காரை குளிர்ச்சிப் படுத்த பெண் செய்த வேலை!!

கோடை வெயி­லின் உக்­கி­ரம் நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே இருக்­கி­றது. வழக்­க­மாக ஏப்­ரல் இறு­தி­யில் கோடைக்­கா­லம் தொடங்­கு­வ­தா­கக் கூறப்­பட்­டா­லும் நடப்­பாண்­டில் பெப்ரவரி  இறுதி முதலே நாடு முழு­வ­தும் வெயில் கொளுத்­தத் தொடங்­கி­விட்­டது என்றே கூற­லாம்.

வெயி­லில் இருந்து தப்ப மக்­கள் பல்­வேறு உபா­யங்­களை நாடு­கின்­ற­னர். தமி­ழ­கத்­தில் பல மாவட்­டங்­க­ளில் வெயில் 100 டிகிரியைத் தாண்­டு­வது அன்­றா­டக் கதை­யா­கி­விட்ட நிலை­யில், பல்­வேறு பகு­தி­க­ளி­லும் தண்­ணீர் பஞ்­சம் தலை­வி­ரித்­தா­டு­கி­றது.

இந்த நிலை­யில், குஜ­ராத் மாநி­லம் அக­ம­தா­பாத்­தைச் சேர்ந்த ஒரு­வர், வெயி­லில் இருந்து தப்­பு­வ­தற்­கா­கத் தனது காரை சாணத்­தால் மெழு­கிய சம்­ப­வம் நடந்­தி­ருக்­கி­றது. முக­நூ­லில் இது­கு­றித்து ரூபேஷ் கௌரங்க தாஸ் என்­ப­வர் ஔிப்­ப­டங்­க­ளைப் பகி­ரவே அது வைரலாகியுள்ளது.

You might also like