சிந்­திக்க வேண்­டிய கட்­டா­யத்­தில் வட­ப­குதி மக்­கள்!!

வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மீண்­டும் வடக்­குக்கு முத­ல­மைச்­ச­ராக வரு­வ­தையே விரும்­பு­வ­தா­கத் தெரிய வரு­கின்­றது. வடக்கு மாகாண சபை­யின் ஆயுட்காலம் முடி­வ­டைந்த பின்­னர் அவ­ரைத் தேசியப் பட்­டி­யல் மூல­மாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிப்­ப­தற்கு கூட்­ட­மைப்­பின் தலைமை விரும்­பி­ய­தா­க­வும், ஆனால் விக்­னேஸ்­வ­ரன் அதை நிரா­க­ரித்து விட்­ட­தா­க­வும் கொழும்பு ஊட­க­மொன்று தெரி­வித்­துள்­ளது. மாகா­ண­சபை ஊடாக வடக்கு மக்­க­ளுக்­குச் சேவை செய்­வ­தையே தாம் விரும்­பு­வ­தாக விக்­னேஸ்­வ­ரன் கூறி­ய­தா­க­வும் அந்த ஊட­கச் செய்­தி­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் வாய்ப்பை விட்­டுக் கொடுக்கப்­போ­வ­தில்லை என்ற நிலைப்­பாட்­டில் மாவை. சேனா­தி­ராசா

இதேவேளை முத­ல­மைச்­சர் பத­வியை தாம் எவருக்கும் இம்­முறை விட்­டுக் கொ­டுக்­கப் போவ­தில்­லை­யெ­ன­வும், கடந்த தடவை விட்ட தவறு மீண்­டும் ஒரு முறை இடம் பெறா­தெ­ன­வும் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராசா திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­விட்­டார். இத­னால் கூட்ட­ மைப்­பின் சார்­பில் விக்­னேஸ்­வ­ரன் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட மாட்­டா­ரென்­பது தௌிவா­கத் தெரிய வரு­கின்­றது.

இந்த நிலை­யில், மாவை கூறிய சில கருத்­துக்­கள் கவ­னத்­தில் கொள்­ளத் தக்­கவை. விக்­னேஸ்­வ­ரன் சட்ட நுணுக்­கங்­க­ளைத் தெரிந்த ஒரு­வ­ராக இருந்­த­தால், எமது உரி­மை­களை சட்ட ரீதி­யான, ஜன­நா­யக வழி­க­ளில் பெற்­றுத் தரு­வா­ரென்ற நம்­பிக்கை எம்­மி­டம் ஆரம்­பத்­தில் காணப்­பட்­டது. ஆனால் அவர் எதை­யுமே செய்­யாது, கூட்­ட­மைப்­பை­யும் தமி­ழ­ர­சுக் கட்­சி­யை­யும் குறை கூறு­வ­தி­லேயே தமது நேரத்­தைச் செல­விட்­டுள்­ளார்.

கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­ட­மைப்பு சிறிது பின்­ன­டை­வைச் சந்­தித்­த­மைக்கு இவ­ரது செயற்­பா­டு­க­ளும் ஒர­ளவு கார­ண­மாக அமைந்து விட்­டது. அவரை மீண்­டும் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக கூட்­ட­மைப்பு நிய­மிக்க இய­லாத நில­மையை அவ­ரது செயற்­பா­டு­கள் உரு­வாக்­கி­யுள்­ளன. இவ்­வாறு கூறியி ­ருக்­கி­றார் மாவை சேனா­தி­ராசா.

மாவை­யின் கூற்­றில் நியா­யம் இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான சம்­பந்­த­னால் திடீ­ரென அர­சி­ய­லுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­தான் இந்த விக்­னேஸ்­வ­ரன். அவர் வகித்த பதவி, வட­ப­குதி மக்­க­ளுக்கு அவர் மீது ஒரு­வித மதிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தால் 2013 இல் இடம் பெற்ற மாகாண சபைத் தேர்­த­லில் அதிக விருப்பு வாக்­கு­களை அவ­ரால் பெற முடிந்­தது.

ஆனால் அந்த மக்­க­ளின் எதிர்பார்ப்பை விக்­னேஸ்­வ­ரன் நிறை­வேற்றி வைக்­க­வில்லை. வட­ப­கு­தித் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளக்­குத் தீர்வு காண்­ப­தற்­குத் தாம் என்ன செய்­தா­ரென விக்­னேஸ்­வ­ரன் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் தமது சட்ட நுணுக்­கங்­களை தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­கள் தொடர்­பாக அவர் பயன்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறிக்­கொள்ள முடி­ய­வில்லை. வெறும் பார்­வை­யா­ள­ராக மட்­டுமே அவர் இருந்­துள்­ளமை தெளிவா­கத் தெரி­கின்­றது.

