காலத்தைக் கடத்தாது தேர்தலை நடத்துங்கள்- தேர்­தல் கண்­கா­ணிப்பு அமைப்பு அழுத்­தம்!!

மகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை விரை­வு­ப­டுத்த வேண்­டும் என்று சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­ய­வி­டம் கோரி­யுள்­ளது பவ்­ரல் அமைப்பு.

சப்­ர­க­முவ, கிழக்கு மற்­றும் வட­மத்­திய மாகா­ண­ச­பை­க­ளின் பதவிக் காலம் நிறை­வ­டைந்து எட்டு மாதங்­கள் நிறை­வ­டை­கின்­றன.

எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் மாதத்­த­து­டன் மேலும் மூன்று மாகாண சபை­க­ளின் காலம் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

புதிய முறை­யி­லா­வது மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை விரை­வு­ப­டுத்த வேண்­டும்.”- என்று அந்த அமைப்பு கடி­தம் மூலம் கோரி­யுள்­ளது.

முடி­வ­டைந்த மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வது தொடர்­பில் அரசு உறு­தி­யான தீர்­ம­னங்­களை முன்­வைக்­கா­துள்­ளது.

எல்லை நிர்­ணய அறிக்கை தொடர்­பி­லும் பிரச்­சி­னை­கள் எழுந்­துள்­ளன. அத­னா­லேயே சபா­நா­ய­க­ருக்கு கடி­தம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று பவ்­ரல் அமைப்பு குறிப்­பிட்­டுள்­ளது.

மாகாண சபை தேர்­தல் புதிய சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் நடத்­தப்­பட்­டால் எல்லை நிர்­ணய அறிக்­கை­யும் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிக்­கப்­ப­ட­வேண்­டும்.

மாகாண சபை­க­ளுக்­கான கால எல்லை நிறை­வ­டைந்து ஒரு மாத கால பகு­திக்­குள் எல்லை நிர்­ணய அறிக்­கையை சமர்­பிக்க நாடா­ளு­மன்­றம் கட­மைப்­பட்­டுள்­ளது என்று அந்த சட்ட வரைவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இரண்­டாம் தெரி­வாக, எல்லை நிர்­ணய அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிக்­கப்­ப­டாத சந்­தர்ப்­பத்­தில் தலைமை அமைச்­சர் தலை­மை­யில் குழு நிய­மிக்­க­பட்டு அத­னு­டாக எல்லை நிர்­ணய அறிக்கை தொடர்­பான ஆய்­வு­களை மெற்­கொள்ள முடி­யும்.

குறிப்­பிட்ட இரண்டு மாதங்­க­ளில் தலைமை அமைச்­ச­ரின் குழு­வால் எல்லை நிர்­ணய அறிக்­கையை நாடா­ளு­மன்­றில் சமர்ப்­பிக்க முடி­யும்.

நாடா­ளு­மன்­றத்­தில் உரு­வாக்­கப்­பட்ட ஒரு சட்ட வரைவு தொடர்­பில் நாடா­ளு­மன்­றமே கவ­னத்­தில் கொள்­ளா­மல் உள்­ளமை பிரச்­சி­னைக்­கு­ரிய விட­ய­மா­கும்.

நாடா­ளு­மன்­றத்­தின் தலை­வ­ராக உங்ளை மக்­கள் தெரிவு செய்­துள்­ள­மைக்கு பிர­தான கார­ணம் தலை­வர் என்ற ரீதி­யில் மக்­க­ளும் வைத்­துள்ள சிறப்பு நம்­பிக்­கை­யா­கும்.

எல்லை நிர்­ணய அறிக்­கையை விரை­வில் சமர்ப்­பித்து மாகாண சபை தேர்­தலை நடத்­து­வ­தற்­கான பணி­களை விரை­வு­ப­டுத்த வேண்­டும் என்று அந்­தக் கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் பெப்­ரல் அமைப்­பின் நிறை­வேற்று பணிப்­பா­ளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்சி கருத்­துத் தெரி­வித்­த­ போது,

மாகாண சபை­கள் தேர்­தலை நடத்­து­வது தொடர்­பில் பல தட­வை­கள் வலி­யு­றுத்­தப்­பட்­டது. எல்லை நிர்­ணய அறிக்­கை­யும் முன்­வைக்­க­ப­ட­வில்லை. இது நாடா­ளு­மன்­றத்­துக்கு வழங்­க­பட்­டுள்ள
பொறுப்­பு­க­ளில் இருந்து மீறும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தின் தலை­வர் என்ற ரீதி­யில் மக்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­களை பாது­காக்க புதிய முறை­யி­லா­வது மாகாண சபை தேர்­தலை விரை­வில் நடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய மேற்­கொள்ள வேண்­டும். – என்­றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close