side Add

சித­றிப்­போ­கும் நிலை­யி­லுள்ள சுதந்­தி­ரக்­கட்­சியை கட்­டிக் காக்க முய­லும் அரச தலை­வர்!!

அரச தலை­வ­ரா­க­வும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ரா­க­வு­மி­ருக்­கும் மைத்­தி­ரி­பா­ல­வி­னால் சுதந்­தி­ரக் கட்­சியை ஒரு கட்­டுக்­கோப்­புக்­குள் வைத்­தி­ருக்க இய­லா­மற் போய்­விட்­டது.

1980 களில் சுதந்­தி­ரக்­கட்­சி­யின் தலை­மைத்­து­வம் தொடர்­பாக சிறி­மாவோ பண்­டா­ர­நா­ய­க­விற்­கும், மைத்­தி­ரி­பால சேன­நா­ய­க­வுக்­கு­மி­டை­யில் முறு­கல் நிலை­தோன்­றிய போதி­லும், பின்­னர் அது நேர்­சீர் செய்­யப்­பட்­டது.

இந்­தக் கட்­சி­யின் உள்­மட்­டப் பூசல்­கள் அநே­க­மான சந்­தர்ப்­பங்­க­ளில் அவர்­கள் எதிர்­கட்­சி­யி­லி­ருந்த போது­தான் இடம் பெற்­றி­ருந்­துள்­ளது. 1994 ஆண்­டிற்­கும் 2014 ம் ஆண்­டிற்­கு­மி­டைப்­பட்ட காலப்­ப­கு­தி­யில் ஐக்­கிய தேசிய கட்சி எதிர்க்­கட்­சி­யாக இருந்த வேளை­யில், இவ்­வா­றான கட்சி உட்­மட்ட பூசல்­கள் நிலவி வந்­துள்­ளன.

ஆனால் இப்­பொ­ழுது சுதந்­தி­ரக்­கட்சி அதி­கா­ரத்­தி­லி­ருக்­கும் நிலை­மை­யில், இந்த உட் கட்­சிப் பூசல்­கள் நிலவி வரு­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கூட்டு அர­சி­லி­ருந்து, எப்­போது சிறி­லங்கா சுதந்­திக்­கட்சி விலக வேண்­டு­மென்­பதை முடிவு செய்­யும்­படி அண்­மை­யில் அரச தரப்­பி­லி­ருந்து வெளி­யேறி எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்ந்து கொண்­டுள்ள 16 பேர் கொண்ட குழு­வுக்கு அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால பணிப்­பரை வழங்­கி­யுள்­ளார்.

தற்­போது சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­குள்ளே உரு­வா­கி­யி­ருக்­கும் குழப்­ப­நி­லைக்கு முக்­கி­ய­மா­ன­தொரு கார­ணம், 14 வரு­டங்­க­ளாக கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ராக விருந்த மைத்­தி­ரி­பால சிறிசேன, இந்­தக்­கட்­சிக்கு போட்­டி­யாக விளங்­கிய ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யு­டன் இணைந்து அரச தலை­வர் தேர்­த­லில் பொது வேட்­பா­ளா­ராக, களம் இறங்­கி­ய­மை­யா­கும்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின்
நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்

அரச தலை­வ­ரான பின்­ன­ரும் மைத்­தி­ரி­பா­ல­வின் நிலமை சுமூ­க­மாக இருக்­க­வில்லை. ஒரு­பு­றம் சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ரா­க­வும், மறு­பு­றத்­தில் அர­சின் தலை­வ­ரா­க­வும் செயற்­ப­டு­வ­தில் மைத்­தி­ரி­பால சிர­மத்தை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. கூட்டு அர­சில் ஐக்­கிய தேசிய கட்­சி­யின் ஆதிக்­கமே மேலோங்­கி­யி­ருக்க, குறிப்­பி­டத்தக்க அள­வான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னர் ராஜபக்­ச­வின் ஆத­ரவாளர்­க­ளா­க­வே­யி­ருந்­த­னர்.

2015ஆம் ஆண்டின் பொது தேர்­த­லின் போது, அதி­க­மான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரை உறுப்­பி­னர்­க­ளா­கக் கொண்ட ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­டணி 95 ஆச­னங்­க­ளைக் கைப்­பற்ற, அதில் 44 உறுப்­பி­னர்­கள் அரச தலை­வ­ரின் தரப்பு ஆத­ர­வா­ளர்­க­ளாகி ஐக்­கிய தேசிய கட்­சி­யின் 106 உறுப்­பி­னர்­க­ளு­டன் இணைந்து மூன்­றில் இரண்டு பெரும் பான்­மை­யு­டன் கூட்டு அரசை உரு­வாக்­கி­னர். சுதந்­தி­ரக்­கட்சி­ யின் மீத­முள்ள 51 உறுப்­பி­னர்­க­ளும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­ரா­ஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கும் தரப்­பி­ன­ராக கூட்டு எதி­ர­ணி­யா­கச் செயற்­பட்­ட­னர்.

