காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வினர்களின் மற்றொரு குற்­றச்­சாட்டு!!

எமது பிள்­ளை­களை வைத்து இன்று பணம் திரட்­டும் செயற்­பா­டு­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த செயற்­பாட்டை சில அமைப்­புக்­க­ளும் முன்­னெ­டுக்­கின்­றன. அதே­போன்று தற்­போது தனி நபர்­க­ளும் ஆரம்­பித்­துள்­ள­னர் – என்று தெரி­வித்­த­னர் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள்.

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள்  கிளி­நொச்­சி­யில் ஊட­கச் சந்­திப்­பொன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.

குறித்த ஊடக சந்­திப்பு வடக்கு– கிழக்கு வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­க­ளின் சங்­கத்­தின் தலை­வி­யின் இல்­லத்­தில் நேற்­று  இடம்­பெற்­றது.

இதன்­போது வடக்கு கிழக்கு வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­க­ளின் சங்­கத்­தின் தலைவி ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­தார். அதன்­போதே இவ்­வாறு குறிப்­பிட்­டார் அவர்.

எமது பிள்­ளை­களை வைத்து இன்று பணம் திரட்­டும் செயற்­பா­டு­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த செயற்­பாட்டை சில அமைப்­புக்­க­ளும் முன்­னெ­டுக்­கின்­றன. அதே­போன்று தற்­போது தனி நபர்­க­ளும் ஆரம்­பித்­துள்­ள­னர். கிளி­நொச்சி வன்­னே­ரி­கு­ளம் பகு­தியை சேர்ந்த தாயொ­ரு­வ­ரின் பிள்­ளை­யின் புகைப்­ப­டத்தை வைத்து இரு­வர் நிதி சேக­ரித்­துள்­ள­னர். குறித்த நபர் படை­யி­ன­ரின் கட்­டுப்­பாட்­டிற்­குள் வந்­த­போது குறித்த ஒளிப்­ப­டம் அடங்­க­லான பல ஆவ­ணங்­க­ளோடு சென்­றி­ருந்­தார். இந்த ஒளிப்­ப­டம் எவ்­வாறு இவர்­க­ளுக்­குக் கிடைத்­தது. இந்த உண்­மையை அர­சி­யல் வாதி­க­ளும், எமது தமிழ் தலை­மை­க­ளும் உண­ர­வேண்­டும் – என்­றார்.

குறித்த ஊடக சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த கிளி­நொச்சி வன்­னே­ரிக்­கு­ளம் பகு­தி­யைச் சேர்ந்த இந்­தி­ரா­தேவி என்ற தாயார் தெரி­வித்­த­தா­வது:

எனது மக­ளான ஜெய­மதி 2009ஆம் ஆண்டு இறு­திப்­போர் நிறைவு பெற்­ற­போது இரா­ணு­வத்­தி­டம் சர­ண­டைந்­தார். அன்­று­மு­தல் அவ­ரைத் தேடி­வ­ரு­கின்­றோம். இந்த நிலை­யில் கடந்த மாதம் 5ஆம் திகதி எனது மக­ளின் ஒளிப்­ப­டத்­து­டன் ஒரு­வர் எமது பிர­தே­சத்­தில் நிதி சேக­ரிப்­பில் ஈடு­பட்­டி­ருந்­தார். அவரை நாம் அக்­க­ரா­யன் பொலி­சா­ரி­டம் ஒப்­ப­டைத்­தோம். எனது மகள் இந்த புகைப்­ப­டம் மற்­றும் ஏனைய புகைப்­ப­டங்­கள் உள்­ளிட்ட பல ஆவ­ணங்­க­ளு­டன் இரா­ணுவ கட்­டுப்­பாட்­டிற்­குள் சென்­றி­ருந்­தார். அவரை அன்­று­மு­தல் நாம் காணா­த­வர்­க­ளாக போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றோம். எவ்­வாறு குறித்த நப­ருக்கு அந்த ஒளிப்­ப­டம் கிடைத்­தது? – என்­றார்.

You might also like