காத்திருக்கின்ற கிராமப் பாடசாலைகள்!!

அண்­மை­யில் வெளி­யா­கித் தற்­போது திரை­யி­டப்­பட்டு வரும் சிங்­க­ளத் திரைப்­ப­ட­ மொன்­றைக் கடந்­த­வார இறு­தி­யில் திரைய­ரங் கில் காண்­ப­தற்­கா­கச் சென்­றி­ருந்­தேன். ‘தால’ என்ற அந்­தத் திரைப்­ப­டத்­தின் கதை கிரா­மி­யப் பாட­சாலை ஒன்­றுக்கு நிய­ம­னம் பெற்று வரும் நக­ரத்து ஆசி­ரி­யர் அல்­லது ஆசி­ரி­யர்­க­ளைப் பற்­றி­ய­தா­கும். திரைக்­கதை அசேல என்­கிற ஆசா­னைச் சுற்­றி­ய­தாக அமைந்­தா­லும் கதையை நகர்த்தி செல்­வது என்­னவோ அந்­தக் கிரா­மி­யப் பாட­சா­லை­யின் மாண­வச்­செல்­வங்­கள் தாம். குறித்த பாட­சா­லைக்கு நிய­ம­னம் பெற்று வரு­கின்ற நகர்ப்­புற ஆசி­ரி­யர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­கள், உட­னுக்­கு­ட­னேயே மாற்­றம் எடுத்­துக்­கொண்டு ஓடி விடு­கி­றார்­கள். இந்த நிலை­யில் வர­மாக வந்து நிலைக்­கும் அசேல ஆசி­ரி­ய­ருக்­கும் அந்­தப் பள்­ளிச் சிறா­ருக்­கு­மான ஊடாட்­டமே காட்­சி­க­ளா­கத் திரை­யில் விரி­கி­றது.

கதைக் கரு­வாக்­கிய
சிங்­க­ளச் சினிமா

கட்­ட­டங்­கள் உட்­பட்­டப் பௌதீக வளங்­கள், இல­வ­சப் பாட­நூல், சீருடை போன்­ற­வற்­றைக் கொண்­ட­மைந்­த­தாக இலங்­கை­யின் இல­வ­சக்­கல்­வித்­துறை காணப்­பட்­டா­லும், ஆசி­ரி­யர் என்­னும் மனித வளத்­தைக் கிராம மற்­றும் தோட்­டப்­பு­றப் பகு­தி­க­ளுக்­குக் கொண்டு செல்­வ­தில் உள்ள கஷ்­டம் முழு இலங்­கை­யும் அனு­ப­விக்­கும் துன்­பங்­க­ளில் ஒன்­றா­கும். இந்த விட­யத்­தைக் கதைக்­க­ரு­வா­கக் கொண்டு சில சிங்­க­ளத் திரைப்­ப­டங்­கள் வெளி­வந்­து­விட்­டன. 2014ஆம் ஆண்­டில் வெளி­வந்த ‘ஹோ கான பொக்­குன’ கடந்த ஆண்­டில் வெளி­வந்த ‘கோல்’ ஆகிய திரைப்­ப­டங்­கள் கிரா­மத்­துப் பாட­சா­லைக்கு நிய­ம­னம் பெற்று நுழை­கின்ற ஆசி­ரி­யர்­கள் நிகழ்த்­தக்­கூ­டிய அற்­பு­தங்­க­ளைப் படம்­பி­டித்­துக் காட்­டி­ய­வை­யா­கும். ஹோ கான பொக்­குன -– தூரப்­பி­ர­தேச கிரா­மப் பாட­சாலை ஒன்­றுக்கு நிய­ம­னம் பெற்­று­வ­ரும் ஆசி­ரியை ஒரு­வரை பற்­றி­ய­தென்­றால், கோல் -– தூரப்­பி­ர­தேச கிரா­மி­யப் பாட­சாலை ஒன்­றுக்கு வந்து அமை­யும் விளை­யாட்டு ஆசி­ரி­யர் பற்­றி­ய­தா­கும்.

