side Add

சதி­கா­ரர்­க­ளைத் தோற்­க­டித்­தது மக்­கள் விடு­தலை முன்­ன­ணியே!

‘‘நவம்­பர் 14ஆம், 16ஆம் திக­தி­க­ளில் நாடா­ளு­மன்­றத்­தில் மகிந்த ராஜ­பக்ச சட்­ட­வி­ரோ­த­மா­கத் தலைமை அமைச்­ச­ராக்­கப்­பட்­ட­தற்­கும், அந்த அர­சுக்­கும் எதி­ராக மக்­கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னங்­கள் இரண்­டும் நிறை­வே­றி­யி­ருந்­தன. அதைச் சதி­கா­ரர்­கள் ஏற்­றுக்­கொள்­ளா­விட்­டா­லும், அத­னால், அவர்­கள் தோற்­க­டிக்­கப்­பட்டு நிர்­வா­ண­மாக நிற்­கின்­றார்­கள். அத­னால் சதி­கா­ரர்­க­ளைத் தோற்­க­டித்த கௌர­வம் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யையே சாரும்’’ மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் சார்­பில் வெளிப்­ப­டுத்­தப்­ப­டும் கருத்­துக்­கள் இவை.

இன்­றைய நிலை­யில் இலங்கை நாடா­ளு­மன்­றத்தை மைய­மா­கக் கொண்டு பகுதி பகு­தி­யாக நடிக்­கின்ற நாட­கம் (கேளிக்கை) துன்­பி­யல் நாட­க­மாக மாறி­யுள்­ளது. தமது அதி­கா­ரப் பேரா­சை­யின் நிமித்­தம் மைத்­திரி –மகிந்த இணைந்து தயா­ரித்த அர­சி­யல் சதி முழு நாட்­டை­யும் அரா­ஜக நிலைக்­குள்­ளாக்கி நிலை­யற்ற தன்­மை­யைத் தோற்­று­வித்­துள்­ளது. நாட்டை இழிவு படுத்­தி­யுள்­ளது. வெண்­ணிற ஆடை­க­ளு­டன் கழுத்­துப் பட்­டி­யை­யும் ‘கோர்’ட்­டை­யும் அணிந்­து­கொண்­டி­ருக்­கும் (முத­லா­ளித்­து­வத்­தின் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­க­ளா­கச் செயற்­ப­டு­கின்ற) நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் வெளிப்­ப­டுத்­திய ‘தலை சிறந்த நடிப்பு’ நம் நாட்டு வர­லாற்­றில் என்­றும் அழி­யாத கரும் புள்­ளியை இட்­டுள்­ளது.

நெருக்­கடி இன்­ன­மும் முற்­றுப்­பெ­ற­வில்லை
சட்ட விரோத அர­சைப் பல­வந்­த­மா­கக் கொண்டு செல்­வ­தற்­காக மைத்­திரி – மகிந்த முயன்று வரு­கின்­ற­னர். ஐ.தே.கட்­சி­யின் தலை­வர் தமக்கு அல்­லாது போன அதி­கா­ரத்தை மீளப் பெற்­றுக் கொள்­வ­தற்­கான வழி­க­ளைத் தேடிக்­கொண்­டி­ருக்­கி­றார். அதன் கார­ண­மாக மக்­கள் அன்­றா­டம் அழிவை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால் மக்­கள் இல்­லாது போன ரணி­லின் அதி­கா­ரத்­தைக் காப்­பாற்­று­வ­தையோ, மகிந்­த­வின் தலைமை அமைச்­சர் பத­வி­யைக் காப்­பாற்­று­வ­தையோ நோக்­க­மா­கக் கொண்டு செயல்­ப­டு­வதை விடுத்து நாட்­டை­யும் ஜன­நா­ய­கத்­தை­யும் இந்த இட­ரி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான வழி­யைத்­தே­டு­வதே அனைத்துத் தரப்பினரதும் குறிக்­கோ­ளாக அமை­ய­வேண்­டும். அதற்­காக இந்­தச் சதி­யின் துயர நாட­கத்­தின் பின்­னால் மறைந்­தி­ருக்­கின்ற வர்த்­தக ரீதி­யான அர­சி­யல் தேவை­யைப் புரிந்து கொள்ள வேண்­டும்.

