side Add

கலங்­கிய குட்­டை­யின் நிலை­யில் தென்­ப­குதி அர­சி­யல்!!

கூட்டு அர­சின் ஆயுட்­கா­லம் அடுத்த ஆண்­டு­டன் முடி­வ­டை­ய­வுள்ள நிலை­யில், அர­சுக்­குள் பிளவை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­கள் தொடர்ந்து இடம்­பெற்று வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.
அடுத்த தமிழ், சிங்­கள புது­வ­ரு­டப் பிறப்­புக்கு முன்­ப­தாக மகிந்த ராஜ­பக்­சவை, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே தலைமை அமைச்­ச­ராக நிய­மிப்­பா­ரெ­ன­வும், சிறீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தனி­யாக ஆட்­சியை அமைக்­கு­மெ­ன­வும் பொது எதி­ர­ணி­யைச் சேர்ந்த முக்­கிய பிர­மு­கர் ஒரு­வர் தெரி­வித்­தி­ருக்­கி­றார். பொது எதி­ர­ணி­யி­னர் இவ்­வாறு கூறி­வ­ரு­வது புதி­ய­தொரு விட­ய­மெ­னக் கூற­மு­டி­யாது. வழக்­க­மா­ன­தொரு கருத்து வெளிப்­பாடே அது.

தமது எண்­ணப்­படி நாட்­டின் நிர்­வா­கத்தை
முன்­னெ­டுத்­த­வர் முன்­னாள்  அரச தலை­வர் மகிந்த
அர­ச­த­லை­வ­ரா­கச் சுமார் 10ஆண்­டு­கள் பதவி வகித்­த­வர் மகிந்த ராஜ­பக்ச. தமது ஆட்­சிக் காலத்­தில் ஓர் அர­ச­ரைப் போன்றே அவர் நடந்து கொண்­டார். அவ­ரது சொல்­லுக்கு மறு­வார்த்தை கூறு­வ­தற்கு அந்­தக் கால­கட்­டத்­தில் எவ­ருக்­குமே துணிவு இருந்­த­தில்லை.அவ­ருக்கு எதி­ராக நடந்து கொண்­டால் என்ன நடக்­கும் என்­பது அவர்­க­ளுக்கு நன்கு தெரி­யும். அவ­ரின் கீழ் ஓர் அமைச்­ச­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர்­தான் தற்­போ­தைய அர­ச­த­லை­வர். இந்த நிலை­யில் அவ­ருக்­குக் கீழ் பணி­யாற்­று­வ­தற்கு மகிந்த முன்­வ­ரு­வதை ஏனோ ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. ஆனால் மகிந்­த­வைச் சார்ந்­த­வர்­கள் இதைச் சிறி­து­கூட எண்­ணிப் பார்ப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

இதை­விட, மகிந்த மிகப்­பெ­ரிய அள­வில் ஊழல் மோச­டி­க­ளில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. அதை­விட, அவ­ரது சகோ­த­ரர்­கள் மீதும் இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. பிர­பல விளை­யாட்டு வீரர் தாஜூ­தீ­னின் சாவு தொடர்­பாக மகிந்­த­வின் குடும்ப உறுப்­பி­னர்­கள் சிலர் மீது சந்­தே­கம் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் ‘நல்­லாட்சி’ என்று தன்­னைத்­தானே கூறிக்­கொள்­ளும், முது­கெ­லும்பு இல்­லாத இன்­றைய கூட்டு அர­சி­னால் இவர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் எத­னை­யும் எடுக்க முடி­ய­வில்லை. கூட்டு அரசு சக­லத்­துக்­கும் அஞ்சி அஞ்­சியே தனது காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றது. மகிந்த தரப்­புக்கு இது பெரும் வாய்ப்­பா­கவே அமைந்­து­விட்­டது.

