தப்பியோடிய 26,000 இராணுவத்திரை பிடிக்க நடவடிக்கை

0 172

நாடு பூராகவும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தாா்.

தப்பியோடிய வீரர்களுக்குச் சட்ட ரீதியான முறையில் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலம் நேற்றைய தினம் நிறைவடைந்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி முதல் வழங்கப்பட்ட குறித்த பொது மன்னிப்பு காலப்பகுதியில் 11,232 உறுப்பினர்கள் சுய விருப்பத்தின் பேரில் விலகியுள்ளதாகவும் அவா் தொிவித்ததாா்.

அதில் 15 இராணுவ அதிகாரிகளும் 9 கெடட் அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

இதேவேளை இராணுவத்திலிருந்து தப்பியோடிய மேலும் 26,000 பேர் காணப்படுவதாகவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் மேலும் தெரிவித்தாா்.

You might also like