தடம்புரண்டது தொடருந்து -ஐவர் உயிரிழப்பு- பலர் காயம்!!

இந்தியா உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் தொடருந்து நிலையம் அருகே நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 6 பெட்டிகள் தடம்புரண்டதில் அதில் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். லக்னோ, வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

You might also like