சந்திரிகாவின் மீள் வருகையும்- அரசியல் குழப்பங்களும்!!

முன்­னாள் அரச தலை­வ­ரான சந்­தி­ரிகா தீவிர அர­சி­ய­லுக்­குள் நுழை­வ­தற்­கான அறி­கு­றி­கள் தெளி­வா­கத் தென்­பட ஆரம்­பித்­து­விட்­டன.
அவர் அண்­மை­யில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் மைத்­திரி மற்­றும் மகிந்­த­வின் அர­சி­ய­லுக்கு முடிவு கட்­டு­வேன் என்று தெரி­வித்­துள்­ளமை இதை உறுதி செய்­கின்­றது.

மைத்­தி­ரி­யைத் துரோகி என­வும் மகிந்­த­வைக் கொலை­கா­ரன் என­வும் அவர் பகி­ரங்­க­மாக விமர்­ச­னம் செய்­துள்­ளமை இவர்­கள் மீது சந்­தி­ரிகா கொண்­டுள்ள கடு­மை­யான வெறுப்­பையே எடுத்­துக் காட்­டு­கின்­றது. இவர்­கள் சுதந்­தி­ரக் கட்­சி­யில் முக்­கிய பொறுப்­புக்­களை வகித்­த­வர்­கள். ஒன்­றா­கச் செயற்­பட்டு வந்­த­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சந்­தி­ரி­கா­வின் மறு­வ­ருகை
ரணி­லுக்­குச் சாத­க­மா­னது
சந்­தி­ரி­கா­வின் மீள் அர­சி­யல் பிர­வே­சம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­குச் சாத­க­மாக அமை­யப் போகின்­றது என்­ப­தைக் கூற­மு­டி­யும். ஏனென்­றால் அவ­ருக்கு எதி­ரான வாக்­கு­கள் பிரிக்­கப்­ப­டு­வது அவ­ரது வெற்­றி­வாய்ப்பை உறு­தி­செய்­து­வி­டு­மென்­பதை மறுப்­ப­தற்­கில்லை. சந்­தி­ரிகா அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாது என்­ப­தால் அவர் தமக்கு நம்­பிக்­கை­யான ஒரு­வ­ரைத் தேர்­த­லில் நிறுத்­த­லாம் அல்­லது தமக்கு வேண்­டிய ஒரு­வ­ருக்கு ஆத­ர­வைத் தெரி­விக்க முடி­யும். சந்­தர்ப்­பத்­தைப் பொறுத்து அவர் ஒரு முடிவை எடுப்­பா­ரென எதிர்­பார்க்க முடி­யும்.

மகிந்த தரப்­பி­லி­ருந்­தும், மைத்­திரி பக்­க­மி­ருந்­தும் பலர் சந்­தி­ரி­கா­வின் பக்­கம் தாவு­வ­தற்­கான அறி­கு­றி­கள் காணப்­ப­டு­கின்­றன. மைத்­திரி சில­வேளை இரண்­டா­வது தட­வை­யா­க­வும் போட்­டி­யிட நினைத்­தால் அது அவ­ரின் வெற்­றியை நிச்­ச­ய­மாக பாதிக்­கவே செய்­யும். அதை­வி­டுத்து மைத்­திரி, மகிந்த தரப்­புக்கு ஆத­ரவு தெரி­விக்க விரும்­பி­னா­லும் அவர் பக்­கம் உள்­ள­வர்­கள் சந்­தி­ரிக்கா தரப்­புக்கு ஆத­ரவு தெரி­விக்­கவே விரும்­பு­வார்­கள். இது­வும் மகிந்த தரப்­புக்கு நல்ல சகு­ன­மாக அமை­யாது.

ஆகவே சந்­தி­ரி­கா­வின் வரு­கை­யால் மைத்­திரி, மகிந்த இரு­வ­ருமே பாதிக்­கப்­ப­டப்­போ­கி­றார்­கள்.அண்­மை­யில் இடம்­பெற்ற அர­சி­யல் குழப்­பத்­துக்கு மைத்­திரி, மகிந்த இரு­வ­ருமே கார­ண­மாக இருந்­துள்­ள­னர்.

சுமார் 51 நாள்­கள் நீடித்த இந்­தக் குழப்­பம் நாட்­டை­யும் மக்­க­ளை­யும் வெகு­வா­கப் பாதித்­து­விட்­டது. இத­னால் இவர்­கள் இரு­வ­ருமே மக்­க­ளின் வெறுப்­பைச் சம்­பா­தித்­துள்­ள­னர். இந்­தக் தாக்­கம் தேர்­தல்­க­ளில் எதி­ரொ­லிக்­கும் என்­பதை உறு­தி­யா­கக் கூற­மு­டி­யும்.

