி ஏற்­ப­டும் என்று இந்த விட­யத்­தில் தமது தலை­யீட்­டைக் குறைத்­துக் கொண்­டுள்ள தமிழ் அர­சி­யல் வாதி­கள் சாவ­டைந்த போரா­ளி­க­ளுக்­கான மாவீ­ரர் தினத்­தை­யும் இறு­திப் போரில் இறந்­த­வர்­க­ளுக்­கான முள்ளி வாய்க்­கால் நினை­வேந்­த­லை­யும் இலங்கை அர­சின் அனு­ச­ர­னை­யு­டன் மேற்­கொண்டு வரு­வ­தற்­குப் பின்­னிற்­ப­தில்லை. காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விட­யத்­தைத் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளின் துணை­யு­டனே சிங்­கள அர­சு­கள் நீர்த்­துப்­போ­கச் செய்­துள்­ளன.

போர்க்­குற்­றங்­கள், காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பான ஒரு சில ஒளிப்­பட ஆதா­ரங்­களை இலங்கை இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து பெற்றுச் சனல் 4 தொலைக்­காட்சி ஆவ­ணப்­ப­டம் ஒன்றை வெளி­யிட்­டது.

இதை­விடத் தமி­ழர் தரப்­பில் இது­பற்­றிய குறிப்­பு­களோ, வேறு ஆவ­ணங்­களோ இல்லை. காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர் பற்­றிய ஏதா­வது விவ­ரத்­தைப் பெற்­றுக்­கொ­டுத்­தால் இவ்­வ­ளவு அமெ­ரிக்க டொலர் வழங்­கப்­ப­டும் என அறி­வித்­தால் ஒரு­வேளை தமிழ் அர­சி­யல் வாதி­கள் முண்­டி­ ய­டித்­துக்­கொண்டு இந்­த­வி­ட­யத்­தில் கவ­னம் செலுத்த வாய்ப்­புள்­ளது.

நாடு கடந்த தமி­ழீழ அரசு
இழைத்த தவறு

நாடு கடந்த தமி­ழீ­ழம் எனத் தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­ற­வர்­கள் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விட­யத்­தில் காத்­தி­ர­மாக எதை­யும் செய்­ய­வில்லை. போர் முடி­வுப் பகு­தி­யில் வைத்து இரா­ணு­வம் இயக்க உறுப்­பி­னர்­க­ளைப் பொறுப்­பேற்­ற­போது அந்­தப் பகு­திக்­குப் பன்­னாட்­டுச் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தி­ன­ரையோ, அல்­லது ஐ.நா அமைதி காப்பு அலு­வ­லர்­க­ளையோ அனுப்பி அவற்­றைப் பதி­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­க­ளில் இந்த அமைப் புக் கவ­னம் செலுத்­தி­யி­ருக்­க­வில்லை. இதன் மூலம் நடு நிலை­யா­ளர் ஒரு­வரை அவ்­வி­டத்­தில் நிறுத்­திச் சர­ண­டைந்­த­வர்­க­ளின் ஒளிப்­ப­டங்­கள் கையெ­ழுத்து ஆவ­ணங்­கள் என்­ப­வற்றை நேர­டி­யா­கப் பெற்­றி­ருக்க முடி­யும். இது காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விட­யத்­தில் நாடு கடந்த தமி­ழீழ அரசு இழைந்த பெரும் தவ­றா­கும். அத்­தோடு காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­ட­றி­யும் வரை அவர்­க­ளின் குடும் பங்­க­ளுக்­கான நிவா­ர­ணம் ஒன்றை இலங்கை அர­சின் ஊடாக அல்­லது ஐ.நாவூ­டா­கக் கடந்த பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்க முடி­யும்.

இழப்­பீ­டும் இலங்கை அர­சும்
பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தமது போராட்­டங்­கள், நீதி விசா­ர­ணைக்­கான பன்­னாட்டு நீதி­ப­தி­க­ளின் தலை­யீடு என்­ப­வற்றை ஒரு புறத்­தில் கோரி வரும் சம நேரத்­தில் மறு புறத்­தில் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் அந்த மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைக் கொண்டு நடத்­தும்­பொ­ருட்டு இழப்­பீ­டு­க­ளைப் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்க வேண்­டும். அதா­வது காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­ட­றிந்து கொடுப்­ப­தில் சிர­மங்­கள் இருப்­ப­தால் இந்­தக் கொடுப்­ப­னவு கால வரை­ய­றை­யற்று இழு­ப­டும் அதே­வேளை ஐ.நாவின் பணத்­தைப்­பெற்று அதை வழங்­கி­யி­ருந்­தால் ஒரு குறிப்­பிட்ட கால எல்­லை­யு­டன் அது முடி­வு­ றுத்­தப்­ப­டல் வேண்­டும் என்ற கட்­டா­யத்தை இலங்கை அர­சின் மீது ஐ.நா. விதித்­தி­ருக்கும். இந்த நெருக்­க­டி­களை எல்­லாம் தமிழீழத் தலை­வர்­க­ளின் உத­வி­யு­டன் மிகத் தந்­தி­ர­மாக நகர்த்­தி­யுள்­ள­னர் சிங்­க­ளத் தலைவர்­கள்.

தமி­ழர்­க­ளின் பரி­தா­பம்
தமி­ழ­ருக்கு அரசு ஒன்று இல்லை என்­ப­தை­விட இருக்­கின்ற வச­தி­களை வைத்து என்­ன­வெல்­லாம் செய்ய முடி­யும் என்­ப­தைத் திட்­ட­மிட முடி­யாத நிலை­யும் தமிழர்கள் மத்தியில் இருக்­கி­றது. தமி­ழ­ரி­டம் காணப்­ப­டு­கின்ற முரண்­பா­டு­ க­ளும் அதி­க­மாக உள்­ளன. இந்த முரண் கார­ண­மா­கச் சிங்­கள ஆட்­சி­யா­ளர்­கள் உரிய ஆலோ­ச­னை­க­ளைத் தமி­ழ­ரி­டம் இருந்து பெறக்­கூ­டிய வாய்ப்­பு­களே கடந்த பத்து ஆண்­டு­க­ளாக இருந்து வந்­துள்­ளன. தமி­ழ­ரி­டம் ஆர்ப்­பாட்­டம், போராட்­டம் செய்­யும் வழமை மிக நீண்ட கால­மாவே இருந்து வரு­கி­றது. அத­னால் எதை­யும் சாதிக்க முடி­யாது என்­பதை அவர்­கள் சிந்­திப்­ப­ தில்லை. இந்த விவ­கா­ரத்­தைச் சட்­ட­பூர்­வ­மாக அல்­லது புத்தி பூர்­வ­மாக அணு­கி­னால் மாத்­தி­ரமே அது இலங்கை அர­சுக்­குப் பிரச்­சி­னை­யாக அமை­யும். அத்­தோடு காணா­ம­லாக்­கப்­பட்­டர்­க­ளின் விட­யத்தை எந்த அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மும் ஒப்­ப­டைக்­காது மக்­கள் தன்­னிச்­சை­யா­கச் செயற்­ப­டு­வ­தும் சிறந்­தது.

You might also like