கராத்தே,மல்யுத்த போட்டிகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை முதலிடம்!!

அகில இலங்கை ரீதியாக சிறைச்சாலைகளுக்கு இடையே இடம்பெற்ற கராத்தே,மல்யுத்த போட்டிகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை முதல் முறையாக முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

தேசிய ரீதியாக அனைத்து சிறைச்சாலைகளுக்கும் இடையில் கடந்த மாதம் 18,19 ஆம் திகதிகளில் கொழும்பில் போட்டிகள் இடம்பெற்றன.

இந்தப் போட்டிகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் 20 பதக்கங்களையும், மல்யுத்த வீரர்கள் 9 பதக்கங்களையும் பெற்றனர்.

யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் அத்தியாட்ச்கர் என்.மரில் லோவின் வழிகாட்டலில் பிரதான ஜெயிலர் என்.பிரபாகரனால் வழங்கப்பட்டன.

You might also like