கிரா­மத்­துச் சூழ­லு­டன் ஒன்­றித்­துப் போய்­வி­டு­கின்ற ஆசி­ரி­யர் ஒரு­வர் கிரா­மத்து மாண­வச் செல்­வங்­க­ளுக்கு வாய்த்­து­விட்­டால் அவர்­களை எவ்­வா­றெல்­லாம் முன்­னே­றச் செய்­ய­லாம், சந்­தோ­ஷப்­ப­டுத்­த­லாம் என்­பதே இந்­தத் திரைப்­ப­டங்­க­ளின் கதைச்­சாறு.

இலங்­கைக் கிரா­மங்­க­ளில் குவிந்து கிடக்­கின்ற கொள்ளை அழ­கை­யும், ரம்­மி­ய­மான சூழ­லை­யும் கதை நிக­ழும் தள­மா­கக்­கொண்டே வெளி­வ­ரு­கின்­றன இந்த வகைத் திரைப்­ப­டங்­கள். இர­சி­கர்­க­ளி­டத்­தில் வர­வேற்­பை­யும், வர்த்­தக ரீதி­யில் வெற்­றி­யை­யும் விரு­து­க­ளை­யும் இவை வென்­றா­லும், நிஜத்­தில் ஆசி­ரி­ய­ரு­ட­னான அறி­வூட்­ட­லுக்­கான பஞ்­சம் நமது கிரா­மங்­க­ளில் கொட்­டியே கிடக்­கி­றது.

வடக்கு மாகாண ஆசி­ரி­யர் பற்­றாக்­குறை
3ஆயி­ரத்து 530 கிரா­மங்­களை உள்­ள­டக்­கிய வட­மா­கா­ணத்­தின் சனத்­தொ­கை­யில் 15.5 வீத­மான மக்­கள் மாத்­தி­ரமே நக­ரப்­பு­றங்­க­ளில் வசிக்­கி­றார்­கள். மீதி­யான 84.5 வீத­மான மக்­க­ளின் குடி­யி­ருப்பு கிரா­மங்­களே. ஆயி­ரத்து 98 இயங்கு நிலைப் பாட­சா­லை­க­ளைக் கொண்­டி­ருக்­கும் வட­மா­கா­ணத்­தின் சகல கல்வி வல­யங்­க­ளி­லும் ஆசி­ரி­யர் பற்­றாக்­குறை நில­வவே செய்­கி­றது. வட­மா­கா­ணக் கல்­வித் திணைக்­க­ளத் தர­வு­க­ளின் பிர­கா­ரம், வட­மா­கா­ணத்­தில் மாத்­தி­ரம் கிட்­டத்­தட்ட மூவா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட வெற்­றி­டங்­க­ளுக்கு ஆசி­ரி­யர் பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. வட­மா­கா­ணத்­தில் நில­வும் பட்­ட­தாரி ஆசி­ரி­யர் வெற்­றி­டங்­க­ளுக்­காக வட மாகா­ணக் கல்வி அமைச்­சால் 249 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரிய நிய­ம­னம் வழங்­கப்­பட்ட நிலை­யில், அதில் 160 பேர் மாத்­தி­ரமே கட­மை­யைப் பொறுப்­பேற்­றுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கி­றது. இந்த நிலை­யில், நிய­ம­னம் வழங்­கப்­பட்­டுச் சேவை­யில் இணைந்­து­கொள்­ளா­த­வர்­கள் பற்­றிய விவ­ரம் வட­மா­காண ஆளு­நர் சுரேன் ராக­வ­னால் கோரப்­பட்­டி­ருக்­கி­றது. வட­மா­காண வேலை­வாய்ப்­பற்ற பட்­ட­தா­ரி­கள் தமக்கு நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்று தொடர்ச்­சி­யா­கப் போராட்­டங்­களை நடத்தி வந்­தி­ருந்­த­னர். இதன் தொடர்ச்­சி­யா­கக் கடந்த ஜன­வ­ரி­யில் யாழ்ப்­பா­ணத்­தில் நடந்த வைப­வத்­தில் 249 பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இவ்­வாறு நிய­ம­னம் வழங்­கப்­பட்ட பின்­ன­ணி­யில் ஒரு தொகைப் பட்­ட­தா­ரி­கள் கட­மை­யைப் பொறுப்­பேற்­ப­தற்கு பின்­ன­டிப்­ப­தற்­கான கார­ணம், தமது இருப்­பி­டத்­தி­லி­ருந்து தூரப் பிர­தே­சங்­க­ளுக்கு நிய­ம­னம் கிடைத்­த­த­னா­லா­கும் என அறிய வரு­கி­றது. இந்த நிலை­வ­ரம் வட மாகா­ணத்­தின் வன்னி மற்­றும் தீவ­கப் பாட­சா­லை­க­ளில் தொடர்ந்­தும் ஆசி­ரி­யர் பற்­றாக்­குறை நில­வு­வ­தற்கு வழி­வ­குப்­ப­தாக அறி­விக்­கப்­ப­டு­கி­றது.

