கடற்கரையில் அடைக்கல அன்னைக்கு ஆலயம்!!

மன்னார் பேசாலை வெற்றிமாங்குடியிருப்பு 50 வீட்டுத் திட்டம் பிரதான வீதி வடக்கு கடற்கரை அண்டி பகுதியில் ‘அடைக்கல அன்னை சிற்றாலயம்’ அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் நிதி ஒதுக்கீடு மற்றும் பேசாலை கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் , மீனவர்களின் ஒத்துழைப்புடன் சிற்றாலய கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.பிரிமுஸ் சிறாய்வா, மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான கொன்சல் குளாஸ், திருமதி கிறிஸ்டி சின்னராணி குரூஸ் உள்ளிட்டவர்கள் அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like