செம்மலை உதயசூரியன் கழகம் -கால்பந்தில் கிண்ணம் வென்றது!!

0 35

முல்லைத்தீவு விளையாட்டுக் கழகத்­தால் நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரின் இறு­தி­யாட்­டத்­தில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது செம்­மலை உத­ய­சூ­ரி­யன் அணி.

குறித்த கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் அளம்­பில் இளந்­தென்­றல் கழ­க­மும் செம்­மலை உத­ய­சூ­ரி­யன் கழ­க­மும் மோதின.

ஆரம்­பம் முதல் இரண்டு அணி­க­ளும் சிறப்­பாக விளை­யா­டிய போதி­லும் கோல்­கள் எவை­யும் பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை. இரண்­டா­வது பாதி­யில் சிறப்­பா­கச் செயற்­பட்ட உத­ய­சூ­ரி­யன் அணி மூன்று கோல்­க­ளைப் பதி­வு­செய்­தது. துசாந்­தன் இரு கோல்­க­ளை­யும், தினோக்­சன் ஒரு கோலை­யும் பதி­வு­செய்­த­னர். முடி­வில் 3:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது உத­ய­சூ­ரி­யன் அணி.

ஆட்ட நாய­க­னாக உத­ய­சூ­ரி­யன் அணி­யைச் சேர்ந்த துசாந்­த­னும் தொட­ராட்ட நாய­க­னாக அதே அணி­யைச் சேர்ந்த கஸ்­துள்­ரா­ஜும் சிறந்த கோல் காப்­பா­ள­ராக அதே அணி­யைச் சேர்ந்த திலீபனும் மனம் கவர்ந்த வீரராக மோகன்ரஜூம் தெரிவாகினர்.

You might also like