பல பாடங்­கள் கற்­பிக்­கப்­பட்­டுள்­ளன
வர­லாறு ஒரு சம்­ப­வம். அது மக்­க­ளுக்­குப் பல பாடங்­க­ளைக் கற்­றுத்­த­ரு­கி­ற­தென்­பது நமக்­குத் தெரிந்த உண்மை. இந்­தச் சதி­யும் அவ்­வா­றான ஒன்­றா­கும். இதில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள குறிக்­கோள் என்­ன­வா­க­வி­ருந்­தா­லும், உள்­ள­டக்­கத்­தில் அமைந்­தி­ருப்­பது ‘அதி­கா­ரம்’ பற்­றிய பிரச்­சி­னை­யா­கும். அதற்­கி­ணங்க அதி­கா­ரம் பற்­றிய பிரச்­சினை மேல் எழும்­போது முத­லா­ளித்­து­வக் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் எப்­ப­டிச் செயற்­ப­டு­கி­றார்­கள் என்­பதை இதி­லி­ருந்து கற்­றுக்­கொள்ள முடி­யும்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­கா­ரம் தொடர்­பில் நெருக்­க­டிக்கு முகம் கொடுத்­துள்­ளார். அவர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மை­யைத் தம்­மி­டம் தக்­க­வைத்­தி­ருந்த போதி­லும் அவ­ரைத் தனி­மைப்­ப­டுத்­தி­விட்டு மகிந்த ராஜ­பக்ச தனிக்­கட்சி ஆரம்­பித்­த­தும், கடந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­மை­யும், அந்­தத் தேர்­த­லில் மைத்­தி­ரி­பால தரப்­பி­ன­ருக்கு சொற்ப வாக்­கு­களே கிடைத்­த­மை­யும், அத­னால் மைத்­தி­ரிக்­கும் மக்­கள் ஆணைக்­கும் சவால் ஏற்­பட்­டி­ருந்­தது.

இரண்­டா­வது பத­விக் காலத்­துக்­கான கனவு
அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் (அது வரு­மா­னால்) மைத்­தி­ரிக்கு ஜ.தே.கட்­சி­யின் ஆத­ரவு கிடைக்­காது. மகிந்த அணியும் இல்லை. இனி அவர் படு­தோல்வி அடை­வ­தைத் தவிர்க்க முடி­யாது. அதி­லி­ருந்து மீள வேண்­டிய தேவை மைத்­தி­ரிக்கு இருக்­கி­றது. மீண்­டும் ஒரு தடைவ பதவி ‘ருசியை’ அனு­ப­விப்­ப­தற்­கான ஆசை அவ­ரி­டம் மேலோங்­கி­யுள்­ளது. அதற்­காக மகிந்­த­வு­டன் சேர்ந்து மகிந்­த­வின் கூட்­டணி வேட்­பா­ள­ரா­வதே அவ­ருக்­குள்ள ஒரே வழி­யா­கும். அதற்­காக மகிந்­த­வுக்­குச் சொந்­த­மி­லல்­லாத தலைமை அமைச்­சர் பத­வி­யை­யும் அர­சை­யும் பல­வந்­த­மா­கத் திணித்­துள்­ளார் மைத்­திரி. அதற்­கா­கவே இந்­தச் சதி­யா­கும். அத­னால் இந்­தச் சதி மைத்­தி­ரி­யின் இரண்­டா­வது அரச தலை­வர் பத­விக்­கா­லத்­துக்­கான கனவே தவிர வேறு எந்த நோக்­க­மும் கிடை­யாது.