அரச நிய­ம­னங்­கள்- இலங்­கை­யில்
எங்­கும் பணி­யாற்­று­வ­தற்­கா­னவை

பொது­வாக அரச நிய­ம­னங்­களை வழங்­கும்­போது நிய­ம­னக் கடி­தத்­திலோ, அல்­லது விண்­ணப்­பத்­திலோ இலங்­கைத் தீவின் எந்­தப் பாகத்­தி­லும் கட­மை­யாற்­று­வ­தற்­குத் தயா­ராக இருக்­கு­மா­றான பணிப்­புரை ஒன்­றை­யும் உள்­ள­டக்­கு­வது வழமை. மனித வளப்­பங்­கீட்டை வினைத்­தி­ற­னாக நடை­மு­றைப் படுத்­து­வ­தற்கு ஏது­வா­க­வும் சகல பிர­தே­சங்­க­ ளுக்­கும் சேவை கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வும் இந்த வகை­யான ஏற்­பாடு இருந்­தா­லும் அந்த இலக்­கினை அடை­வது கடி­ன­மான ஒன்­றா­கவே தொடர்­கி­றது.

ஆசி­ரி­யர் தொழிற்­சங்­கத்­தின் கருத்து
ஆசி­ரி­யர் பயிற்­சிக் கல்­லூ­ரி­க­ளி­லி­ருந்­தும் கல்­விக் கல்­லூ­ரி­க­ளி­லி­ருந்­தும் வரு­டாந்­தம் ஆயி­ரம் அள­வி­லான ஆசி­ரி­யர்­கள் பயிற்­று­விக்­கப்­பட்டு வெளி­யே­றி­னா­லும், கிரா­மி­யப் பாட­சா­லை­க­ளுக்கு அவர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வ­தில்லை எனக் குற்­றம் சாட்­டு­கி­றார் இலங்கை ஆசி­ரி­யர் சங்­கத்­தின் வட மத்­திய மாகாண செய­லர் பிரி­யந்த பெர்­னான்டோ. இதை விட 1990ஆம் ஆண்­டு­க­ளில் நிய­ம­னம் பெற்­றுக் கிரா­மங்­க­ளில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர்­கள் எதிர்­வ­ரும் 2020ஆம் ஆண்­ட­ள­வில் சேவை­யி­லி­ருந்து நீங்­கும் போது கடு­மை­யான ஆசி­ரி­யர் பற்­றாக்­குறை ஒன்று நாட்­டில் தோன்­ற­வுள்­ள­தாக எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ ருக்­கி­றது. பணி இட­மாற்ற சபை­யின் வினைத்­தி­ற­னற்ற செயற்­பாடே இந்­தக் கிரா­மப்­புற ஆசி­ரி­யர் பற்­றாக்­கு­றைக்­குக் கார­ணம் என்­கி­றார் இலங்கை ஆசி­ரி­யர் சங்­கத்­தின் பொதுச்­செ­ய­லா­ளர் ஜோசப் ஸ்ராலின். பிர­ப­ல­மான மற்­றும் தேசிய பாட­சா­லை­க­ளில் ஆசி­ரி­யர்­கள் தேவைக்­க­தி­க­மா­கப் பெருகி வழி­ய­வும் கிரா­மப்­பு­றங்­க­ளில் தட்­டுப்­பாடு நில­வ­வும் கார­ண­மாக இருப்­பது பணி இட­மாற்­றம் தொடர்­பில் சரி­யான போக்­குக் கடைப்­பி­டிக்­கப்­ப­டா­மையே என்­கி­றார் அவர்.

