கொள்கை விளக்­கத்­தில் தீர்­வும் இருக்­கட்­டும்!!

நாடா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தி வைத்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, அது இன்று மீண்­டும் கூடும்­போது ஒரு கொள்­கை­வி­ளக்க உரையை ஆற்­ற­வுள்­ளார். பெரும் எதிர்­பார்ப்­போடு ஆட்­சிக்கு வந்த கூட்டு அர­சின் பத­விக் காலம் இன்­னும் இரண்டு ஆண்­டு­களை எப்­ப­டிக் கடக்­கப்­போ­கின்­றது என்­ப­தற்­கான முன்­ன­றி­விப்­பாக இந்­தக் கொள்­கை­வி­ளக்க உரை இருக்­கும் என்று எதிர்­பார்க்­க­லாம்; இருக்­க­வும்­வேண்­டும்.

ஒரு அடக்­கு­முறை ஆட்­சிக்­குள் தாம் இருப்­ப­தா­கச் சிங்­கள மக்­க­ளும்­கூட எண்­ணி­ய­தன் விளை­வாக ‘‘மாற்­றம்’’ என்­கிற முழக்­கம் கணி­ச­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வை­யும் , ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வை­யும் பத­வி­யில் அமர்த்­தி­யது. தமது பொது எதி­ரி­யைத் தோற்­க­டிப்­ப­தற்­காக, எதி­ரிக்கு எதிரி நண்­பன் என்ற ரீதி­யில் மைத்­தி­ரி­யும் ரணி­லும், மகிந்­த­வுக்கு எதி­ராக இணைந்­த­தும் அதைத் தொடர்ந்து இரு கட்­சி­க­ளும் இணைந்து ஆட்­சியை அமைத்­துக்­கொண்ட தும் ஒரு வர­லாற்று நிகழ்வு என்று கணிக்­கப்­பட்­டது.

அத­னால் நீண்­ட­கா­ல­மாக நீடித்த இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு, லஞ்­சம் ஊழ­லில் இருந்து மீட்சி, போருக்­குப் பின்­ன­ரான நிலை­மா­று­கால நீதி, கடந்த காலங்­க­ளில் நிக­ழந்த நீதிக்­குப் புறம்­பான நட­வ­டிக்­கை­கள் மீள நடக்­கா­மல் இருப்­ப­தற்­கான உறு­திப்­பாடு, மனித உரிமை மீறல்­கள் என்­பவை எல்­லாம் இந்த வர­லாற்று ஆட்­சி­யில் நடந்­தே­றும் என்ற பெரும் எதிர்­பார்ப்­பும் இருந்­தது.

ஆனால், இதில் எந்­த­வொரு விட­யத்­தி­லும் கச்­சி­த­மான செயற்­பாடு இன்றி நகர்ந்த இந்த ஆட்சி, மிக மிக மெத்­த­ன­மாக எல்­லா­வற்­றை­யும் கையாண்ட இந்த ஆட்சி இடை­ந­டு­வி­லேயே மோதல்­க­ளின் கூடா­ர­மா­கி­விட்­டது. இது ஒரு வர­லாற்று ஆட்சி என்­ப­தற்­குப் பதி­லாக ,வழக்­கம்­போ­லவே ஐக்­கிய தேசி­யக் கட்சி, சுதந்­தி­ரக் கட்சி மோத­லா­கவே ஆட்­சி­யும் அர­சும் மாறி­விட்­டன. அத­னால் நினைத்­தது எது­வும் நடக்­க­மு­டி­யா­மல் போய்­விட்­டது.

இத­னால் இந்த ஆட்­சி­யைக் கவிழ்ப்­ப­தற்கு, இந்த ஆட்­சி­யின் பங்­கா­ளி­களே முயற்­சிக்­கின்ற நிலை­யும் ஏற்­பட்­டது. தலைமை அமைச்­ச­ரைப் பதவி நீக்­கம் செய்­யும் முயற்­சிக்கு அரச தலை­வரே மறை­மு­க­மாக ஆத­ர­வ­ளித்­தார் என்ற குற்­றச்­சாட்­டுக்­கள் எழும் அள­விற்கு மோதல் தீவி­ர­ம­டைந்­தது. ஆட்­சி­யின் பிழை­க­ளுக்­கும் , குறை­பா­டு­க­ளுக்­கும் , செயற்­றி­ற­னின்­மைக்­கும் இரு கட்­சி­யி­ன­ரும் ஒரு­வரை ஒரு­வர் மாறி மாறிக் குற்­றஞ்­சாட்­டும் நிலமை உரு­வா­னது.