மகிந்­த­வின் பேரா­சைக்­கான பின்­னணி
தமக்­குச் சொந்­த­மில்­லாத தலைமை அமைச்­சர் பத­வி­யை­யும் அர­சை­யும் கையேற்­ப­தற்கு மகிந்த ராஜ­பக்ச முன்­வந்­தி­ருப்­பது ‘அதி­கா­ரம்’ என்­னும் பேரா­சை­யா­லா­கும். அவ­ரால் அதி­கா­ர­மின்றி இருக்க முடி­யாது. அதன் ‘ருசி’ அவ­ருக்­கும் அவ­ரது காவ­லிக் கும்­ப­லுக்­கும் நன்கு தெரி­யும். இந்த நாள்­க­ளில் உலங்கு வானூர்­தி­யில் அவர் பய­ணிப்­ப­தைப் பார்த்­தாலே இது புரி­யும். அவ­ருக்கு ‘அவ­ச­ர­மாக அதி­கா­ரம்’ தேவைப்­பட்­ட­தன் மற்­றைய காரணி தற்­போது விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அது நிச்­ச­ய­மாக அவர் சிறைக்­குச் செல்­ல­வேண்­டிய குற்­ற­வி­யல் வழக்கு மற்­றும் நிதி­மோ­சடி வழக்­கு­க­ளி­லி­ருந்து மீள்­வதற்­கா­னது என்பதாகவே இருக்­கும். தற்­போது அவர்­கள் அதற்­கான நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். மற்றை முக்­கிய விட­யம் அரச தலை­வர் தேர்­த­லுக்­குச் செல்­லாது அதற்­குப் பதி­லாக அதற்கு முன்­னர் பொது­த் தேர்­த­லுக்­குச் செல்­லும் மகிந்த ராஜ­பக்­ச­வின் தேவை­யா­கும்.

மகிந்­த­வும் தேர்­த­லும்
அரச தலை­வர் தேர்­தல் மகிந்­த­வுக்கு ஒரு பொறி­யா­கும். அவ­ரால் அதில் போட்­டி­யிட முடி­யாது. ஆனால் தேர்­தல் வரு­மா­னால் அதற்­குக் கோத்­த­பாய ராஜ­பக்ச அல்­லது வேறு ஒரு­வரை நிய­மித்­தாக வேண்­டும். அதன்­போது அவ­ரது அதி­கா­ரம் குறை­வ­டை­யும் என்­ப­தும் நாம­லின் பாதை தடைப்­ப­டும் என்­ப­தும் அவ­ருக்­குத் தெரி­யும். அத­னால் அவ­சர பொது தேர்­த­லுக்­குச் செல்­வதே மகிந்­த­வின் நோக்­க­மா­கும். அதன்­போது அரச அதி­கா­ரத்தை (சட்ட விரோ­த­மாக) தமது கையில் வைத்­தி­ருப்­பது அவ­ருக்­குச் சாத­க­மா­க அமையும். அதற்­கா­கவே இந்­தச் சதி­யில் மகிந்த ஈடு­பட்­டார். கடந்த 15ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­தில் நிகழ்ந்த அவ­ரது உரை­யில் போதுத் தோத­லுக்­குச் செல்­வ­தற்­கான தெரி­வைக் கேரி­யி­ருந்­தார். இப்­ப­டி­யாக நாட்­டின் இயல்பு நிலை­யைக் குலைத்து, இழி நிலைக்­கும், அவ­மா­னத்­துக்­குள்ளும் தள்­ளிய இந்த அர­சி­யல் சூதாட்­டம் வேறு எதற்­கா­க­வும் அல்ல. அதி­கார மோகத்­துக்­காக இடம்­பெற்ற ஒன்றே ஆகும்.

