side Add

டிப்­ப­ரில் மறைத்து தேக்க மரக் குற்றிகள் கடத்தல்!!

முல்­லைத்­தீவு, முறிப்­பில் மணல் ஏற்­றும் டிப்­ப­ருக்­குள் மறைத்­துக் கொண்டு செல்­லப்­பட்ட 25 தேக்க மரக் குற்­றி­கள் நேற்று சிறப்­புக் குற்­றத்­த­டுப்பு, போதை ஒழிப்­புப் பிரி­வி­ன­ரால் கைப்­பற்­றப்­பட்­டன. வாக­னத்­தின் சாரதி கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

முல்­லைத்­தீவு மாவட்ட உப பொலிஸ் பரி­சோ­த­கர் திசா­நா­யக்க தலை­மை­யி­லான குழுவே இவற்­றைக் கைப்­பற்­றி­யது.

டிப்­பரை மறித்­துச் சோத­னை­யிட்­ட­போது தேக்­கம் மரக் குற்­றி­கள் கடத்­தப்­பட்­டமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது என்­றும், அவை யாழ்ப்­பா­ணத்­துக்­குக் கடத்­திச் செல்­லப்­ப­ட­வி­ருந்­தன என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

விசா­ர­ணை­கள் நடை­பெ­று­கின்­றன என்­றும், கைது செய்­யப்­பட்­ட­வரை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்­றும் முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like