கூட்­ட­மைப்பு அர­சுக்கே ஆத­ர­வ­ளித்து- எதையும் சாதிக்க முடியாது!!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சுக்கே ஆத­ர­வ­ளிக்­கும், எமக்கு ஆத­ர­வ­ளிக்­காது. ஆனால் அத­னால் அவர் களால் எது­வும் சாதிக்க முடி­யாது. கோத்­த­பாய ராஜ­பக்ச வெற்றி பெறு­வதை எவ­ரா­லும் தடுக்க முடி­யாது.

இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மகிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்­தார். ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளைச்சந்­தித்த கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், நீண்­ட­கா­ல­மாக மக்­கள் அரச தலை­வர் முறை­மையை நீக்­கவே ஆணை வழங்­கு­கின்­ற­னர்.

ஆனால் இந்த முறை­யும் அந்த ஆணை மீறப்­பட்டு அரச தலை­வர தேர்­தல் நடத்­தப்­ப­டு­கின்­றது. அத­னால் அந்த நட­வ­டிக்­கை­யில் பங்­கு­பற்­று­வது தொடர்­பாக ஆராய வேண்­டி­யுள்­ளது என்று கூறி­யி­ருந்­தார்.

அது­தொ­டர்­பா­கக் கருத்­துத் தெரி­வித்­த­போதே நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், மகிந்த ராஜ­பக்ச ஆத­ர­வா­ள­ரு­மான மகிந்­தா­னந்த அளுத்­க­மகே இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வாக்கு வங்கி வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இரா.சம்­பந்­தன் தமது கட்­சிக்­கான ஆத­ரவு குறைந்­து­வி­டும் என்று அச்­சப்­ப­டு­கின்­றார். கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்க் கூட்­ட­மைப்பு முப்­பத்­தைந்து சத­வீத வாக்­கு­களை இழந்­தி­ருந்­தி­ருந்­தது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சுக்கே ஆத­ர­வ­ளிக்­கும். எமக்கு ஆத­ர­வ­ளிக்­காது. ஆனால் அத­னால் அவர்­கள் சாதிக்­கப் போவது எது­வு­மில்லை. கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் வெற்­றியை யாரா­லும் தடுக்க முடி­யாது.

நாம் இரண்­டரை லட்­சம் தமிழ் மக்­க­ளின் வாக்­கு­களை எதிர்­பார்க்­கின்­றோம். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆட்­சி­யில் அர­சி­யல் ரீதி­யா­கவோ, அபி­வி­ருத்தி ரீதி­யா­கவோ எது­வும் நடக்­க­வில்லை. தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­க­வில்லை.

13 ஆவது திருத்­தத்தை நாம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வோம். வடக்­கில் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­வோம். 3 லட்­சம் இளை­ஞர், யுவ­தி­க­ளுக்கு வேலை வாய்ப்­புக்­கள் வழங்­க­வுள்­ளோம்.

நாங்­கள் எங்­கள் அரச தலை­வரை முடிவு செய்­து­விட்­டோம். ஆனால் ஐக்­கிய தேசி­யக் கட்சி இன்­ன­மும் சண்டை போட்­டுக் கொண்­டுள்­ளது. தமிழ் மக்­கள் எமக்கு வாக்­க­ளிக்க வேண்­டும்.

எதற்­கும் ஒரு தலை­வன் வேண்­டும். அது கோத்­த­பாய ராஜ­பக்­சவே. அவர் கொழும்­பைப பல வழி­க­ளி­லும் அபி­வி­ருத்தி செய்­த­வர். வெளி­நா­டு­க­ளின் முத­லீ­டு­களை அதி­க­ரித்­த­வர். நாட்டை அபி­வி­ருத்தி செய்ய அவரே சிறந்த தலை­வர். – என்­றார்

You might also like