சிறந்த பெறு­பே­று­களை ஈட்­டும்
கிரா­மி­யப் பாட­சா­லை­கள்

பாட­சாலை மாண­வர்­கள் எதிர்­கொள்­ளும் நாட­ளா­விய தேர்­வு­க­ளான 5ஆம் தரப் புல­மைப்­ப­ரி­சில் பரீட்சை, க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்சை மற்­றும் உயர்­த­ரப் பரீட்சை என்­ப­வற்­றின் தேசிய மட்­டப் பெறு­பே­று­க­ளில் கிரா­மி­யப் பாட­சா­லை­கள் தமது நிலை­க­ளைப் பதிவு செய்து வரு­கின்­றன. இந்த ஆரோக்­கி­ய­மான போக்குக் கிரா­மப்­பு­றப் பாட­சா­லை­க­ளில் உள்ள மாண­வர்­களை வெளி­யு­ல­குக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­வ­து­டன் அதற்­குப் பின்­னால் இயங்­கும் ஆசி­ரி­யர் குழாத்­தை­யும் இனங்­காட்­டு­கின்­றது. இல­வ­சக்­கல்வி எனும் வரப்­பி­ர­சா­தத்­தைக் கொண்­டி­ருக்­கும் இலங்கை, பௌதீக வளங்­க­ளை­யும் மனித வளங்­க­ளை­யும் வினைத்­தி­ற­ னா­கப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் குறிக்­கப்­பட்ட இலக்­கு­களை அடை­வ­து­டன் அதற்­கப்­பா­லும் பய­ணிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

எனி­னும் கிரா­மப்­பு­றங்­க­ளுக்கு ஆசி­ரிய வளப்­ப­கிர்வை மேற்­கொள்­வ­தில் நில­வும் இழு­பறி நிலை கிரா­மப்­பு­றக் கல்­வி­யில் மந்த நிலை­யைத் தோற்­று­விப்­ப­து­டன் கிரா­மங்­களை முன்­னேற்­றத் தடை­யா­க­வும் அமைந்து வரு­கின்­றது.
தென் மாகா­ணத்­தின் பலப்­பிட்­டியப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த கிறிஸ்­தோ­பர் வில்­லி­யம் விஜ­யக்­கோன் கன்­னங்­கரா என்­கிற கிரா­மப்­புற மாண­வ­னின் திற­மையை ஆசி­ரி­யர்­கள் சரி­யாக அடை­யா­ளம் கண்­டு­கொண்­ட­மை­யா­லேயே அவர் பின்­னா­ளில் இலங்­கை­யின் இல­வ­சக்­கல்­வி­யின் தந்­தை­யா­னார்.

அது­போன்ற இனங்­கா­ணலை இன்­றும் நிகழ்த்­து­வ­தற்­காக இலங்கை வழங்கி வரும் இல­வ­சக்­கல்­வி­யில் வளர்ந்த ஆசி­ரி­யர்­க­ளுக்­கா­கக் கிரா­மப்­பு­றப் பாட­சா­லை­கள் காத்­தி­ருக்­கின்­றன.

You might also like