side Add

குடா­நாட்­டுப் பணம்- முத­லீ­டாக வேண்­டும்!!

யாழ்ப்­பா­ணத்­தில் பணப்­பு­ழக்­கம் அதி­க­மா­க­வுள்­ள­தால் அத­னைக் கொண்டு முத­லீ­டு­களை ஆரம்­பிக்க வேண்­டு­மென தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் அமைந்­துள்ள வங்­கி­க­ளில் அதிக பணப்­பு­ழக்­கம் காணப்­ப­டு­கி­றது என்று தலைமை அமைச்­சர் குறிப்­பிட்­ட­தை­யும் நாம் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும். போர் கார­ண­மாக இலட்­சக்கணக்­கான தமி­ழர்­கள் புலம்­பெ­யர்ந்து வாழ்­வ­தால், அவர்­கள் இங்கு வாழ்­கின்ற தமது உற­வு­க­ளுக்கு வங்­கி­கள் ஊடா­கப் பணத்தை அனுப்பி வைக்­கின்­ற­னர். யாழ்ப்­பா­ணத்து வங்­கி­க­ளில் அதிக பணப்­பு­ழக்­கம் காணப்­ப­டு­கின்­ற­மைக்கு இது முதன்­மைக் கார­ண­மா­கும்.

அதிகரித்துள்ள நிதி­நி­று­வ­னங்­கள்
போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­னர் புற்­றீ­சல்­கள் போன்று ஏரா­ள­மான வங்­கிக்­கி­ளை­க­ளும், நிதி நிறு­வ­னங்­க­ளின் கிளை­க­ளும் யாழ்ப்பாணத்தில் தோன்­றி­விட்­டன. யாழ்ப்­பாண நக­ரில் மட்­டு­மல்­லாது சிறு நகர்­க­ளி­லும் இவை ஏரா­ள­மாக அமைந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அது மட்­டு­மல்­லாது இவை அதி­க­ள­வில் இலா­ப­மீட்­டு­வ­தை­யும் அறி­யக் கூடி­ய­தாக உள்­ளது.

யாழ்ப்­பா­ணத்து மக்­கள் நல்ல சேமிப்­புப்­ப­ழக்க வழக்­கங்­க­ளைக் கொண்­ட­வர்­கள். தாம் சம்­பா­திக்­கின்ற பணத்­தில் ஒரு சிறிய அள­வை­யே­னும் சேமிக்க வேண்­டு­மென்­ப­தில் ஆர்­வ­முள்­ள­வர்­கள். ஒரு காலத்­தில் உழைப்­புக்கு உதா­ர­ண­மாக இவர்­க­ளைத்­தான் குறிப்­பி­டு­வார்­கள். இன்­றும்­கூட அந்த நிலையை ஓர­ளவு காண­மு­டி­கின்­றது. விவ­சா­யத்­துக்­குப் பெயர்­போன குடா­நாட்­டில் இன்று விவ­சா­யி­கள் மகிழ்ச்­சி­யாக இல்­லை­யென்­பது வேத­னைக்­கு­ரி­யது.

தேவை­யற்ற முத­லீ­டு­கள்
ஒரு பிர­தே­சத்­தின் தொழில் வளர்ச்­சியை அங்கு அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் கட்­ட­டங்­கள் எடுத்­துக்­காட்டி விடு­கின்­றன. பெரும் முத­லீட்­டில் தொழில்­களை நடத்­து­வ­தற்கு கட்­டட வச­தி­கள் மிக­வும் இன்­றி­ய­மை­யா­ன­வை­யா­கக் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் தேவை­யற்ற இடங்­க­ளில் பிர­யோ­ச­ன­மற்ற வகை­யில் பெரும் பணச்­செ­ல­வில் கட்­ட­டங்­களை அமைப்­பது பய­னற்­ற­தொரு முயற்­சி­யா­கும். போருக்­குப் பின்­னர் மழைக் காளான்­கள் போன்று ஏரா­ள­மான கட்­ட­டங்­கள் தெரு­வோ­ரங்­க­ளில் எழுந்­த­தைக் காண­மு­டிந்­தது.

சில கட்­ட­டங்­கள் மூன்று அல்­லது நான்கு மாடி­க­ளைக் கொண்­ட­தா­க­வும் காணப்­பட்­டன. ஆனால் அவற்­றுள் சில பயன்­ப­டுத்­தப்­ப­டா­மல் உள்­ளதை இன்று கூடக் காண­மு­டி­கின்­றது. பல மில்­லி­யன் ரூபா செல­வில் அமைக்­கப்­பட்ட இந்­தக் கட்­ட­டங்­கள் பயன்­ப­டாத நிலை­யில் உள்­ள­தால் பெரும் பொரு­ளா­தார இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே பாதிக்­கப்­பட்ட ஒரு பிர­தே­சத்­தில் முத­லீ­டு­களை மேற்­கொள்­ளும்­போது மிகுந்த அவ­தா­னத்­து­டன் செயற்­ப­டு­வது அவ­சி­ய­மா­ன­தா­கும். இல்­லை­யென்­றால் மிகப்­பெ­ரிய நட்­டத்தை எதிர்­கொள்ள நேரி­டும்.