மக்­க­ளுக்கு மாயை அளிக்­கின்­ற­னர்
அதி­கா­ரம் தொடர்­பி­லான பிரச்­சி­னை­யின்­போது ஆட்­சி­யா­ளர்­க­ளால், உயர்­வா­ன­தென மக்­க­ளுக்­குத் தெரி­விக்­கின்ற எண்­ணக்­க­ரு­வை அவர்களே சிதைத்து வரு­வது இந்த நாள்­க­ளில் நாட­க­மா­கக் காட்­டப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளா­லேயே(முத­லா­ளித்­துவ ஆட்­சி­யா­ளர்­க­ளால்) அர­ச­மைப்பு மீறப்­ப­டு­கின்­றது. அதி உயர்­வா­ன­தென அவர்­கள் குறிப்­ப­டும் நாடா­ளு­மன்­றம் சின்­னா ­பின்­ன­மாக்­கப்­ப­டு­கின்­றது. பெரும்­பான்மை பற்­றிய எண்­ணக்­கரு, நெறி­மு­றை­கள், சம்­பி­ர­தா­யங்­கள் அனைத்­தும், சுனா­மி­யில் அகப்­பட்­டது போன்று அழி­வ­டைந்து போயுள்­ளன. அவர்­க­ளின் முத­லா­ளித்­துவ ஜன­நா­ய­கம் போலித் தன­மா­ன­தும், பொய்­யா­ன­தும் என்­பதை அவர்­களே நிரூ­பித்­துள்­ள­னர். இத­னி­டையே முத­லா­ளித்­துவ அர­சி­யல் அற­நெ­றி­க­ளின் தோற்­றம் மற்­றும் உள்­ள­டக்­கம் தொடர்­பான படத்தை மக்­கள் ஏற்­றுக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. முத­லா­ளித் துவ அர­சி­யல் வாதி­கள் மக்­களை ஏமாற்­று­வது, ஒழுக்­கம் நன்­ன­டத்தை உள்­ள­வர்­க­ளாக அல்­லது தேசப்­பற்­றுள்ள தலை­வர்­க­ளா­கத் தம்­மைக் காட்­டு­வ­தன் மூல­மா­கும். அதற்­காக அவர்­கள் ஆடை­களை (துணி) பயன்­ப­டுத்­து­கி­றார்­கள். அவர்­க­ளில் பலர் வெண்­ணிற ஆடை­க­ளையே அணி­கின்­ற­னர். அதற்­காக அவர்­கள் தனி­யான உடை­க­ளைத் தயா­ரித்­துள்­ள­னர். அது மக்­களை ஏமாற்­று­வ­தற்­கா­கும்.

ஆடை­யு­டுத்­தும் விதத்­தில் மாத்­தி­ரம் ஜொலிப்­பது
சிலர் கன­வான்­க­ளைப் போன்று கழுத்­துப்­பட்டி, கோர்ட் அணி­கின்­ற­னர். அதி­க­மா­னோர் காற்­சட்­டைக்கு மேலாக வெள்ளை உடை­களை அணி­கி­றார்­கள். கடந்த காலத்­தில் பிறப்­பி­லேயே கழுத்­துப் பட்­டி­யும், கோர்ட்­டும் அணிந்த பண்­டார நாயக்கா அர­சி­ய­லில் பெரும்­பான்­மைச் சிங்­க­ள­வர்­களை ஏமாற்­று­வ­தற்­காகத் தேசிய உடைக்கு மாறி­யி­ருந்­தமை யாவ­ரும் அறிந்த உண்­மை­யா­கும். மிக­வும் காவாலி அர­சி­யல்­வா­தி­யான ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன கழுத்­துப்­பட்டி, கோர்ட் டைக் கைவிட்­டுத் தேசிய உடைக்கு மாறி­ய­வ­ரா­வார். மகிந்த ராஜ­பக்­ச­வும் அவ்­வா­றா­ன­வரே ஆவார். அவர்­கள் ஆடை மாற்­றி­ய­தற்­கான முதன்­மைக் காரணி மக்­களை ஏமாற்றி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­று­வ­தற்­கா­கும். ஆனால், தற்­போது ஆளும் வர்க்­கத்­தின் நெருக்­கடி அனைத்­தை­யும் தலை­கீ­ழா­கக் கவிழ்த்­துள்­ளது. அதி­கா­ரத்­துக்­காக ஆடை அணிந்­த­வர்­க­ளுக்­குத் தற்­போது அதி­கா­ரத்­துக்­கா­கவே ஆடை­க­ளைக் களைந்­தும் ஆட­வேண்­டி­யி­ருக்­கி­றது. வெள்ளை ஆடை­க­ளின் மீது மிள­காய்த் தூள் வீசப்­ப­டு­ம் நிலையும் இதன்போது உருவாகிறது. அவ்­வா­றான நிலை­யில், இந்த அர­சா­னது ஆடை அணிந்­து­கொண்டு இருக்க முடி­யா­தென வெளிப்­ப­டை­யா­கவே கூறி­ய­வர் மகிந்த ராஜ­பக்ச சார்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் குமார வெல்­கம.

