side Add

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­யக விசா­ர­ணையை எம் ­மீது திணிக்­கின்­றது அரசு- உற­வி­னர்­கள் கொதிப்பு!!

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் மீது நம்­பிக்கை இல்லை. அது எமக்கு வேண்­டாம். எமக்­குப் பன்­னாட்டு விசா­ர­ணையே வேண்­டும். இந்த அரசு காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­யக விசா­ர­ணையை எம்­மீது திணிக்­கின்­றது.

இவ்­வாறு கொதிப்­பு­டன் தெரி­வித்­த­னர் முல்­லைத் தீவு மற்­றும் திரு­கோ­ண­ ம­லை­யைச் சேர்ந்த காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள்.

காணா­மல் ஆக் கப்­பட்­டோர் பணி­கத்­தால் இன்று முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளி­டம் கருத்­துக்­க­ளைக் கேட்­ட­றி­யவே பணி­ய­கத்­தின் உறுப்­பி­னர்­கள் செல்­கின்­ற­னர்.

முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­தின் முன்­பா­கத் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வ­ரும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளி­டம் இது தொடர்­பில் கேட்­ட­போதே அவர்­கள் இவ்­வாறு தெரி­வித்­த­னர்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் எவ­ரும் இல்லை என்று கூறும் அரசு ஏன் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்தை அமைத்­துள்­ளது? என்­றும் அவர்­கள் கேள்வி எழுப்­பி­னர். எமது உற­வு­களை மீட்­டுத் தர வேண்­டும் என்று கோரி நாங்­கள் போராடி வரு­கின்­றோம்.

எம்­மைப் புறக்­க­ணிப்பு எங்கோ சந்­திப்­புக்கு வரு­மாறு அழைக்­கின்­ற­னர். பேருந்து ஒழுங்கு செய்­கின்­றார்­கள். இந்­தப் பணி­ய­கத்­தின் மீது மக்­கள் நம்­பிக்கை கொண்­டுள்­ள­னர் என்று பரப்­பு­ரைச செய்­வ­தற்­கா­கவே இந்த நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன என்றே நாம் கரு­து­கின்­றோம்.

இந்­தப் பணி­ய­கத்தை நாம் முற்­றாக நிரா­க­ரிக்­கின்­றோம். எமக்­குப் பன்­னாட்டு விசா­ர­ணையே தேவை. இன்று நடக்­கும் கலந்­து­ரை­யா­ட­லைப் புறக்­க­ணிக்­கின்­றோம். 450 நாள்­க­ளாக வெயி­லி­லும், மழை­யி­லும் போரா­டும் எங்­களை இந்த அரசு ஏமாற்­று­கின்­றது என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

You might also like
X