குள்ள நரித்தன  அரசியலுக்குப்
பெயர் பெற்­ற­வர் ரணில்
ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தமக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளை­யெல்­லாம் அமை­தி­யா­கவே அவ­தா­னித்­துக் கொண்­டி­ருப்­ப­தை­யும் காண முடி­கின்­றது. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அர­ச­த­லை­வர் பத­வி­யில் அமர்த்­து­வ­தில் முக்­கிய பங்கு வகித்த அவர், தமது பத­வி­யைக் காப்­பாற்­று­வ­தற்­கான வியூ­கங்­களை வகுக்­கா­மல் சும்மா இருக்­க­மாட்­டார் என்­பதை உறு­தி­யா­கக் கூற­மு­டி­யும். அர­சி­யல் குள்ள நரித்­த­னத்­தில் கை தேர்ந்த ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­ன­வின் மரு­ம­கன் முறை­யான ரணி­லும், அமை­தி­யாக இருந்து குள்ள நரித்­த­ன­மா­கக் காய்­களை நகர்த்­து­வ­தில் வல்­ல­வர். புலி­க­ளின் துணைத் தலை­வ­ரா­க­வும், சிறந்த தள­ப­தி­க­ளில் ஒரு­வ­ரா­க­வும் திகழ்ந்த கரு­ணாவை புலி­கள் இயக்­கத்­தி­லி­ருந்து பிரித்­தெ­டுப்­ப­தற்கு அவ­ரது இந்­தக் குள்­ள­ந­ரித் தந்­தி­ரம் உத­வி­யுள்­ளது. ஆனால் இதுவே புலி­க­ளுக்கு அவர்­மீது கோபத்தை ஏற்­ப­டுத்த 2005ஆம் ஆண்டு இடம்­பெற்ற அர­ச­த­லை­வர் தேர்­த­லில் ரணில் தமது வெற்றி வாய்ப்பை இழப்­ப­தற்­குக் கார­ண­மா­க­வும் அமைந்­து­விட்­டது. தோல்­வி­க­ளைக் கண்டு துவ­ளா­த­வர் ஒரு­வர் இந்த நாட்­டில் இருக்­கி­றார் என்­றால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே அதற்கு உதா­ர­ண­மா­கக் குறிப்­பிட இய­லும். அந்த அள­வுக்கு தமது மன­தைத் திடப்­ப­டுத்­திக் கொள்­வ­தில் அவர் வல்­ல­வர்.

அடுத்த அரச தலை­வ­ருக்­கான
தேர்­த­லைக் குறி­வைத்­துக்
காய் நகர்த்­தும் ரணில்
தற்­போது அடுத்த அரச தலை­வர் தேர்­த­லைக் கருத்­தில் கொண்டு ரணில் செயற்­ப­டு­வ­தா­கவே நினைக்­கத் தோன்­று­கின்­றது. தேர்­த­லில் வெற்­றி­பெற வேண்­டு­மா­னால், தமி­ழர்­க­ளின் வாக்­கு­கள் மிக அவ­சி­ய­மா­னவை என்­பதை உணர்ந்து கொண்ட ரணில், அடிக்­கடி வட­ப­கு­திக்கு வருகை தரு­கின்­றார். நிகழ்ச்­சி­கள் பல­வற்­றில் கலந்து கொள்­கின்­றார். அது­மட்­டு­மல்­லாது, வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பா­க­வும் பேசு­கின்­றார். பலாலி வானூர்தி நிலை­யத்தை சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துக்கு இயங்க வைப்­பது தொடர்­பா­கக் கவ­னம் செலுத்­து­கின்­றார். மகிந்­த­வின் பர­ம­வை­ரி­யும், ரணி­லுக்கு வேண்­டி­ய­வ­ரு­மான சந்­தி­ரிகா அம்­மை­யார் 2020க்குள் தமி­ழர்­க­ளுக்­குத் தீர்வு கிடைத்­து­வி­டு­மெ­னக் கூறி­யுள்­ளார். இவற்­றை­யெல்­லாம் பார்க்­கும்­போது இவர்­க­ளின் உள்­நோக்­கம் புலப்­ப­டு­கின்­றது.

அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த போட்­டி­யிட முடி­யாத நிலை தோன்­றி­னால், மகிந்த குடும்­பத்­துக்கு வௌியி­லி­ருந்தே ஒரு­வர் போட்­டி­யி­டு­வா­ரென வௌிவந்த அறி­விப்பு மகிந்­த­வுக்கு எதி­ரா­ன­வர்­க­ளுக்கு உற்­சா­கத்தை அளித்­தி­ருக்­கக்­கூ­டும்.

தென்­ப­கு­தி­யின் அர­சி­யல் நில­வ­ரங்­கள் கலங்­கிய குட்­டை­யைப் போன்று காட்­சி­ய­ளிக்­கின்­றது. இவற்­றுக்­குத் தௌிவு ஏற்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றி­க­ளை­யும் காணோம். இதை அமை­தி­யாக இருந்து பார்ப்ப­தைத் தவிர தமிழ்­மக்­க­ளுக்கு வேறு மார்க்­கம் எது­வும் கிடை­யாது.

You might also like