கடும் காற்றால்- கடற்றொழிலாளர்கள் பாதிப்பு!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடந்த மூன்று நாள்களாக வீசிய கடும் காற்­றால் கடற்­றொ­ழில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மீன­வர்­கள் தெரி­வித்தனர்.

கடும் காற்­றுக் கார­ண­மாக கொக்­கி­ளாய் தொடக்­கம் செம்­மலை, அளம்­பில், நாயாறு, தீர்த்­தக்­கரை, கள்­ளப்­பாடு, முல்­லைத்­தீவு, முள்­ளி­வாய்க்­கால், வலை­ஞர்­ம­டம், பொக்­கணை, மாத்­த­ளன் வரை­யான கரை­யோ­ரங்­க­ளில் உள்ள கடற்­றொ­ழி­லா­ளர்­கள் தொழில் நட­வ­டிக்­கைக்­குச் செல்­ல­வில்லை என்று மீன­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இவ்­வா­றான நிலை­யி­லும் வெளி­மா­வட்­டங்­க­ளைச் சேர்ந்த மீன­வர்­கள் நடுக்­க­ட­லில் சட்­ட­வி­ரோத கடற்­றொ­ழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டனர் என்று மீன­வர்­கள் தெரி­வித்த­னர்.

வெளிச்­சம் பாய்ச்சி மற்­றும் தடை­செய்­யப்­பட்ட மீன்­பிடி வலை­க­ளைப் பயன்­ப­டுத்தி கடற்­றொ­ழில் நட­வ­டிக்­கை­யில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இதே­வேளை, வடக்குக் கடற்­க­ரை­யோரத்­தில் காற்று வீசக்­கூ­டும் என்று வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் எச்­ச­ரித்­துள்­ளது. இத­னால் வடக்­குக் கரை­யோ­ரங்­க­ளில் மீன­வர்­கள் தொழி­லுக்­குச் செல்­ல­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டுகின்­றது.

You might also like