சஜித் – ராஜித இரகசியப் பேச்சு!!

அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­ம­தாச மற்­றும் ராஜித சேனா­ரத்ன ஆகி­யோ­ருக்கு இடையே நேற்று மூடிய அறைக்­குள் சந்­திப்பு ஒன்று நடந்­துள்­ளது.

தற்­போது ஏற்­பட்­டுள்ள அரச தலை­வர் வேட்­பா­ளர் முரண்­பா­டு­கள் தொடர்­பா­கவே இரு­வ­ரும் பேசிக் கொண்­ட­னர் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இந்­தச் சந்­திப்பு சுகா­தார அமைச்­சில் நடந்­துள்­ளது. சந்­திப்­பில் பிர­பல பிக்கு ஒரு­வ­ரும் கலந்­து­கொண்­டார் என்­றும் அந்­தப் பிக்­கு­வின் ஏற்­பாட்­டி­லேயே இந்­தச் சந்­திப்பு நடந்­தது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சந்­திப்பு இரு மணி நேரம் நடந்­துள்­ளது.

அரச தலை­வர் தேர்­த­லுக்­கான அர­சி­யல் கூட்­டணி தொடர்­பாக இந்­தச் சந்­திப்­பில் விரி­வா­கப் பேசப்­பட்­டது என்­றும், கூட்­ட­ணியை அறி­வித்த பின்­னர் வேட்­பா­ள­ரைத் தீர்­மா­னிக்­க­லாம் என்று கொள்­கை­ய­ள­வில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது என்­றும் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

கட்­சி­யின் தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கப்­ப­டாத நிலை­யில் சஜித் மக்­கள் முன்­சென்று வாக்­கு­று­தி­கள் வழங்­கு­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்று அமைச்­சர் ராஜித கேட்­டுக் கொண்­டார் என்று அறிய முடி­கின்­றது.

வேட்­பா­ளர் தெரி­வைக் கூட்­டணி அமைத்த பின்­னர் தீர்­மா­னிக்­க­லாம் என்ற விட­யத்­தில் சஜித்­தின் இணக்­கப்­பாட்டை தலைமை அமைச்­ச­ருக்கு ராஜித தெரி­விப்­பார் என்று அறிய முடி­கின்­றது.

அதே­வேளை, வேட்­பா­ளரை அறி­வித்த பின்­னரே கூட்­ட­ணியை அமைக்­க­லாம் என்று சஜித் தரப்பு ஆத­ர­வா­ளர்­கள் கோரி வரு­கின்­ற­னர் என்ற தக­வ­லும் வெளி­யா­கி­யி­ருந்­தது.

You might also like