side Add

கம்பியால் பிணைக்கப்பட்ட -எலும்புக் கூட்டால் சர்ச்சை!!

மன்­னார் புதை­குழி அகழ்­வில் நேற்­றுத் திடீர் திருப்­பம் ஏற்­பட்­டுள்­ளது.

இரும்­புக் கம்­பி­யால் கால்­கள் பிணைக்­கப்­பட்ட நிலை­யில் எலும்­புக் கூடு மீட்­கப்­பட்­டுள்­ளது.

மன்­னார் மனி­தப் புதை­குழி அகழ்­வுப் பணி 112ஆவது நாளாக நேற்று வியா­ழக் கிழமை தொடர்ந்­தது. சட்ட வைத்­திய அதி­காரி சமிந்த ராஜ­பக்ச தலை­மை­யில் மீட்பு பணி­கள் இடம்­பெற்­றன.

இதன்­போது இரண்டு கால்­க­ளும் இறுக்­கமாக இரும்­புக் கம்­பி­யால் பிணைக்­கப்­பட்ட நிலை­யில் மனித எச்­சம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இது பல்­வேறு அச்­சங்­க­ளைத் தோற்­று­வித்­துள்­ளது. சித்­தி­ர­வதை செய்­யப்­பட்ட பின்­னர் கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உடல்­க­ளாக இருக்­குமோ என்று சந்­தே­கம் எழுப்­பப்­பட்­டுள்­ளது.

இது­வரை 256 மனித எச்­சங்­கள் முழு­மை­யாக அடை­ய◌ா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­து­டன், 250 மனித எச்­சங்­கள் அகற்­றப்­பட்டு நீதி­மன்­றப் பாது­காப்­பில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

You might also like