ஏணி­யா­கித் தம்மை உயர்த்தி வைத்த
கூட்­ட­மைப்பை எட்டி உதைத்­துள்­ளார்
முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன்

ஏணி­யாக இருந்து தம்மை உயர்த்­தி­விட்ட கூட்­ட­மைப்­பின் தலை­மை­யை­யும் கூட்­ட­மைப்­பை­யும் பல சந்­தர்ப்­பங்­க­ளில் அவர் இழி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். கூட்­ட­ மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளு­டன் கை கோர்த்து நின்­றி­ருக்­கி­றார். அதை விட கூட்­ட­மைப்­புக்கு ஏட்­டிக்­குப் போட்­டி­யாக உரு­வாக்­கப்­பட்ட தமிழ் மக்­கள் பேர­வை­யின் இணைத் தலை­வ­ராக இருந்து கொண்டு தம்மை உரு­வாக்­கிய அந்த அமைப்­புக்கே துரோ­கம் புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்.

இத்­த­கைய ஒரு­வ­ரைக் கூட்­ட­மைப்பு மீண்­டும் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிய­மிக்­கு­மென எவ்­வாறு எதிர்­பார்க்க முடி­யும்? இப்­போது கூட, கூட்­ட­மைப்­பில் தமக்கு இட­மி்ல்லை. என்­ப­தைத் தெரிந்து கொண்­ட­தன் பின்­ன­ரும், அந்த அமைப்­புக்கு எதி­ரா­கக் கச்சை கட்­டிக் கொண்டு களத்­தில் இறங்­கு­வ­தற்கு அவர் தீர்மா­னித்­துள்­ளமை, அவ­ரது மனச்­சாட்­சி­யற்ற நிலைப்­பாட்டை எடுத்­துக் காட்­டு­கின்­றது.

முத­ல­மைச்­ச­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில்
தமி­ழர்­க­ளது விடு­த­லைப் போராட்­டத்­தில்
மாவை­யின் பங்கு அளப்­ப­ரி­யது

தனது இனத்­தின் விடு­த­லைக்­கா­கத் தமது மிகச்­சி­றிய வய­தி­லேயே தம்மை அர்ப்­ப­ணித்­த­வர் மாவை சேனா­தி­ராசா. பல ஆண்­டு­கள் சிறை­வாழ்க்­கையை அனு­ப­வித்­தி­ருக்­கி­றார், தாங்­க­மு­டி­யாத சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார். தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் அடி­மட்­டத் தொண்­ட­னாக இருந்து தமது கடு­மை­யான உழைப்­பி­னால் அதன் தலை­மைப்­ப­த­விக்கு உயர்ந்­த­வர் அவர்.

ஆனால் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் என்ற முன்­னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர் தாம் சார்ந்த இனத்­துக்­காக எதை­யும் தியா­கம் செய்­ய­வில்லை. நேர­டி­யா­கவே நோவில்­லா­மல் பத­விச் சுகத்தை அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்­கும் அவர் அதை இழப்­ப­தற்­குத் தயா­ரில்லை என்­பதை நிரூ­பித்து வரு­கின்­றார்.

வட­ப­குதி மக்­க­ளுக்­குப் பணி­யாற்­ற­வ­தற்­கா­கவே தாம் மீண்­டும் முத­ல­மைச்­சர் பத­விக்கு போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அவர் கூறி­யி­ருப்­பது எள்ளி நகை­யா­டு­வ­தற்­கு­ரி­யது. கடந்த ஐந்து ஆண்­டு­க­ளா­கத் தமிழ் மக்­க­ளுக்­குத் தாம் ஆற்­றிய பணி­கள் எவை­யென்­பதை அவ­ரால் பட்­டி­ய­லிட்­டுக் காட்ட முடி­யுமா?

வட­ப­கு­தித் தமிழ் மக்­கள் அர­சி­யல்­வா­தி­கள் கூறு­வதை அப்­ப­டியே நம்­பி­வி­டாது அனைத்­தை­யும் சீர்­தூக்­கிப் பார்க்க வேண்­டும். உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் விட்­ட­த­வறை மாகாண சபைத் தேர்­த­லி­லும் விடக்­கூ­டாது.பகப்பு வார்த்­தை­க­ளுக்­கும், உணர்ச்­சி­க­ர­மான கோசங்­க­ளுக்­கும் மசிந்­து­வி­டாது தௌிவா­கச் சிந்­தித்து சரி­யான முடி­வு­க­ளைத் தாம் மேற்­கொள்­வ­தற்­கான தரு­ணம் இது­வென்­பதை அவர்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close