side Add

கூட்டு அர­சின் ஆட்­சி­யில்- வதை­ப­டு­கின்­ற­னர் மக்­கள்!!

தெற்­கி­லுள்ள அர­சி­யல்­வா­தி­கள் மக்­க­ளைக் கண்­டு­கொள்­ளாத மனோ­பா­வத்­து­டன் செயற்­ப­டு­வ­தைக் காண­ மு­டி­கின்­றது. இன்று மக்­கள் பொரு­ளா­தா­ரக் கஷ்­டங்­களை மட்­டு­மல்­லாது இயற்­கைப் பேரி­டர்­க­ளை­யும் எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். ஆனால் அர­சி­யல் வாதி­களோ இவற்­றை­யெல்­லாம் கவ­னத்­தில் கொள்­ளாது தமது அர­சி­யல் விளை ­யாட்­டுக்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

தலைமை அமைச்­ச­ரின்
கருத்து எத்­த­கை­யது?
2030ஆம் ஆண்­டுக்­குப் பின்­ன­ரும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆட்சி தொட­ரு­மென அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்­தார். எந்த நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் அவர் இவ்­வாறு கூறு­கின்­றார் என்­பது தெரி­ய­வில்லை. நாட்­டின் அர­சி­யல் நிலமை குழம்­பிக் கிடக்­கின்ற நிலை­யில் தலைமை அமைச்­ச­ரின் கருத்து எந்­த­ள­வுக்­குச் சாத்­தி­ய­மா­கும் என்­ப­தும் புரி­ய­வில்லை. இதை­யொரு காத்­தி­ர­மான கருத்­தாக எடுத்­துக் கொள்ள முடி­யாது. அதே­வேளை மகிந்­த­வும் மைத்­தி­ரி­யும் இணைந்து தெரிவு செய்­கின்ற வேட்­பா­ள­ருக்கே அடுத்த அரச தலை­வ­ருக்­கான தமது ஆத­ரவு கிடைக்­கு­மென சிறீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­குள் உள்ள ரணில் எதிர்ப்பு அணி­யி­னர் கூறு­கின்­ற­னர். அர­சி­யல்­வா­தி­க­ளின் இத்­த­கைய மாறு­பட்ட வெவ்­வே­றான கருத்­துக்­க­ளால் மக்­கள் எதை நம்­பு­வது? எதை ஒதுக்­கி­வி­டு­வது? என்­ப­தைப் புரி­யாது தலை­யைப் பிய்த்­துக் கொண்டு குழம்பி நிற்­கின்­ற­னர்.

விலை­வாசி உயர்­வால்
கலக்­கத்­தில் மக்­கள்
விலை­வாசி உயர்வு மக்­க­ளைப்­பெ­ரி­தும் பாதித்து விட்­டது. வாழ்க்­கைச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க முடி­யாது அவர்­கள் திண்­டா­டிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். அதை­விட சீரற்ற கால­நிலை கார­ண­மாக சுமார் ஒரு இலட்­சத்து 25 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மண்­ச­ரிவு மற்­றும் வெள்ள இடர் கார­ண­மாக ஏரா­ள­மான மக்­கள் தமது இருப்­பி­டங்­க­ளி­லி­ருந்து வெளி­யேறி பொது­வி­டங்­க­ளில் தங்­கி­யுள்­ள­னர். இவ்­வாறு மக்­கள் துன்­பங்­களை அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்க அவர்­க­ளது பிர­தி­நி­தி­க­ ளெ­னத் தம்­மைக் கூறிக்­கொள்­ளும் அர­சி­யல் வாதி­கள் பத­வி­க­ளைத் தேடி அலைந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

நாட்­டில் நில­வு­கின்ற அர­சி­யல் குழப்­பங்­க­ளுக்கு தீர்வு கிடைப்­ப­தற்­கான வாய்ப்­புக்­க­ளும் அரி­தா­கவே காணப்­ப­டு­கின்­றன. வேளா­வே­ளைக்­கொரு புதுக்­க­தை­யைக் கூறி­யும் மக்­கள் குழப்­பி­ய­டி க்­கப்­ப­டு­கின்­ற­னர். மைத்­தி­ரி­யும், ரணி­லும் சுமு­க­மான உற­வைக் கொண்­டி­ருக்­கி­றார்­களா? சிறீ­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் இடை­யி­லான உறவு எந்த நிலை­யில் உள்­ளது? சுதந்­தி­ரக்­கட்­சி­யும், மகிந்­த­வும் மீண்­டும் இணைந்து கொள்­ள­வ­தற்­கான வாய்ப்பு உள்­ளதா? ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள் குழப்­பம் நீடிக்­கி­றதா? ரணி­லின் தலை­மைப் பத­விக்கு ஆபத்து ஒன்­றும் இல்­லையா? இவ்­வாறு பல கேள்­வி­கள் மக்­க­ளி­டையே எழுந்து நிற்­கின்­றன. ஆனால் இவற்­றுக்­கெல்­லாம் விடை கிடைப்­பது என்­பது சந்­தே­க­மா­கவே உள்­ளது. இந்த வினாக்­க­ளுக்கு விடை கிடைத்­து­விட்­டால் குழப்­பங்­க­ளும் தீர்ந்து விடும்.

