சோதனையில் கூரிய ஆயுதங்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் காந்தி லேனில் வீடொன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டனர்.

வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் உரைப் பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் இருந்த இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து சோதனையை மேற்கொண்டனர்.

You might also like