கலைஞர்களின் விவரங்களை- திரட்ட ஏற்பாடு!!

0 44

நடுவண் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடு முழுவதும் உள்ள கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி தரவுத் தளத்தினை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் கலைஞர்கள் தமது பிரதேச கலாசார அலுவலர் அல்லது கலாசார அபிவிருத்தி உதவியாளர் அல்லது கலாசார அபிவிருத்தி அலுவலர் ஆகியோரிடம் உரிய படிவத்தினைப் பெற்று ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு அறிவித்துள்ளனர்.

தென்மராட்சி பிரதேசத்தில் வாழும் கலைஞர்கள் பிரதேச கலாசார அலுவலக பிரிவில் உரிய படிவத்தினைப் பெற்று தகவல்களை வழங்குமாறு பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு அறிவித்துள்ளார்.

You might also like