சிறுமிகள் மீது சராமாரியாக கத்திக் குத்து!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்ற கத்துக் குத்து சம்பவத்தில் ஆரம்பப் பிரிவு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கத்திக் குத்தை மேற்கொண்ட நபரும் உயிரை மாய்த்துக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காவாசாகி என்ற இடத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் மேலும் 17 பேருக்கு காயம் ஏறப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தப் பகுதி பேருந்துத் தரிப்பிடத்துக்குள் புகுந்த நபர், சிறுவர்கள் மீது இரண்டு கத்திகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கத்திக் குத்து நடந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

You might also like