காணா­மற்­போ­னோ­ரின் உற­வி­னர்­கள் சிந்­திக்­க­வேண்­டும்

கொழும்பு அர­சால் அமைக்­கப்­பட்ட காணா­மற்­போ­ன­வர்­கள் தொடர்­பான அலு­வ­ல­கம் வேண்­டாம் என்று போரில் காணா­மற்­போ­ன­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தரப்­பில் இருந்து தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தல்­கள் வந்த வண்­ணம் இருக்­கின்­றன. காணா­மற்­போ­ன­வர்­கள் தொடர்­பில் பன்­னாட்டு விசா­ரணை ஒன்றே தேவை என்­றும், கொழும்­பின் அலு­வ­ல­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கப்­போ­வ­தில்லை என்­றும் அவர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

காணா­மற்­போ­ன­வர்­க­ளில் எவ­ரும் உயி­ரு­டன் இல்லை என்று அறி­வித்­து­விட்ட பின்­னர், அரசு ஏன் காணா­மற்­போ­ன­வர்­கள் தொடர்­பான அலு­வ­ல­கம் ஒன்றை அமைத்­தி­ருக்­கி­றது, எனவே அதில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை என்று உற­வி­னர்­கள் குரல் எழுப்­பு­கின்­ற­னர்.

அவர்­க­ளின் கோப­மும் கவ­லை­யும் புரிந்­து­ கொள்­ளக்­கூ­டி­ய­னவே. நீண்ட கால­மா­கத் தமது உற­வு­க­ளைத் தேடிப் போரா­டம் நடத்தி வரு­ப­ வர்­கள் அர­சி­யல்­வா­தி­க­ளின் கருத்­துக்­க­ளா­லும், நடத்­தை­க­ளா­லும் சீற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­ற­னர் என்­பது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­கதே!

காணா­மற்­போ­ன­வர்­க­ளில் எவ­ரும் உயி­ரு­டன் சிறை­க­ளிலோ, இர­க­சி­யத் தடுப்பு முகாம்­க­ளிலோ இல்லை என்று அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் பகி­ரங்­க­மாக அறி­வித்­த­தைத் தொடர்ந்தே காணா­மற்­போ­ன­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தமது தரப்­பி­லி­ருந்து இத்­த­கைய வாதங்­களை முன்­வைக்­கி­றார்­கள்.

தமது பிள்­ளை­கள், கண­வர்மார், சகோ­த­ரர்­கள் உயி­ரு­டன் இல்லை என்று முன்­கூட்­டியே அறி­வித்த பின்­னர், அவர்­க­ளைத் தேடிக் கண்­ட­றி­வ­தற்­கான பணி­ய­கம் ஒன்று அமைக்­கப்­ப­டு­வது ஏமாற்று வேலை என்று அவர்­கள் நம்­பு­கி­றார்­கள். பன்­னாட்­டுச் சமூ­கத்­தைத் திருப்­திப்­ப­ டுத்­தும் ஒரு கண்­து­டைப்­பா­கவே இந்­த­அ­ரசு பணி­ய­கத்தை அமைத்­தி­ருக்­கி­றது என்­பது அவர்­க­ளது அங்­க­லாய்ப்­பாக இருக்­கின்­றது. அதி­லும் நியா­யம் இருக்­கவே செய்­கின்­றது.

நீண்ட கால­மா­கவே இலங்­கை­யின் உள்­நாட்டு சட்­டம் ஒழுங்கு விசா­ர­ணைப் பொறி­முறை மீதும் மற்றும் நீதிப் பொறி­மு­றை­யின் செயற்­பா­டு­க­ளால் அவற்­றின் மீது, தமிழ் மக்­கள் நம்­பிக்­கை­யி­ழந்து இருக்­கி­றார்­கள் என்­பது கண்­கூடு. அந்த நம்­பிக்­கையை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பும் வகை­யில் போர் முடி­வ­டைந்த கடந்த சுமார் 10 ஆண்­டு­க­ளில்­கூட பெரி­தாக எது­வும் நடந்து­வி­ட­வில்லை.

அண்­மை­யில்­கூட காணா­மற்­போ­ன­வர்­கள் தொடர்­பில் நீதி­மன்­றத்தை நாடி­ய­வர்­க­ளின் வழக்­கு­கள், அவர்­க­ளைக் கடத்­திச் சென்­ற­வர்­கள் என்று கூறப்­ப­டு­ப­வர்­கள் குறித்து போதிய சான்­றா­தா­ரங்­கள் இல்­லா­மை­யால் விசா­ரிக்­கப்­ப­ட­மு­டி­யா­மல் இருப்­ப­தா­கக்­கூ­றித் தள்­ளு­படி செய்­யப்­பட்­டு­விட்­டன.