நிர்­வா­ண­மாக நிற்­போர்
இந்த நெருக்­க­டிக்­குள் மைத்­திரி – மகிந்த உள்­ளிட்ட சதி­கா­ரக் கும்­பல் ஆடை­களை அவிழ்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது. அவை ஜன­நா­ய­கத்­தின் ஆடை­க­ளா­கும், அர­சி­யல் அற­நெ­றி­யின் ஆடை­க­ளா­கும். இப்­போது அவர்­கள் முழு நிர்­வா­ண­மா­கி­ யுள்­ள­னர். ரணி­லின் நிலை­யும் அவ்­வா­றா­னதே. தலைமை அமைச்­சர் பத­வி­யில்­லாத நிலை­யில் இன்­ன­மும் அலரி மாளி­கை­யில் தங்­கி­யி­ருந்து அவ­ரும் தன்­னு­டைய வெட்­கக்­கே­டான நிலையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். அதி­கா­ரம் தொடர்­பான பிரச்­சி­னை­யில் அவ­ரும் ஆடை­க­ளைக் களைந்து நிர்­வா­ண­மா­கவே நிற்­கி­றார். மக்­கள் கற்­றுக்­கொள்­வ­தற்­குத் தேவை­யான முக்­கிய பாடங்­கள் இவை­யா­கும். எவ்­வா­றா­யி­னும் முத­லா­ளித்­துவ அர­சி­ய­லில் ஊறிப்­போ­ன­வர்­க­ளின் திட்­ட­மிட்ட சதி இப்­போது பல சுற்­று­க­ளா­கத் தோல்­லி­ய­டைந்­து­விட்­டது. இதன் முலா­வது தோல்வி கடந்த மாதம் 13ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­தில் நிகழ்ந்­தது. அது அரச தலை­வ­ரின் வர்த்­த­மா­னிக்கு இடைக்­கா­லத் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­த­மை­யா­கும். அரச தலை­வர் ஒரு­வ­ரு­டைய அதி­வி­ஷேட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு நீதி­மன்று தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­தமை வர­லாற்­றில் இதுவே முதல் முறை­யுமா­கும்.

மக்­கள் முன்­னணி கொண்டு வந்த தீர்­மா­னங்­கள்
இந்­தச் சதி­யின் இரண்­டா­வது தோல்­வி­யாக, நவம்­பர் 14ஆம், 16ஆம் திக­தி­க­ளில் நாடா­ளு­மன்­றத்­தில் மகிந்த ராஜ­பக்­ச­வின் சட்­ட­வி­ரோத தலைமை அமைச்­சர் பத­விக்­கும், அர­சுக்­கும் எதி­ராக மக்­கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னங்­கள் இரண்­டும் நிறை­வே­றி­யி­ருந்­த­ தைக் குறிப்­பி­ட­லாம். அதைச் சதி­கா­ரர்­கள் ஏற்­றுக்­கொள்­ளா­விட்­டா­லும், அத­னால், அவர்­கள் இன்று தோற்­க­டிக்­கப்­பட்டு நிர்­வா­ண­மாக நிற்­கின்­றார்­கள். மகிந்த ராஜ­பக்ச அர­சுக்­குப் பெரும்­பான்மை இல்லை என்­பது தெளி­வா­கி­யி­ருக்­கி­றது. மகிந்த வாதி­கள் நாடா­ளு­மன்­றில் பேயாட்­டம் ஆடு­வ­தும், அத­னா­லேயே ஆகும். அத­னால் சதி­கா­ரர்­க­ளைத் தோற்­க­டித்த கௌர­வம் மக்­கள் விடு­தலை முன்­ன­ணிக்கே சாரும். மகிந்த வாதி­க­ளுக்கு அதைத் தாங்­கிக் கொள்ள முடி­யா­த­தால், மக்­கள் விடு­தலை முன்­ன­ணிக்கு எதி­ராக அவ­தூ­று­களை அள்­ளி­வீசி எறிந்து வரு­கி­றார்­கள்.

