குளத்துக்கு அருகில் ஆயுதங்கள் மீட்பு!!

வவுனியா உலுக்குளம் பகுதியில் துப்பாக்கி மகசீன்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

உலுக்குளம் குளப்பகுதிக்கு அண்மையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படும் மகசீன்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகளை அவதானித்ததுடன், விசேட அதிரடி படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

You might also like