side Add

கோட்டைக்குள் முகாம் -அடக்குமுறைக்குச் சமம்!!

கோட்டைக்­குள் புதிய இரா­ணுவ முகாம் அமைப்­ப­தற்­கான பணி­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன. அங்கே ஏற்­க­னவே நிறுத்­தப்­பட்­டி­ருந்த படை­யி­ன­ரின் நிலை விரி­வாக்­கம் செய்­யப்­ப­டு­வ­தாக மட்­டுமே தமக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் யாழ்ப்­பாண அதி­காரி தெரி­விக்­கி­றார். ஆனால், இரா­ணுவ முகாம் அமைப்­ப­தற்­கா­கச் சீனா வழங்­கிய பொருள்­க­ளைக் கொண்டு புதிய முகாம் ஒன்று அமைக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தைக் கோட்­டைக்­குள் செல்­லும் எவ­ரும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

யாழ். நக­ரப் பகு­திக்­குள் இருக்­கும் இரா­ணுவ முகாம்­கள் அனைத்­தை­யும் அகற்­று­வ­தற்­கான நிபந்­த­னை­யா­கக் கோட்­டைக்­குள் தமக்கு நிலம் ஒதுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று இரா­ணு­வம் விடுத்த கோரிக்­கைக்கு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் அபி­வி­ருத்­திக் கூட்­டத்­திலோ, மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுக் கூட்­டத்­திலோ அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. அப்­ப­டி­யி­ருந்­த­போ­தும் இரா­ணு­வம் கோட்­டைக்­குள் புதிய முகாம் அமைக்­கி­றது, அல்­லது தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் சொல்­வ­தைப் போல ஏற்­க­னவே இருந்த இரா­ணுவ நிலையை விரி­வாக்­கு­கி­றது.

யாழ்ப்­பாண நக­ரின் மையத்­துக்­குள், சுற்­று­லாத்­து­றைக்கு முக்­கி­யத்­து­வம் வாய்ந்த ஓர் இடத்­தில் பொது நிர்­வா­கத்­தின் அனு­மதி இன்றி இவ்­வாறு இரா­ணு­வம் முகாம் அமைப்­பது அடக்­கு­மு­றை­யின் ஓர் வடி­வம். தான் நினைத்­ததை எந்­தச் சட்ட திட்­டங்­க­ளுக்­கும் அடங்­கா­மல் நிறை­வேற்­றும் அதி­யு­யர் அதி­கா­ரம் வடக்­கில் இரா­ணு­வத்­துக்கு இருக்­கி­றது என்­பதை நிரூ­பிக்­கும் வகை­யி­லேயே இது அமைந்­துள்­ளது.

அத்­தோடு மாகாண அரச அதி­கா­ரத்துக்கும், கொழும்பு அர­சின் அதி­கா­ரத்துக்கும் இடை­யில் இருக்­கும் முரண்­பா­டு­ களை இன்­னும் வளர்க்­கும் விதத்­தில் இரா­ணு­வத்­தின் இந்­தச் செயல் அமைந்­துள்­ளது. மாகாண சபை­கள் சட்­டத்­தின் கீழ் காணி அதி­கா­ரம் மாகாண அர­சுக்கு உரி­யது என்­கி­ற­ போ­தும், கொழும்பு அர­சின் ஒவ்­வொரு துறை­க­ளும், திணைக்­க­ளங்களும் மாகா­ணத்­தில் உள்ள காணி­க­ளைத் தங்­கள் விருப்­பப்­படி பிடித்­தும் எல்­லை­யிட்­டும் தாம் பயன்­ப­டுத்­திக்­கொள்­வது காணி அதி­கா­ரப் பகிர்­வைக் முற்­றி­லு­மா­கக் கேள்­விக்­குள்­ளாக்­கு­கி­றது.

யாழ். கோட்டை தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­திற்­குக் கீழேயே இருக்­கின்­றது. அத­னால் மாகாண அதி­கா­ரி­க­ளி­னதோ, ஒருங்­கி­ணைப்­புக் குழு­வி­னதோ அனு­ம­தி­யைப் பெறா­ம­லேயே அங்கு முகாம் அமைக்க முடி­யும் என்­கிற வகை­யில்­தான் இந்­தச் செயற்­பாடு இருக்­கின்­றது. யாழ். நாக விகா­ரா­தி­ப­தி­யின் இறு­திச் சடங்­கு­கள் கோட்­டையை அண்­டிய முற்­ற­வெ­ளிப் பகு­தி­யில் நடந்­த­போ­தும்­கூட இது­போன்­ற­தொரு பிரச்­சி­னையே இருந்­தது. மாந­கர சபை­யின் அனு­ம­தி­யைப் பெறா­மல் தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் அனு­ம­தி­யு­டன் அந்த இறு­திக் கிரியை நடத்­தப்­பட்­டது.

இது­போன்ற நடவ­டிக்­கை­கள் அதி­கா­ரப் பகிர்­வையே அர்த்­த­மற்­ற­தாக்­கு­கின்­றன. இரா­ணு­வ­மும், கொழும்­பின் திணைக் க­ளங்­க­ளும் மாகா­ணங்­க­ளின் அதி­கா­ரங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் தாம் நினைத்­த­படி தான்­தோன்­றித்­த­ன­மாக மாகா­ணத்­தின் வளர்ச்சி, வரு­மா­னம் என்­ப­வற்­றைக் கவ­னத்­தில்­கொள்­ளா­மல் செயற்படுவது இரு அதி­கார அல­கு­க­ளுக்­கும் இடை­யில் நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­க­ளுக்கு ஒரு­போ­தும் வழி­வ­குக்­காது.

எல்­லா­வற்­றுக்­கும் மேலாக இரா­ணு­வம் முற்­றி­லும் சிங்­க­ள­வர்­க­ளைக் கொண்­டி­ருப்­ப­தைப் போலவே, தொல் பொ­ருள் திணைக்­க­ள­மும் பெரும்­பான்­மை­யா­கச் சிங்­க­ள­வர்க­ளைக் கொண்­டி­ருப்­ப­துமே இது­போன்ற செயல்­கள் இல­கு­வாக நடப்­ப­தற்கு ஏது­வா­கின்­றன என்­கிற எண்­ணத்­தை­யும் இல­கு­வாக உரு­வாக்­கி­வி­டக்­கூ­டும்.

எனவே கோட்­டைக்­குள் இரா­ணுவ முகாம் அமைக்­கும் பணி­கள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்­டும். கோட்­டை­யின் பாது­காப்­புக்­குப் படை­யி­னர் தேவை எனில், அதற்கு மாற்று ஏற்­பா­டு­க­ளைச் செய்­ய­வேண்­டுமே தவிர, சுற்­று­லா­வி­க­ளுக்­கும் இடைஞ்­சல் ஏற்­ப­டுத்­தும் வகை­யிலோ, அசூசை ஏற்­ப­டுத்­தும் வகை­யிலோ, கோட்­டைக்­குள் இரா­ணு­வத்­தின் இருப்பு அனு­ம­திக்­கப்­ப­டக்­கூ­டாது.

You might also like
X