கட­லட்டை பிடிப்­போரைதடுப்­பது சரி­யல்­ல­வாம்!

மனித உரி­மை­கள் ஆணைக்­குழுமாவட்­டச் செய­ல­கத்­துக்­குக் கடி­தம்

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் கட­லட்டை பிடிப்­ப­வர்­க­ளைத் தடை செய்­வது தொடர்­பாக மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னிக்க முடி­யாது. அவர்­கள் தொழில் செய்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்­டும் என்று யாழ்ப்­பாண மாவட்ட மனித உரிமை ஆணைக்­கு­ழு­வின் இணைப்­பா­ளர் த.கன­க­ராஜ் யாழ்ப்­பா­ணம் மாவட்­டச் செய­ல­கத்­துக்கு எழுத்­தில் அறி­வித்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்டு மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாதிக்­கும் வகை­யில் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளைத் தடை செய்ய வேண்­டும் என்று குடா­நாட்டு மீன­வர்­கள் நீண்­ட­கா­ல­மாக கோரிக்கை விடுத்­து­வ­ரும் நிலை­யில் குடா­நாட்­டில் கட­லட்டை பிடித்த தென்­ப­குதி மீன­வர்­க­ளைக் குடா­நாட்­டி­லி­ருந்­தும் வெளி­யேற்­றும் முயற்­சி­கள் எடுக்­கப்­பட்­டன. தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து வந்து கட­லட்டை பிடித்த நூற்­றுக் கணக்­கான மீன­வர்­க­ளும் ஒரு சில உள்­ளூர் மீன­வர்­க­ளும் கட­லட்டை பிடிப்­ப­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

இது தொடர்­பாக உள்­ளூர் மீன­வர் ஒரு­வர் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார். அந்த முறைப்­பாட்டை விசா­ர­ணைக்கு எடுத்த யாழ்ப்­பாண மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் இணைப்­பா­ளர், மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­யை­யும் அழைத்­தி­ருந்­தார். விசா­ரணை முடி­வில் மேற்­கண்ட விட­யத்தை எழுத்­தில் அறி­வித்­துள்­ளார்.

இதன் கார­ண­மாக மீண்­டும் குடா­நாட்டு மீன­வர்­க­ளின் பொரு­ளா­தா­ரம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தாக சில மீன­வர்­கள் அச்­சம் தெரி­விக்­கின்­ற­னர்.

இது தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்­தி­ர­னைத் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, மனித உரிமை ஆணைக்­குழு இணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யும் அல்­லது ஆலோ­சனை வழங்­கும் அமைப்பே அன்றி இவர்­க­ளுக்­குக் கட்­ட­ளை­யி­டும் அதி­கா­ரம் கிடை­யாது. அத­னால் அவர்­க­ளின் கூற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்ற கட்­டா­யம் கிடை­யாது – என்­றார்.

You might also like