இது­போன்ற நட­வ­டிக்­கை­கள் மக்­க­ ளின் அவ­நம்­பிக்­கை­க­ளையே தொடர்ந்­தும் வளர்த்து வரும் நிலை­ யில், பன்­னாட்டு விசா­ரணை ஒன்றே நீதி­யா­ன­தா­க­வும் நியா­ய­மா­ன­ தா­க­வும் நடக்­கும் என்று மக்­கள் எண்­ணு­வ­தி­லும் தவ­றே­தும் இல்லை.

போரில் ஈடு­பட்ட படை­கள் தவறு செய்­ய­வில்லை என்­றும், போரில் ஈடு­பட்­ட­வர்­கள் நாட்­டின் கதா­நா­ய­கர்­கள், அவர்­கள் எந்­தச் சூழ்­நி­லை­யி­லும் பாது­காக்­கப்­ப­டு­வார்­கள் என்­றும், கொழும்பு அர­சின் தலை­வர்­கள் வெளிப்­ப­டை­யா­கவே பேசி வரும் நிலை­யில், மக்­கள் பன்­னாட்டு விசா­ரணை ஒன்­றின் மீது மட்­டுமே நம்­பிக்கை கொள்­வ­தும் தவிர்க்க முடி­யா­ததே.

இப்­படி எல்லா வகை­யான நியா­யங்­க­ளும் காணா­மற்­போ­ன­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளுக்கு இருந்­தா­லும், காணா­மற்­போ­னோர் தொடர்­பான விசா­ர­ணைப் பணி­ய­கத்தை அடி­யோடு மறுப்­ப­தும் அதற்கு ஒத்­து­ழைப்­புத் தர­மாட்­டோம் என்­ப­தும் புத்­தி­சா­லித்­த­ன­மான நட­வ­டிக்­கை­க­ளா­கத் தெரி­ய­வில்லை.

இந்­தப் பணி­ய­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தன் மூலம் பன்­னாட்டு விசா­ரணை ஒன்று வேண்­டும் என்­கிற அவர்­க­ளது கோரிக்கை வலு­வி­ழந்து போய்­வி­டாது. அதை நோக்­கிய அவர்­க­ளது போராட்­டத்தை அவர்­கள் நிறுத்த வேண்­டிய அவ­சி­ய­மும் இல்லை.

அதே­நே­ரம், காணா­மற்­போ­னோர் தொடர்­பான பணி­ய­கத்தை முற்­றாக நிரா­க­ரித்­து­விட்­டால் ,குறைந்­த­பட்­சம் காணா­மற்­போ­ன­வர்­கள் தொடர்­பான முறை­யான ஆவ­ணப்­ப­டுத்­தல்­கூட இல்­லா­மல் போய்­வி­டும். ஏற்­க­னவே போர் முடிந்து 9 ஆண்­டு­கள் கடந்­து­விட்ட நிலை­யில் பல­ரின் ஞாப­கங்­கள் மங்­கிப்­போ­கத் தொடங்­கி­விட்­டன.

குற்­ற­வி­சா­ர­ணைக்­குத் தேவை­யான நுண்­ணிய தக­வல்­களை வழங்­க­மு­டி­யாத நிலைக்கு அனை­வ­ருமே வந்­து­விட்­ட­னர். இப்­போது சம்­ப­வங்­கள் சில விம்­பங்­க­ளா­கவே ஞாபக இடுக்­கு­க­ளில் பதுங்­கிக்­கொண்­டுள்ள நிலை­யில், இப்­போ­தும் அவற்றை ஆவ­ணப்­ப­டுத்த மறுப்­ப­து சரியெனப்படவில்லை.

இறு­திப்போரின்­போது காணா­மற்­போ­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை என்ன என்­பது தெரி­ய­வில்லை. குடும்­பம் குடும்­ப­மா­கக் காணா­மற்­போ­ன­வர்­க­ளில் எத்­தனை பேர் இனி­வ­ரும் பதி­வு­க­ளுக்­குள் வரப்­போ­கி­றார்­கள் என்­ப­தும் நிச்­ச­ய­மில்லை.

இவ்­வா­றான சூழ்­நி­லை­யில், ஒரு ஆவ­ண­மாக்­க­லாக நினைத்து காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­திற்கு ஒத்­து­ழைப்­பது குறித்து காணா­மற்­போ­னோ­ரின் உற­வி­னர்­கள் சிந்­தித்­துப் பார்க்­க­வேண்­டும். பன்­னாட்டு விசா­ர­ணை­தான் வேண்­டும் என்­கிற தமது கோரிக்­கை­யை­யும் போராட்­டத்­தை­யும் கைவி­டா­மல் தொடர்ந்­து­கொண்டே, அதற்கு வலுச் சேர்க்­கும் புள்­ளி­வி­வர மற்­றும் ஆவ­ணத் திரட்­ட­லாக காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது குறித்­தும் அவர்­கள் சிந்­திக்­க­வேண்­டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close