வளங்­க­ளுக்கு ஏற்ற முத­லீடு
மேற்­கொள்­ளு­தல் அவ­சி­யம்
யாழ்ப்­பா­ணத்­தின் வளங்­க­ளைக் கருத்­தில்­கொண்டு முத­லீ­டு­களை மேற்­கொள்­ளு­வதே புத்­தி­சா­லித்­த­ன­மா­னது. வறண்ட பிர­தே­ச­மான யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில், கால­நி­லைக்கு ஏற்­பவே பயிர்­களை உற்­பத்தி செய்ய முடி­யும். ஒரு காலத்­தில் திராட்­சைச் செய்கை தொடர்­பாக எவ­ருமே நினைத்­துக்­கூ­டப் பார்த்­த­தில்லை.

ஆனால் காலப்­போக்­கில் விவ­சா­யி­கள் திராட்­சை­யைப் பயி­ரி­டு­வ­தில் அதிக ஆர்­வம் காட்­டி­னர். திராட்­சைப் பழங்­கள் அதி­க­ள­வில் அறு­வடை செய்­யப்­பட்­டன. இவை தென்­ப­கு­திக்கு எடுத்­துச் சென்று நல்ல விலைக்கு விற்­பனை செய்­யப்­பட்­டன. இத­னால் விவ­சா­யி­கள் அதிக இலா­பத்­தை­யும் பெற்­ற­னர். திராட்­சைப் பழங்­களை மூலப்­பொ­ரு­ளா­கக் கொண்டு வைன் போன்ற பானங்­க­ளைத் தயா­ரிப்­ப­தற்­கான திட்­ட­மும் இருந்­தது. ஆனால் நீண்டு இடம்­பெற்ற போர் சக­ல­தை­யும் நாச­மாக்­கி­விட்­டது.

நண்டு, இறால், கண­வாய் போன்ற கடல் உண­வு­க­ளுக்கு வெளி­நா­டு­க­ளில் அதிக மவுசு உள்­ளது. குளிர்ப் பிர­தே­சங்­க­ளில் இவை உற்­பத்­தி­யா­வ­தும் இல்லை என்­ப­தால், அங்கு வாழ்­கின்ற மக்­கள் மத்­தி­யில் இவற்­றுக்கு அதிக கிராக்கி உள்­ளது. இதைக் கருத்­தில் கொண்டு இவற்­றைப் பத­னிட்டு வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைக்­கின்ற முயற்­சி­கள் இங்கு இடம்­பெற்­றன.

அதி­க­விலை கொடுத்து இந்­தப் பொருள்­கள் கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­வ­தால் இவற்­றைப் பிடித்து விற்­பனை செய்­கின்ற கடற்­தொ­ழி­லா­ளர்­கள் அதிக பய­னைப் பெற்­ற­னர். அடு­மட்­டு­மல்­லாது இந்­தக் கடல் உண­வு­களைப் பத­னிட்­டுப் பொதி செய்யவென அமைக்கப்பட்ட தொழிற்­சா­லை­க­ளில் பல­ருக்கு வேலை­வாய்ப்­பும் கிடைத்­தது. ஆனால் போர் கார­ண­மாக இந்­தத் தொழிற்­சா­லை­கள் அழி­வ­டைந்து இயங்­காத நிலை­யில் உள்­ளன. இவற்றை மீள்­நிர்­மா­ணம் செய்­வ­தன் மூல­மாக பல­ருக்கு வேலை வாய்ப்­புக் கிடைப்­ப­தோடு, நாட்­டுக்கு அந்­நி­யச் செல­வா­ணி­யை­யும் ஈட்­டிக்­கொ­டுக்க முடி­யும்.

இதை­விட மாம­ரங்­களை அதி­க­ள­வில் பயி­ரிட்டு அவற்­றி­லி­ருந்து கிடைக்­கின்ற பழங்­களை வெளி­நா­டு­க­ளுக்­குக்­கூட ஏற்­று­மதி செய்து அதிக இலா­பத்­தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். இதை­விட மாம்­ப­ழங்­க­ளி­லி­ருந்து வேறு­பொ­ருட்­க­ளைத் தயா­ரித்து விற்­பனை செய்து பொரு­ளீட்ட முடி­யும். இதைப்­போன்று பப்­பாசி மரங்­க­ளைப் பயி­ரி­டு­வ­தன் மூல­மா­க­வும் அதிக பயன்­க­ளைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

மனி­தர்­க­ளின் அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளில் உடை­யும் ஒன்­றா­கும். போருக்கு முந்­திய காலப்­ப­கு­தி­யில் கைத்­தறி நெசவு நிலை­யங்­க­ளும், மின்­த­றி­க­ளான நெசவு நிலை­யங்­க­ளும் குடா­நாட்­டில் அதி­க­ள­வில் காணப்­பட்­டன. இவற்­றில் எரா­ள­மா­ன­வர்­க­ளுக்­குத் தொழில் வாய்ப்­புக்­கள் வழங்­கப்­பட்­ட­து­டன் அதி­க­ளவு வரு­மா­னத்­தை­யும் ஈட்ட முடிந்­தது.

போர் ஓய்ந்த இந்­தச் சூழ்­நி­லை­யில் அவற்றை மீள­வும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தன் மூல­மாக குடா­நாட்­டின் தொழில் வளத்­தைப் பெருக்­கிக்­கொள்ள முடி­யும். பணத்தை வீணே முடக்கி வைப்­ப­தால் பய­னொன்­றும் கிடைக்­க­மாட்­டாது. அதை முத­லீடு செய்­யும்­போ­து­தான் அதிக பயன்­க­ளைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

You might also like