தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கக் கோரிக்கை!!

எமது நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை ஆதரிப்போம். அவர்களை பராமரிப்போம் என்று கிளிநொச்சி மாவட்ட நீதிக்கும் சமாதானத்துக்கமான கிறிஸ்தவ அமைப்பு தெரிவித்துள்து.

“பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எம்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு , பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிர்க்கதிக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவி செய்வது எமது கடமையும் பொறுப்புமாகும் . தமிழர்களாகிய நாமும் ஒரு காலகட்டத்தில் இவ்வாறு நிர்க்கதியாகி பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்து சென்ற போது அந்நாடுகள் எங்களுக்கு தஞ்சம் கொடுத்து, எம்மவர்களை ஆதரித்து புகலிடம் கொடுத்ததை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. எனவே எம்மிடத்தில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு ஆதரவு அளிக்க அவர்களை பராமரிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும்” என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like