சத்­தி­ய­வாக்கு!

வரு­டங்­கள் 33 கடந்­தோ­டி­விட்­டன, உத­யன் பத்­தி­ரிகை தொடங்­கப்­பட்டு. பல ஆட்­சி­கள், பல அர­சி­யல் சூழல்­கள், பல அச்­சு­றுத்­தல்­கள், பல அடக்­கு­மு­றை­கள், பல போட்­டி­கள், பல சூழ்ச்­சி­கள் என எல்­லா­வற்­றை­யும் கடந்து வந்த இந்த நீண்ட நெடிய பய­ணம் உத­ய­னைப் பொறுத்­த­வ­ரை­யில் இல­கு­வா­ன­தாக அமைந்­த­தில்லை.

நித்­தி­ய­கண்­டம் பூரண ஆயுள் என்­ப­தைப் போலவே ஒவ்­வொரு நாளை­யும் கடந்து வந்­தி­ருக்­கி­றான் உத­யன். எல்­லாக் காலங்­க­ளி­லும் அவ­னது ஒரே ஆறு­த­லும் பல­மு­மாக இருந்த, தமது உயி­ருக்கு நிக­ராக உத­யனை விரும்­பும் வாச­கர்­களே என்­றும் அவ­னது உறு­தி­யான பய­ணம் தொடர்­வ­தற்­குக் கார­ண­மாக இருந்­தி­ருக்­கி­றார்­கள், இருக்­கி­றார்­கள்.

அச்­சு­றுத்­தல்­க­ளும் ஆபத்­துக்­க­ளும் கூடவே வரு­பவை என்­ப­தால் அவை பற்றி என்­றும் உத­யன் அலட்­டிக் கொண்­ட­தில்லை. ஆனால், அதி­க­ரித்­து­வ­ரும் அச்­சுப் பொருள்­க­ளின் விலை­யேற்­றம் மற்­றும் அதி­க­ரித்­து­வ­ரும் விலை­வாசி உயர்­வுக்கு மத்­தி­யில் பத்­தி­ரி­கையை அச்­சி­டு­வதே பெரும் சவால் என்­கிற நிலையை நோக்­கிக் காலம் நகர்ந்­து­கொண்­டி­ருப்­பது குறித்து உத­யன் தற்­போது உண்­மை­யி­லேயே அச்­ச­ம­டைந்­துள்­ளான். அச்­சுத்­தாள்­கள் இன்­மை­யும் அச்­சுப் பொருள்­க­ளுக்­கான தட்­டுப்­பா­டும் ஏற்­க­னவே உத­யன் கடந்­து­வ­ராத பாதை­கள் அல்ல.

90களில் யாழ்ப்­பா­ணக் குடா­நாடு கொழும்பு அர­சின் பொரு­ளா­தார முற்­று­கைக்­குள் தள்­ளப்­பட்­டி­ருந்த காலத்­தி­லும் அச்­சுத் தாள்­க­ளைப் பெறு­வ­தும் அச்­சுப் பொருள்­க­ளைப் பெறு­வ­தும் பெரும் – கடும் சவா­லா­ன­தா­கவே இருந்­தது.ஆனால் உத­யன் சளைத்­துப்­போ­னா­னில்லை. அன்று சந்­தை­யில் கிடைத்த எந்த அச்­சுத் தாளில் ஆயி­னும் நாளி­தழ் வெளி­வந்­து ­கொண்டே இருந்­தது. ஒவ்­வொரு நாளி­லும் ஒவ்­வொரு அள­வில் வெவ்­வேறு வண்­ணங்­க­ளில் நாளி­தழ் வெளி­யான நாள்­கள் அவை. ஆனால் அன்­றி­ருந்த நில­மை­யு­டன் ஒப்­பி­டும்­போது இன்று நிலமை முற்­றி­லும் வேறா­னது.

