சமுர்த்திப் பயனாளிகள் மீளாய்வு!!

0 32

பொருத்தமற்றவர்கள் சமுர்த்திப் பயனாளியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக்கிடம் பொதுமக்களால் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய பிரதேச செயலாளரின் பணிப்புரைக்கமைவாக, மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடந்த இரண்டு வாரங்களாக மீளாய்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மீளாய்வு நடவடிக்கைகளில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளன்.

இவ்வாண்டுக்கான சமுர்த்தி முத்திரைகள் தகுதியுடையவர்களுக்கு வழங்க முடியும். இம்மீளாய்வுக்காக பொதுமக்களினுடைய வீடுகளுக்கு வருகின்ற குழுவினர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் மூதூர் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

You might also like