சந்­தி­ரிக்கா தமி­ழர்­க­ளின்
மீட்­பர் அல்­லர்
தமி­ழர்­க­ளைப் பொறுத்த வரை­யில் அவர்­க­ளும் சந்­தி­ரி­கா­வால் ஏமாற்­றப்­பட்­ட­வர்­கள்­தான். அவர் தம்­மை­யொரு சமா­தா­னத் தேவ­தை­யா­கக் காட்­டிக்­கொண்டே அரச தலை­வர் தேர்­த­லில் முதல் தடவை போட்­டி­யிட்­டார். தாம் போருக்கு முடிவு கட்­டப்­போ­வ­தா­க­வும் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு வழங்­கப்­போ­வ­தா­க­வும் வாக்­கு­று­தி­களை அள்ளி வீசி­னார்.

தமது கண­வர் படு­கொலை செய்­யப்­பட்­டதை கண்­ணீர் மல்­கக் கூறி அனு­தா­பத்­தை­யும் சம்­பா­தித்­துக்­கொண்­டார். தமி­ழர்­கள் அப்­போது இவ­ரது பேச்சை நம்­பி­னார்­கள். இத­னால் தமது வாக்­கு­க­ளை­யும் இவ­ருக்கு அமோ­க­மாக வழங்­கி­னார்­கள். அந்­தத் தேர்­த­லில் அறு­பது வீதத்­துக்­கும் அதி­க­மான வாக்­கு­க­ளைப் பெற்று சந்­தி­ரிகா அமோக வெற்­றியை ஈட்­டிக் கொண்­டார். ஆனால் இவ­ரும் ஏனை­ய­வர்­க­ளைப் போன்றே போரை நடத்­திச் செல்­வ­தில் ஆர்­வம் காட்­டி­னார். பொது­மக்­கள் பாதிக்­கப்­ப­டு­வது தொடர்­பா­க­வும் இவர் சிறி­து­கூட அக்­க­றை­யில்­லா­த­வ­ரா­கவே காணப்­பட்­டார்.

யாழ்ப்­பா­ணத்­தைக் கைப்­பற்­று­வ­தற்­காக இவர் நடத்­திய போர் கார­ண­மாக ஏரா­ள­மான மக்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர். பல ஆயி­ரக் கணக்­கா­ண­வர்­கள் தமது சொந்த இடங்­க­ளை­விட்டு இடம்­பெ­யர்ந்­து­செல்ல நேரிட்­டது. பலர் இன்­ன­மும் அகதி வாழ்க்­கையே வாழ்­கின்­ற­னர். ஆகவே சந்­தி­ரி­கா­வின் மீள் அர­சி­யல் பிர­வே­சத்­தைத் தமி­ழர்­கள் வர­வேற்­பார்­க­ளென எதிர்­பார்க்க முடி­யாது.

ஆனால் தென்­னி­லங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் அவ­ருக்கு வர­வேற்பு இருக்­கவே செய்­யும். சில அர­சி­யல் தலை­வர்­க­ளின் செயல்­க­ளால் வெறுப்­ப­டைந்த மக்­கள் சந்­தி­ரி­கா­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வார்­க­ளென எதிர்­பார்க்­க­மு­டி­யும். கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் சந்­தி­ரி­கா­வும் ரணி­லும் இணைந்து திட்­டங்­களை வகுத்­துச் செயற்­பட்­ட­தன் கார­ண­மா­கப் பத­விக்கு வந்த மைத்­திரி இன்று அவர்­க­ளி­ரு­வ­ரை­யும் எதி­ரி­க­ளா­கக் கரு­திச் செயற்­ப­டு­கின்­றார்.

மகிந்த தரப்­பி­லி­ருந்து எவ­ருமே அரச தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டக்­கூ­டாது என்­ப­தில் சந்­தி­ரிகா உறு­தி­யா­க­வுள்­ளார். அதி­லும் கோத்­த­பாய அந்­தப் பத­விக்கு வரு­வ­தால் தமக்கு ஏதா­வது தீங்கு ஏற்­பட்­டு­வி­டுமோ என்­றும் அவர் அஞ்­சு­கி­றார். இத­னால் தமக்கு வேண்­டிய ஒரு­வரே அடுத்த அரச தலை­வர் என்­பது சந்­தி­ரி­கா­வின் விருப்­பம். சந்­தி­ரி­கா­வின் மீள்­வ­ருகை இந்த நாட்­டின் அர­சி­ய­லில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­கின்­றது என்­ப­தில் ஐய­மில்லை.

You might also like