தொடர்­பு­சா­த­னங்­க­ளின் பெருக்­கம், இணை­யத் தளப் பயன்­பாட்­டின் அதி­க­ரிப்பு என்­ப­வற்­றால் ஏற்­பட்­டி­ருக்­கும் மின்­னி­யல் ஊடக வளர்ச்­சிக்கு மத்­தி­யில் அச்­சுப் பொருள்­க­ளின் விலை­யேற்­ற­மும் பன்­னாட்­டுச் சந்­தை­யில் அச்­சுறுத் தல்களாக ஏற்­பட்­டு­வ­ரும் தட்­டுப்­பா­டும் மிகப் பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி வரு­கின்­றன. அதற்கு ஈடு­கொ­டுத்து பத்­தி­ரி­கையை வெளி­யி­டு­வது என்­பது இமா­லய சாத­னை­யா­கி­வி­டு­கின்­றது. இத்­த­கைய நேரத்­தில் உத­ய­னைத் தாங்­கிப் பிடிப்­ப­வர்­கள் எமது விளம்­ப­ர­தாரர்­களே!

வாசிப்­புப் பழக்­கம் அரு­கி­வ­ரும் இளம் தலை­மு­றை­யொன்றை பெருக்கி வரும் இந்­த­வே­ளை­யில் இது­போன்ற சவால் அச்சு ஊட­கங்­க­ளின் எதிர்­கா­லத்­தையே கேள்­விக்­கு­றி­யாக்­கி­வி­டும். மேற்கு நாடு­க­ளில் கடந்த 15 ஆண்­டு­க­ளில் இத­னைக் காண நேர்ந்­தி­ருக்­கி­றது. அங்­கெல்­லாம் செய்­திப் பத்­தி­ரி­கை­க­ளும் இதழ்­க­ளும் தமது அச்­சுப் பதிப்­பைச் சுருக்­கிக்­கொண்டு இணை­யப் பதிப்­புக்கு மாற­வேண்­டி­ய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. போகிற போக்­கில் அத்­த­கைய நிலை இங்­கும் தோன்­றுமோ என்­கிற அச்­சத்தை அச்­சுப் பொருள் சந்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

இதை­யெல்­லாம் தாண்டி, தொடர்ந்­தும் உத­யனை எப்­ப­டி­யே­னும் வெளி­யிட்­டே­யா­க­வேண்­டும் என்று நாம் அர்ப்­ப­ணிப்­புக் கொண்­டி­ருப்­ப­தற்கு நாள்­தோ­றும் உத­யனை வாங்­கிப் படிப்­ப­தற்­கா­க­வென்றே காத்­தி­ருக்­கும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வாச­கர்­க­ளா­கிய நீங்­கள், மட்­டுமே கார­ணம்.

தெரிந்தோ தெரி­யா­மலோ உத­யன் நவம்­பர் 27ஆம் திகதி வெளி­வந்­தமை தமி­ழர்­க­ளின் அர­சி­யல் வர­லாற்­றில் நிகழ்ந்த மற்­றொரு பரி­ண­மிப்பு. தமி­ழர்­க­ளின் விடு­த­லைக்­கா­க­வும் தமிழ்த் தேசி­யத்­துக்­கா­க­வும் தமது இன்­னு­யிர்­களை ஈகம் செய்த மாவீ­ரர்­க­ளின் தின­மும் உத­ய­னின் பிறந்த தின­மும் ஒன்­றா­கி­யி­ருப்­பது வர­லாற்­றில் உத­ய­னின் பணி என்­பதை காலம் நிர்­ண­யம் செய்­தி­ருக்­கி­றது என்றே கூற­வேண்­டும்.

தமி­ழர்­க­ளுக்­கா­க­வும் தேசி­யத்­துக்­கா­க­வும் தம­து­யிரை ஈகம் செய்த அனை­வ­ரை­யும் மன­தி­ருத்தி துணி­வு­ட­னும் நேர்­மை­யு­ட­னும் உண்­மை­யைத் தேடும் தனது பணியை உத­யன் தொட­ரும் என்று இன்­றைய தினத்­தில் மீண்­டும் ஒரு­முறை சத்­தி­ய­வாக்­கு­ரைக்­கின்­றோம்.

You might also like