மக்­க­ளுக்­குள்ள பொறுப்பு
சதி­க­ளில் தோல்­வி­ய­டைந்த மைத்­திரி தற்­போது இறு­திச் சந்­தர்ப்­பத்­தி­லும் மீண்­டும் காட்­டிக்­கொ­டுத்­துத் தம்மை மீட்­ப­தற் கான செயற்பாடுகளில் ஈ­டு­வ­தைக் காண முடி­கின்­றது. நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வே­றிய நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யில் தமக்­குப் பாத­க­மான பகு­தியை அகற்­றி­விட்டு மகிந்­த­வின் தலைமை அமைச்­சர் பதவி இல்­லா­மல் போகும் யோச­னை­யில் மைத்­திரி தலை­யீடு செய்து வரு­வ­தாக அர­சி­யல் அவ­தா­னி­கள் தெரி­விக்­கின்­ற­னர். அவர்­கள் தெரி­விக்­கும் கருத்து உண்­மை­யா­னால், இது அவரின் அர­சி­யல் சந்­தர்ப்ப வாதத்­தைக் கோடிட்­டுக் காட்­டு­வதாக அமையும். இப்­போது நமது சமூ­கத்­துக்­குப் பொறுப்­பொன்று இருக்­கி­றது. வாக்­கா­ளர்­க­ளுக்கு முன்­னால், வெள்ளை ஆடை அணிந்து, கையில் பிரித் நூல் கட்­டிக்­கொண்டு, புத்­த­ரா­கத் தோற்­ற­ம­ளிக்­கின்ற முத­லா­ளித்­துவ அர­சி­யல் வாதி­கள் உண்­மை­யில் முக­மூ­டி­ய­ணிந்த அரக்­கர்­கள் என்­பதை முத­லில் புரிந்து கொள்ள வேண்­டும். அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­று­வ­தற்­குத் தேவைப்­பட்­ட­வு­டன் செயற்­ப­டு­வ­தும், அதற்கு இடை­யூறு ஏற்­பட்­ட­தும் அவர்­க­ளின் கீழான நடத்­தை­க­ளும் அவர்­க­ளின் உண்­மை­யான வெறித்­த­னத்­தின் அடை­யா­ளங்­கள். இவர்­கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் என்­பதை இப்­போ­தா­வது புரிந்து கொள்ள வேண்­டும். அந்த அர­சி­யல் சாக்­க­டை­யைக் களத்­தி­லி­ருந்து பிரித்­தெ­றி­வது பொது மக்­க­ளின் பொறுப்­பா­கும்.

இந்த நாட்­டில் ஜன­நா­ய­கம் ஆபத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளது. அதைப் புரிந்து கொள்ள வேண்­டும். அரச மாளிகை முன்­னெ­டுத்த சதி­க­ளால், அரசை மாற்­று­வ­தான மக்­க­ளின் இறை­மை­யைக் கேலி செய்­கின்ற இந்த அர­சி­யல் கலா­சா­ரத்­தைத் தோற்­க­டிக்க வேண்­டும். அதற்­காக ஜன­நா­ய­கம் சமூக நியா­யம், தேசிய ஒற்­றுமை, அர­சி­ய­லில் அற­நெ­றி­களை முதன்­மை­யா­கக் கொண்ட மிகப் பிர­மாண்­ட­மான அர­சி­யல் இயக்­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கும் அதை வெற்றி பெறச் செய்­வ­தற்­கும் முன்­னிலை வகிப்­பது இந்­தத் தரு­ணத்­தில் அனைத்து இடது சாரிய சக்­தி­கள் மற்­றும் ஜன­நா­ய­கத்தை நேசிக்­கின்ற சக்­தி­க­ளின் பொறுப்­பு­க­ளா­கும். அதற்­கான நல்­ல­தொரு சந்­தர்ப்­பமே இது.

 

You might also like