தற்­போது, தலைமை அமைச்­ச­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக இருந்த, அமைச்­சர்­கள், பிர­தி­ய­மைச்­சர்­கள் பத­வி­களை வகித்­த­வர்­கள் உட்­பட்ட 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அரசை விட்டு வெளி­யே­றி­விட 23 உறுப்­பி­னர்­கள், மட்­டுமே சிறிசே­ன­வின் ஆத­ர­வா­ளர்­க­ளான நிலை­யில் இந்த 16 பேரும், ராஜ­பக்­ச­வின் பக்­கம் சார்ந்­து­விட்­டால் 72 பேர் ராஜ­பக்­ச­வின் ஆத­ர­வா­ளர்­க­ளா­கி­வி­டு­வார்­கள். இத­னால் மூன்­றில் இரண்டு பங்கு பெரும்­பான்­மை­யை­யும் அரசு இழந்­துள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால தானே நேர­டி­யாக கள­மி­றங்கி, இந்த ஆண்­டின் பெப்­ர­வரி மாதம் நடந்த உள்­ளூ­ராட்சி­ தேர்­த­லின் போது ராஜ­பக்­ச­வி­ன­ரை­யும் ஐ.தே.கட்­சி­யி­ன­ரை­யும் எதிர்த்து பரப்­பு­ரை­களை மேற்­கொண்ட போதும், வாக்கு வங்­கி­யில் மூன்­றாம் இடத்­தையே அவ­ரது தரப்­பால் பெற முடிந்­தது.

இதன் பின்­னர், மட்­டக்­க­ளப்­பில் நடந்த மே தின நிகழ்­வின்­போது அரச தலை­வர் தான் 2020 ஆண்­டுக்­கும் பின்­ன­ரும் அர­சி­ய­லி­ருந்து ஒதுங்­கப் போவ­தில்லை என்று கூறிய போதி­லும், அரச தலை­வர் பத­வி­யைப்­பற்றி எது­வும் குறிப்­பி­ட­வில்லை.

அடுத்­த­மாத இறு­தி­யில் கட்­சியை மறு சீர­மைக்­கப் போவ­தாக 16 பேர் குழு­வி­டம் மைத்­தி­ரி­பால சிறி சேன கூறி­னா­லும், அவ­ரது விசு­வா­சி­க­ளான, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் துமிந்த திசா­ நா­ய­க­வை­யும், ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­ணி­யின் பொதுச் செய­லா­ளர் மகிந்த அம­ர­வீ­ர­வை­யும் 16 பேரின் புரட்­சிக்­குழு முன்­வைத்த கோரிக்­கைக்கு ஏற்ப பதவி விலக்­கு­வது என்­பது மைத்­தி­ரிக்கு, தர்ம சங்­க­ட­மான நிலையை தோற்­று­வித்­துள்­ளது.

எந்­தக் கார­ணத்­திற்­கா­க­வும், குறிப்­பிட்ட இரு­வ­ரை­யும் அவர்­கள் வகிக்­கும் பத­வி­க­ளி­லி­ருந்து ஓரங்­கட்ட இய­லாத அள­வுக்கு அவர்­க­ளுக்கு மைத்­தி­ரி­பால கட­மைப்­பட்­டுள்­ளார்.

சமீ­பத்­தில் நடந்த சுதந்­தி­ரக் கட்­சி­யின் உயர்­மட்­டக்­கு­ழு­வின் சந்­திப்­பின்போது, கூட்டு அர­சில் எஞ்­சி­யி­ருக்­கும் 23 உறுப்­பி­னர்­க­ளும் அர­சி­லி­ருந்து வெளி­யே­ று­வது குறித்து தாம­திக்­காது விரை­வில் முடிவு செய்­யு­மாறு அரச தலை­வர் தெரி­வித்­தா­கக் கூறப்­பட்­டது. முன்­னாள் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் தயாசிறிஜய­சே­கர இதனை ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­தி­ருந்­தார். அவ­ரது அந்­தக் கருத்­துக் குறித்து இது­வரை எவ­ரும் மறுப்­புத் தெரி­விக்­கவோ, முரண்­ப­டவோ இல்லை.

