கோத்தபாயவை கொடூரமாக சித்தரிக்கும் கூட்டமைப்பு!!

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கொடூரமானவர் என்று தமிழ் மக்கள்முன்பாகக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சித்திரிக்கின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
ஒரு இனத்தின் தேவைக்காக மாத்திரம் 30 ஆண்டு கால சிவில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. போரால் தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய தேவை தமிழ் மக்கள் மத்தியிலும் காணப்பட்டது. போரின்போது விடுதலைப் புலிகள் தமிழ் மக்களைத் தங்கள் பாதுகாப்புக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டே இராணுவத்தினர் எதிர்கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் பிடிக்குள் அகப்பட்ட தமிழ் மக்களை இராணுவத்தினரு பாதுகாத்தனர் என்பதை உறுதியாகக் குறிப்பிட முடியும். போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் ரீதியான உரிமைகள் வடக்கு மக்களுக்குக் கடந்த அரசால் மாகாணத் தேர்தல் ஊடாக வழங்கப்பட்டது. அந்த உரிமைகளைக் கூடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தக்க வைத்துக் கொள்ளவில்லை.- என்றார்.

You might also like