கூட்டு அரசைக் குலைப்­ப­தற்கு
தொடர்ந்­தும் கடும் நட­வ­டிக்கை
அர­சுக்கு எதி­ராக சுமார் 250 எதிர்ப்பு ஊர்­வ­லர்­களை விரை­வில் நடத்­த­வுள்­ள­தாக எதி­ர­ணி­யி­னர் கூறு­கின்­ற­னர். அரசை வீட்­டுக்கு அனுப்­பு­கின்ற நோக்­கத்­து­ட­னேயே இந்த எதிர்ப்பு ஊர்­வ­லங்­கள் இடம்­பெ­ற­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதன் எதிர்­வி­ளை­வு­கள் தொடர்­பா­கப் பின்­னர்­தா ன் தெரி­ய­வ­ரும். முத­லில் அர­சி­யல் வாதி­கள் சக­ல­ரும் கட்சி பேத­மின்றி மக்­க­ளின் குறை­க­ளைத் தீர்ப்­ப­தற்கு முன்­வர வேண்­டும். அதன் பின்­னர் தமக்­குள் உள்ள பிணக்­கு­க­ளைத் தீர்த்­துக் கொள்­வ­தற்கு முன்­வர வேண்­டும்.

கூட்டு எதி­ர­ணி­யி­னர் பொருள்­க­ளின் விலை­யு­யர்வை வெளி­யில் கண்­டித்­தா­லும் உள்­ளுக்­குள் மகிழ்ச்சி அடை­யவே செய்­வார்­கள். ஏனென்­றால் அர­சின் மீதான மக்­க­ளின் கொதிப்பு தமக்கு ஆத­ர­வாக மாறி­வி­டும் என்­பது இவர்­க­ளின் நம்­பிக்­கை­யா­கும். இத்­த­கைய சுய­நல அர­சி­யல்­வா­தி­கள் உள்­ள­தொரு நாட்­டில் சுபீட்­சத்தை எவ்­வாறு எதிர்­பார்க்க முடி­யும்?

முன்­னைய அர­சின் காலத்­தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­க­ளும், தற்­போ­தைய அர­சின் காலத்­தில் மத்­திய வங்­கி­யில் இடம்­பெற்ற பிணை­முறி மோச­டி­யும் நாட்­டின் பெரு­ளா­தா­ரத்தை மிகப்­பெ­ரும் பின்­ன­டை­வுக்­குத் தள்­ளி­யுள்­ளது. இந்த ஊழல் மோச­டி­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளில் பல­ரும் இன்று வெளிப்­ப­டை­யா­கவே உல­வித் திரி­கின்­ற­னர். எனின், இவர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்ன?

இவர்­க­ளைக் கைது­செய்து இவர்­கா­ளால் மோசடி செய்­யப்­பட்­ட­வற்றை மீட்­ப­தற்கு அரசு ஏன் தயக்­கம் காட்­டு­கின்­றது? அதற்­கான இரா­ஜ­தந்­தி­ரம் என்று சொல்­லிக் கொண்டு மக்­களை வதைத்­துக் கொண்­டி­ருப்­பது நல்­ல­தா­கவே தெரி­ய­வில்லை. தமக்கு ஆத­ரவு தந்து ஆட்­சி­யில் அமர்த்தி மக்­களை நட்­டாற்­றில் கைவி­டு­வது எந்த வகை­யி­லும் நல்­ல­தா­கத் தெரி­ய­வில்லை. எதி­ர­ணி­யி­ன­ரும் அரசை மட்­டுமே குறை­கூ­றிக் கொண்­டி­ருக்­காது தமக்­குள்ள பொறுப்­பை­யும் உணர்ந்து மக்­க­ளின் குறை­க­ளைப் போக்­கு­வ­தற்கு மனச்­சாட்­சி­யு­டன் செயற்­பட வேண்­டும். இதி­லி­ருந்து இவர்­கள் தவறி விடு­வார்­க­ளா­னால் மக்­கள் அர­சி­யல் வாதி­க­ளைப் புற­மொ­துக்­கி­வி­டு ­கின்ற நிலை­யொன்று உரு­வா­கி­வி­டும் என்­பதை மறுக்க முடி­யாது.

You might also like
X