கிளிநொச்சி வைத்தியசாலைக்கு தளபாடங்கள் கையளிப்பு!!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கண் சத்திரசிகிசை பிரிவுக்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தளபாடங்கள அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் லண்டனில் உள்ள காரை நலன்புரிச் சங்கத்தின் நிதிப் பங்களிப்பில் தளபாடங்கள் கையளிக்கப்பட்டன.

யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்; பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் இணைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் மைதிலியிடம் தளபாடங்களைக் கையளித்தனர்.

You might also like