கேள்­விக்­கு­றி­கள்!!

இலங்­கைப் பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்ச அறி­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து தமிழ்த் தேசி­யக் கட்­சி­கள் அனைத்­தும் ஒன்­றி­ணைய வேண்­டும் என்­கிற கோரிக்கை தமி­ழர் தரப்­பி­லி­ருந்து மேலெ­ழுந்­தி­ருக்­கி­றது. அதை­யெ­ழுப்­பி­ய­வர் வேறு­யா­ரு­மல்­லர், ஈ.பி­.ஆர். எல். எவ். கட்­சி­யின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன்­தான்.

எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் சிங்­கள வாக்­கு­கள் பிரிந்து செல்­லும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கை­யில் தமி­ழர்­கள் ஒற்­று­மை­யு­டன் செயற்­பட்டு தமது நலன்­க­ளை முழுமை செய்­து­கொள்ள வேண்­டும் என்று அவர் கேட்­டுள்­ளார்.

தமி­ழர் தரப்பு இத­னைச் சரி­யான வகை­யில் கையாள வேண்­டிய பொறுப்பு இருக்­கின்­றது. ஏனெ­னில் கடந்த காலங்­க­ளில் அரச தலை­வ­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்டு வந்­த­வர்­கள் ஏமாற்­றி ­விட்­டார்­கள் என்று தமி­ழர் தரப்­புக்­களே கூறு­கின்ற நிலை­யில் இந்­த­முறை சரி­யா­ன­தொரு தீர்­மா­னத்தை எடு­த்து தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­துக்­கொள்ள முயற்­சிக்க வேண்­டும்.

தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்து வைக்­கின்­ற­வர்­க­ளுக்கே ஆத­ரவு என்­கிற ஒரு உடன்­பாட்­டுக்கு வர­வேண்­டும். அத்­த­கைய ஒரு உடன்­பாட்­டைத் தமிழ்க் கட்­சி­க­ளி­டையே ஏற்­ப­டுத்தி அத­னைப் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­க­ளி­டம் முன்­வைத்­துப் பேச்சு நடத்­த­வேண்­டும். அவ்­வாறு இணைந்து செயற்­ப­டு­வதே இனத்­தின் நல­னுக்­குச் சிறந்­தது. அத­னை­வி­டுத்து தனித் தனி­யாக முடி­வெ­டுத்­துச் செயற்­ப­டு­வோ­மாக இருந்­தால் அது பல பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தும். ஆகவே இது விட­யத்­தில் அனை­வ­ரும் சிந்­தித்து இனத்­தின் நன்­மைக்­காக ஒரு­மித்­துச் செயற்­ப­ட­வேண்­டும்.

தனது அலு­வ­ல­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடத்­திய செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பின்­போது சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் கூறு­கின்­ற­படி தமி­ழர்­கள் ஒரு­மித்­துச் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­யம்­தான். ஆனால் அது ஒரு தேர்­தல்­கா­லக் கூட்­டாக இல்­லா­மல், கொள்கை வழி­யான அர­சி­யல் இணைப்­பாக இருக்­க­வேண்­டும்.
அதே­நே­ரத்­தில், புதிய அரச தலை­வ­ரைத் தேர்த்­தெ­டுப்­ப­தில் தமி­ழர்­க­ளின் வாக்­கு­கள் மிக முக்­கி­ய­மா­ன­வை­யாக இருந்­தா­லும்­கூட அதற்­கு­ரிய மதிப்பை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், பொது­மக்­கள் முன்­ன­ணி­யும் வழங்­குமா? என்­பது கேள்­விக்­கு­றி­தான்.

அது­வும் பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பா­ள­ரா­கக் கோத்­த­பாய அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் தமி­ழர்­க­ளின் முன் பல தெரி­வு­க­ளுக்­கான வாய்ப்­புக்­கள் இருப்­ப­தா­கத் தோன்­ற­வில்லை. இந்த நிலையை ஐக்­கிய தேசி­யக் கட்சி தனக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் என்­ப­தில் ஐய­மில்லை. இத்­த­கைய ஒரு அர­சி­யல் நிலை ஏற்­க­னவே இருப்­ப­தைக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் ஆபி­ர­காம் சுமந்­தி­ரன் கட்­சிக் கூட்­டம் ஒன்­றி­லேயே சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யை­விட்­டு­விட்டு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பால் வெளி­யேற முடி­யாது என்­கிற நிலைப்­பாடு ஐ.தே.கட்­சிக்கு இருக்­கி­றது. அதனை மாற்­ற­வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். அதா­வது மகிந்த ராஜ­பக்ச பக்­கம் போக முடி­யாது என்­ப­தால்­த­மிழ்த் தேசி­யக் கூட்­பைப்பு எப்­ப­டி­யும் தம்­மு­ட­னேயே இருந்­தா­க­வேண்­டும், அத­னால் தமக்கு எந்­தப் பய­மும் கிடை­யாது என்­கிற நிலைப்­பாட்­டில் ஐக்­கிய தேசி­யக் கட்சி இருக்­கி­றது என்­பதை அவர் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

அத்­த­கை­ய­தொரு நில­மையே அரச தலை­வர் தேர்­த­லி­லும் தொடர்­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­கம் உள்­ளன. கோத்­த­பா­யவை ஆத­ரிக்க முடி­யாது என்­கிற தமி­ழர்­க­ளின் உணர்­வு­பூர்வ முடி­வுக்கு முன்­பா­கத் தன்­னைத் தேர்­தெ­டுப்­ப­தைத் தவிர தமி­ழர்­க­ளுக்கு வேறு வழி­யில்லை என்று ஐக்­கிய தேசி­யக் கட்சி வேட்­பா­ளர் எண்­ணக்­கூ­டும். அத­னால் அந்த வேட்­பா­ள­ரின் கவ­னம் சிங்­கள வாக்­கு­கள் மீதே குவிந்­தி­ருக்­கும் என்று எதிர்­பார்க்­க­லாம்.

அதே­நே­ரம் வெற்­றிக்கு தமி­ழர்­கள் மற்­றும் முஸ்­லிம்­க­ளின் வாக்­கு­களை நம்பி தேர்­தலை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைப் ­பாட்­டில் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும் இருக்­கும் நிலை­யில் தமி­ழர்­க­ளின் ஒற்­றுமை, ஒரு­மைப்­பாடு என்­கிற வியூ­கங்­கள் எல்­லாம் பய­னுள்­ள­வையா? என்­ப­தும் கேள்­விக்­கு­றி­தான்.

You might also like