இந்த நிலை­யில் இந்த ஆட்சி தொட­ருமா இல்­லையா என்­கிற கேள்வி எழுந்­த­போது, வேறு வழி­யில்­லா­மல் இரு தரப்­பி­ன­ரும் ஆட்­சி­யைத் தொட­ரும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளார்­கள். உறு­தி­யான, அசைந்து கொடுக்­காத எதி­ரி­யாக மகிந்த ராஜ­பக்ச மற்­றப் பக்­கத்­தில் நின்­று­கொண்­டி­ருக்­கும்­போது இவர்­க­ளுக்­கும் வேறு வழி­யில்லை.

இப்­ப­டி­யொரு இக்­கட்­டுக்­குள் இந்த அரசு அடுத்த இரண்டு வருட காலத்­தை­யும் எப்­ப­டிக் கடக்­கப் போகின்­றது என்­கிற கேள்­விக்­குப் பதி­ல­ளிப்­ப­தாக அரச தலை­வ­ரின் இன்­றைய கொள்கை விளக்க உரை எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

பொரு­ளா­தார ரீதி­யி­லும் இலங்கை மோச­மான நிலையை எட்­டி­யி­ருக்­கும் நிலை­யில் அதை எப்­ப­டிச் சீர்­செய்து நாட்டை முன்­னேற்­றப் பாதை­யில் நகர்த்­து­வது என்­பது பற்­றி­யும் அவர் சொல்­ல­வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆட்­சிக்கு வரும்­போது ஆர­வா­ர­மாக அள்­ளி­வ­ழங்­கிய வாக்­கு­று­தி­கள் நிறை­வே­றா­மல் இருக்­கும் நிலை­யில், அவற்றை எப்­படி இந்த இரண்டு வருட காலப்­ப­கு­தி­யில் நிறை­வேற்­றப் போகி­றார்­கள் என்­ப­தை­யும் சொல்­ல­வேண்­டி­யி­ருக்­கி­றது.

முக்­கி­ய­மாக இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வா­கப் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வது குறித்து வழங்­கிய வாக்­கு­று­தி­களை அடுத்து வரும் இரண்டு வருட காலப் பகு­தி­யில் எப்­படி நிறை­வேற்­றப்­போ­கி­றார்­கள் என்­பதை அவர் விளக்­கிச் சொல்­ல­வேண்­டி­யி­ருக்­கி­றது.

அவ­ரது இந்­தக் கொள்­கை­வி­ளக்க உரை­யும், அதைத் தொடர்ந்து வரும் இரண்டு ஆண்­டு­க­ளில் இந்த ஆட்­சி­யின் செயற்­பா­டு­க­ளுமே அடுத்த தேர்­த­லில் வெற்­றி­பெ­றப் போகும் கட்­சி­யைத் தீர்­மா­னிக்­கப் போகின்­றன.

இனி­மேல் கூட்டு இல்லை, 2020இல் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தனி ஆட்­சியே என்று தனது மே தின உரை­யில் ரணி­லும் சூச­க­மா­கத் தெரி­வித்­து­விட்ட நிலை­யில், அடுத்­து­வ­ரும் இரண்டு ஆண்­டு­க­ளுக்­குள் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வது எப்­படி, அதற்­கான வழி வரை­ப­டம் என்ன என்­பதை , குறிப்­பாக தீர்­வுக்­கான வழி என்ன என்­பதை அரச தலை­வர் முன்­வைக்­க­வேண்­டும். மக்­கள் எல்­லோ­ரும் அதற்­கா­கக் காத்­தி­ருக்­கி­றார்­கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close