சன­ச­மூக நிலை­யங்­கள் வளர்ந்து கிரா­மத்தை வளர்க்க வேண்­டும்

சர­வ­ண­ப­வன் எம்.பி. தெரி­விப்பு

சன­ச­மூக நிலை­யங்­கள் தோற்­றம், வளர்ச்சி பெறு­வ­தன் ஊடாக அந்­தக் கிரா­மம் மட்­டு­மின்றி அந்­தப் பகுதி முழு­வ­தும் வளர்ச்­சி­ய­டைய வேண்­டும்.

அத்­து­டன் சன­ச­மூக நிலை­யங்­க­ ளின் ஊடாக மக்­க­ளின் தேவை­கள், வாழ்­வா­தா­ரங்­கள் மற்­றும் உட்­கட்­டு­மான முன்­மொ­ழி­வு­கள் உரிய தரப்­பி­ன­ருக்கு முன்­மொ­ழிந்து அபி­வி­ருத்­தி­ய­டைய கைதடி செல்வா சன­ச­மூக நிலை­யம் முன்­வ­வேண்­டும்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார்.

கைதடி செல்வா சன­மூக நிலைய புதிய கட்­டத்­துக்­கான அடிக்­கல் நடும் நிகழ்வு சன­ச­மூக நிலை­யங்­க­ளின் ஒன்­றி­யங்­க­ளின் தலை­வர் க.கந்­த­சாமி தலை­மை­யில் அண்­மை­யில் நடை­பெற்­றது. இதில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தனது13 இலட்­சம் ரூபா­வில் அமை­ய­வுள்ள நிலை­யத்­துக்கு அடிக்­கல் நட்­டு­வைத்­தார். அந்த நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

கைதடி செல்வா சன­ச­மூக நிலை­யம் மக்­க­ளின் தேவை­களை மக்­கள் பங்­க­ளிப்­பு­டன் முன்­னு­ரிமை தேவை­களை இனம்­கண்டு அந்­தத் தேவை­க­ளைப் படிப்­ப­டி­யாக நிறை­வேற்­ற­ வேண்­டும் என்­றும் அவர் சுட்­டிக் காட்­டி­னார்.

அவ­ருக்கு நிலை­யத்­தி­னர் பொன்­னாடை போர்த்தி மதிப்­ப­ளித்­த­னர். இந்த நிகழ்­வில் சாவ­கச்­சேரி பிர­தேச சபை உப தவி­சா­ளர் மயூ­ரன், உறுப்­பி­னர்­க­ளான கேதீஸ்­வ­ரன், சிவ­னே­சன், வலி­கா­மம் வல­யப் பிர­திக் கல்­விப் பணிப்­பா­ளர் மதி­ய­ழ­கன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் இணைப்­பா­ளர் செ.பிர­தாப், உதவி இணைப்­பா­ளர் பொ.வினோத், மாகாண சபை முன்­னாள் உறுப்­பி­னர் க.பரஞ்­சோதி ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

இதே­வேளை, தென்­ம­ராட்சி வெள்­ளாம் போக்­கட்டி ஒளிர் முன்­பள்ளி நிலைய செயற்­பட்டு மகிழ்­வோம் நிகழ்வு தலை­மைப் போச­கர் சு.கிறிஸ்­ரின் ஞான­ராசா தலை­மை­யில் அண்­மை­யில் நடை­பெற்­றது. அந்த நிகழ்­வில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உரை­யாற்­றி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது:-

கடந்த 30 வருட கால­மாக பேரி­ன­வா­தக் கட்­சி­க­ளால் பல்­வேறு பட்ட வடி­வங்­க­ளில் அழிக்­கப்­பட்­டவையே தற்­போது சிறு சிறு அபி­வி­ருத்­தி­க­ளாக முன்­னெ­டுக்­கப்­ப­டுகின்­றன. அவற்­றைக்­கூட தாம் பல தடை­வை­கள் ஞாப­கப்­ப­டுத்­தியே அபி­வி­ருத்­திக்­கான உட்­கட்­டு­மா­னங்­களை செய்­ய­வேண்­டி­யுள்ளது.

இன்­றைய இளை­ஞர்­கள் எதிர்­கா­லத்­தின் சிற்­பி­கள். எமது பகுதி கடந்த 30 வருட போரால் சிதை­வ­டைந்­துள்­ளது. இவற்றை மீளக் கட்­டி­ய­மைக்­கப்­ப­ட­வேண்­டிய அவ­சர அவ­சிய தேவை எழுந்­துள்­ளது. எனவே எமது இளம் சமு­தா­யத்­தி­னர் விழிப்­ப­டைந்து செயற்­பட முன்­வர வேண்­டும் -– என்­றார்.

You might also like