சிறி­சேன, ராஜ­பக்ச பிரிவு தரப்­புக்­கள்
தொடர்ந்­தும் இந்­தக் கூட்டு அர­சில் அங்­கம் வகிப்­பது, ஐக்­கிய தேசிய கட்­சி­யைப் பார்க்­கி­லும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யையே அதி­க­மாக பாதித்­துள்­ளது. இந்த அரசு மேற்­கொள்­ளும் தவ­றான நட­வ­டிக்­கை­கள், அர­சி­யல் பங்­கா­ளி­க­ளாக விருக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் மீதும் பிர­தி­ப­லிக்­கும். இந்த 16 பேர் கொண்ட புரட்­சிக் குழு­வின் திட்­டம், மைத்­தி­ரி­யை­யும் மகிந்­த­வை­யும் இணைத்து ஒரு குழு­ வாக சுதந்­தி­ரக்­கட்­சி­யில் போட்­டி­யிட வேண்­டு­மென்­பது அரச தலை­வ­ரி­னால் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டது.

அது எவ்­வா­றான போதி­லும், 2020 ஆண்­டின் பின்­ன­ரும் அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்வு பெறப் போவ­தில்லை என்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னது கூற்­றும், கோத்­த­பா­யவை அரச தலை­வ­ராக்­கும் மகிந்­த­வின் திட்­ட­மும் எப்­படி சாத்­திய மாகப் போகி­றது என்­பதை பொறுத்­தி­ருந்­துத்­தான் பார்க்க வேண்­டும்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி வட்­டா­ரங்­க­ளுக்கு அந்த 16 பேர் கொண்ட புரட்­சிக்­குழு, அர­சினை விட்டு வில­கி­ ய­தன் நோக்­கம் ராஜ­பக்­ச­வின் கட்­சி­யு­டன் இணை­வது அல்­லது. ஏற்­க­னவே அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட பொது­ஜன பெர­மு­ன­வு­டன் இணை­வ­து­தான் அவர்­க­ளின் திட்­ட­மென்­பது நன்­றா­கவே தெரி­யும். மைத்தி­ரி­பால சிறிசேனதான் அடுத்த அரச தலை­வர் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர் என்று பறை சாற்­றிக் கொண்­டி­ருந்த எஸ்.பி திசா­நா­யக போன்­ற­வர்­கள் இப்­போது அமை­தி­யா­கி­விட்­ட­னர்.

திட்­ட­மி­டப்­பட்­டுள்ள கட்­சி­யின் மறு சீர­மைப்பு
அரச தலை­வர் மைத்­தி­ரி­யும், மகிந்த ராஜ­பக்­ச­வும் ஒன்­றாக செயல்­பட முய­லும் போது, அர­ச­மைப்­பின்­படி மகிந்த, அரச தலை­வ­ராக போட்­டி­யிட இய­லாது. ஆனால் மைத்­தி­ரிக்கு அந்­தப் பிரச்­சி­னை­யில்லை. இவர்­கள் இணை­யும் பொழுது அந்த விஷ­யம் தலைத்­தூக்­கக்­கூ­டும்.
சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் இரண்டு பிரி­வு­க­ளும் இணைந்து செயற்­பட வேண்­டு­மென்ற நிலமை வரும்­போது இவர்­கள் ஒரு அரச தலை­வ­ருக்கு மட்­டுமே சாத­க­மாக இயங்க வேண்­டி­யி­ருக்­கும். அப்­படி செயற்­பட வைப்­பது என்­பது பகீ­ர­தப் பிர­யத்­தன­ மாகும்.

அடுத்த மாதத்­தில் நடத்­தத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள சுதந்­தி­ரக்­கட்­சி­யின் மறு சீர­மைப்­பின் போது கட்­சி­யின் எதிர்­கா­லம் பற்­றிய திட்­டங்­கள் மட்­டு­மல்ல, அடுத்து வர­வுள்ள அரச தலை­வர் தேர்­தல், ஐக்­கிய தேசிய கட்­சிக்­கும், சிரி­லங்கா சுதந்தி­ ரக்­கட்­சிக்­கு­மி­டை­யி­லான இரு முனைப் போராட்­ட­மாக இல்­லா­மற் இலங்­கை­யின் சரித்­தி­ரத்­தி­லேயே முதன் முத­லாக ஒரு மும்­மு­னைப் போராட்­ட­மா­க­வும் அமை­யக் கூடும்.

You might also like
X