கடற்­கரை வீதி­க­ளில் கழி­வு­களை வீசா­தீர்!!

இரு­பு­ற­மும் கடல்­சூழ்ந்­தி­ருக்­கின்ற வீதி­கள் குடா­நாட்­டில் பல இருக்­கின்­றன. மண்­டை­தீ­வுக்­கும் அப்­பால் நீள்­கின்­றது பண்­ணைக் கடற்­கரை வீதி. அதற்­க­டுத்து, வேல­ணை­யி­லி­ருந்து புங்­கு­டு­தீவுவரை கட­லூ­டான வீதி. காரை­ந­கர் – பொன்­னா­லைச் சந்­தி­யி­லி­ருந்து வலந்­த­லைச் சந்­தி­வ­ரைக்­கும் இருபுறமும் கடல் சூழ்ந்த வீதி. பூந­கரி – சங்­குப்­பிட்­டிக் கடற்­கரை வீதி, மற்­றும் ஆனை­யி ற­வுப்­ப­குதி வீதி எனக் குடாநாட்­டில் கடல் சூழ்ந்த வீதி­கள் பல காணப்படுகின்றன.

இவ்­வகை வீதி­கள் வழி­யா­கப் பய­ணிக்­கின்ற உள்­ளூர்ப் பய­ணி­கள் மற்­றும் தென்­ப­கு­திப் பய­ணி­கள் உட்­ப­டப் பல­ரும், தத்தமது பய­ணங்க ளின்போது ஊர்­தி­க­ளில் இருந்­த­வா­றும், அல்­லது இவ்­வி­டங்­க­ளில் இறங்கி அழகை இர­சித்து ஒளிப்­ப­டங்­கள் எடுத்­துச் சிறிது இளைப்­பா­றிச் செல்­லும்­போ­தும், தமது பய­ணத்­தின்­போது அருந்தி முடித்த வெற்­றுக் குடி­நீர்ப்­போத்­தல்­கள், மற்­றும் பொலித்­தீன் பைகள், பிஸ்­கட், யோக்­கட் எனத் தாம் பயன்­ப­டுத்திய சிற்றுண்டி வகைகளின் மேலுறைகள் அத்­த­னை­யை­யும் அவ்­வி­டங்­க­ளில் போட்­டு­விட்டு நகர்ந்து விடு­கி­றார்­கள்.

அவை காற்­றின் திசை­யில்­போய் கட­லில் விழுந்து கடலை மாசு­ப­டுத்­து­கின்­றன. தரைப்­ப­ரப்­பில் உள்ள வீதி­க­ளில் இத்­த­கைய குப்­பை­களை வீசும்­போது குப்­பைக்­கூ­டைக்­குள் வீசா­மல் தரை­யில் வீசி எறிந்­தால், பின்­னர் அதைத் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­க­ள்மூலம் ஒன்­று சேர்த்து அப்­பு­றப்­ப­டுத்த முடி­யும்.

ஆனால், கடலுக்கு அருகாகச் செல்லும் வீதி­க­ளில் குப்­பை­களை வீசி­னால், இத்­த­கைய எந்த வழி­மு­றை­யி­லும் அவற்­றைப் பிரித்­தெ­டுக்க முடி­யாது. காலத்­துக்­குக் காலம் மாறும் காற்­றுக்கு ஏற்ப மக்­கிப்­போ­காத அவை கட­லோடு அலைந்­து­கொண்டே இருக்­கும்.

ஆகை­யால் கடற்­கரை வீதி­க­ளில் பய­ணிக்­கும்­போது பய­ணி­கள் குறிப்­பா­கப் பொலித்­தீன், பிளாஸ்­ரிக் வகைக் குப்­பை­களை வீசு­வ­தைத் தவிர்க்க வேண்­டும். இந்­தச் செயல் அதி­க­ள­வில் மேற்கொள்ளப்படுவது பண்­ணைக் கடற்­கரை வீதி­யில் பொழு­து­போக்­கு­வ­தற்­குக் கூடு­கின்ற பல­ரா­லேயே.

அவ்­வி­டத்­தில் குப்­பைக் கூ­டு­கள் உரி­ய­வர்­க­ளால் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இருப்பினும் கடற்­கரை வீதி முழு­வ­தும் குப்­பை­களை வீசு­கின்­றார்­கள். ஒவ்­வொரு தனி­ம­னி­த­ரும் இந்த விட­யத்­தில் பொறுப்­பு­ணர்­வு­டன் நடந்­து­கொள்ள முயல வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகிறது.
ப.உதயகுமார், காரைநகர்

You might also like