தமது உரிமைகளுக்கானதே -தமிழர்களின் போராட்டம்!!

0 30

முல்லைத்­தீவு மாவட்­டத்­தில் இடம்­பெ­று­கின்ற சம்­ப­வங்­கள் இன அமை­திக்குக் குந்­த­கத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அமைந்­துள்­ளமை நாட்­டுக்கு நல்ல சகு­ன­மா­கத் தெரி­ய­வில்லை.

வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளின் அத்­து­ மீ­றிய ,சட்­ட­வி­ரோ­தச் செயற்­பா­டு­கள், சட்­ட­வி­ரோத மீள் குடி­யேற்­றங்­கள், தொல்­பொ­ருள் திணைக்­க­ ளத்­தி­ன­ரது அடா­வ­டித்­த­னங்­கள் ஆகி­யவை அந்த மாவட்ட மக்­களை மோச­மா­கப் பாதித்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இவை தொடர்­பாக அரசு உரிய வகை­யில் செயற்­ப­டா­த­தால் மக்­கள் பேராட வேண்­டிய அவல நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

உண்­மைக்­குப் புறம்­பான
தக­வல்­க­ளைக் கட்­ட­விழ்த்­து­வி­டும்
சிங்­கள இன­வா­திகள்
இங்கு இடம்­பெ­று­கின்ற சம்­ப­வங்­களைத் தெற்­கி­லுள்ள இன­வா­தி­கள், இன­வாத நோக்­கு­டன் திரித்­துக்­கூற முற்­ப­டு­கின்­ற­னர். நாயாற்­றில் சிங்­கள மீன­வர்­க­ளின் வாடி­கள் எரிக்­கப்­பட்­ட­தா­க­வும், அவர்­கள் தமி­ழர்­க­ளால் அங்­கி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் கடைந்­தெ­டுத்த இன­வா­தி­யும், பொய்­யு­ரைப்­ப­தில் வல்­ல­வ­ரு­மான விமல் வீர­வன்ச கூறி­யி­ருக்­கி­றார். சிங்­கள மக்­க­ளில் ஒரு பகு­தி­யி­னர் இதை நம்­ப­வும் செய்­வார்­கள். இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய எதிர்­வி­ளை­வு­கள் அமைதி நிலைக்­குப் பங்­கம் ஏற்­ப­டுத்த வழி வகுக்­கக்­கூ­டும். இன மோத­லுக்கு வழி­வ­குத்து இனக்­க­ல­வ­ர­மா­க­வும் இறு­தி­யில் முடிந்­து­வி­ட­லாம்.

அரசு ஆரம்­பத்­தி­லேயே தீர்க்­க­மான முடி­வு­களை மேற்­கொண்­டி­ருந்­தால், இவை இடம்­பெ­றா­மல் தடுத்திருக்க முடி­யும். ஆனால் அரசு இதில் தவ­றி­ழைத்­து­விட்­டது. முல்­லைத்ீ­வில் இயங்­கி­வ­ரும் கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­க­ளத்­தின் செயற்­பா­டு­க­ளும் திருப்தி அளிப்­ப­தா­கக் காணப்­ப­ட­வில்லை. மக்­கள் போரா­டு­கின்­ற­வரை அரசு வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருப்­பதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்­ள­வும் முடி­ய­வில்லை.

தமது நிலங்­கள் பறி­போ­வதை எவ­ருமே வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருக்க மாட்­டார்­கள். பாலஸ்­தீ­னத்­தில் இஸ்­ரே­லி­யர்­க­ளின் நில அப­க­ரிப்­புக்கு எதி­ராக பாலஸ்­தீன மக்­கள் நீண்­ட­கா­ல­மா­கப் போராடி வரு­கின்­ற­னர். இத­னால் இவர்­கள் அடிக்­கடி இழப்­புக்களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். ஆனால் வல்­ல­ரசு நாடு­க­ளின் துணை­யு­டன் இஸ்­ரேல் தனது நில ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­க­ளைத் தொட­ரவே செய்­கி­றது.

வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­கள்
வர­லாற்று ரீதி­யில் தமி­ழர்­க­ளது
தாயக பூமியே
இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் வட­க்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­கள் தமி­ழர்­க­ளின் தாயக பூமி­க­ளாக வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளன.
இந்­தப் பகு­தி­க­ளில் தமி­ழர்­கள் தமது பாரம்­ப­ரிய பண்­பாடு, கலை, கலா­சா­ரம் ஆகி­ய­வற்­றைப் பேணி வந்­த­னர். அந்­நி­ய­ரின் வரு­கைக்கு முன்­னர் தமி­ழர்­க­ளுக்கெனத் தனி அர­சு­க­ளும் அமைந்து காணப்­பட்­டன.

அந்­நி­ய­ரால் இந்த ஆட்­சி­கள் கலைக்­கப்­பட்டு ஒரே நிர்­வா­கத்­தின் கீழ் இலங்கை கொண்டு வரப்­பட்­டது. அந்­நி­ய­ரின் ஆட்­சிக் காலத்­தில் தற்­போது இடம்­பெ­று­வ­தைப் போன்று ஓர் இனத்­துக்­கு­ரிய பகு­தி­யில் வேறு இனத்­த­வ­ரைக் குடி­யேற்­று ­கின்ற நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­ற­வில்லை. ஆனால் நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­தன் பின்­னர் எல்­லாமே தலை­கீ­ழாக மாறி­விட்­டன.

ர­சால் மேற்­கொள்­ளப்­பட்ட சிங்­க­ளக் குடி ­யேற்­றங்­கள் தமி।­ழர்­க­ளின் இருப்­பைக் கேள்­விக் குறி­யாக்கி நிற்­கின்­றன. ஆரம்­பத்­தில் கிழக்கு மாகா­ணத்­தில் இந்த நிலை உரு­வா­னது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இன்று பெரும்­பான்­மை­யி­னர் என்ற பெரு­மையை இழந்து விட்­ட­னர். தமது தாயக பூமி­யில் மாகாண சபை­யின் அதி­கா­ரத்­தைக்­கூட அவர்­க­ளால் கைப்­பற்ற முடி­ய­வில்லை.

கிழக்கு மாகா­ணம் போன்றே
வடக்­கி­லும் தமி­ழர்­க­ளது இனப்­ப­ரம்­பலை
சீர்­கு­லைக்­கத் திட்­ட­மிட்­டுச் செய­லாற்­றும்
பேரி­ன­வாத அர­சு­கள்
இதே­நி­லை­தான் வடக்­கி­லும் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. வடக்­கில் உள்ள மாவட்­டங்­க­ளில் வவு­னியா, மன்­னார், முல்­லைத்த்ீவு। ஆகிய மாவட்­டங்­கள் அத்­து­மீ­றிய குடி­யேற்­றங்­களால் பாதிப்பை எதிர்­கொண்டு வரு­கின்­றன. இவற்­றில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நிலை­தான் மோச­மா­கக் காணப்­ப­டு­கின்­றது. மக்­கள் ஒன்று திரண்டு பேரா­டு­கின்ற அள­வுக்கு அங்கு நிலைமை மோச­மாகி விட்­டது.இந்­தப் பேராட்­டம் தொடர்ந்து இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களே அதி­க­ள­வில் காணப்­ப­டு­கின்­றன.

போராட்­டம் என்­பது ஆயு­தம் ஏந்துவதை மட்­டுமே குறிப்­ப­தல்ல. அமைதி வழி­யி­லான போராட்­டங்­க­ளும் போராட்­டம் என்ற வரை­ய­றைக்­குள்­ளேயே உள்­ள­டக்கப்­ப­டு­கின்­றன. இந்த நிலை­யில், இனி­மேல் இந்த நாட்­டில் போராட்­டங்­கள் இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக் கிடையா­தென அரச தலை­வர் மயி­லிட்டித் துறை­மு­கத்­தின் அபி­வி­ருத்­திப் பணி­களை ஆரம்­பித்து வைத்­த­போது வெளியிட்ட கருத்து நினை­வுக்கு வரு­கின்­றது.

அவர் தமது வாக்­கைக் காப்­பாற்ற வேண்­டு­மா­னால் முல்­லைத்­தீ­வில் இடம்­பெ­று­கின்ற அத்­து­மீ­றிய குடி­யேற்­றம், வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளின் அத்­து­மீ­றல், தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் அடா­வ­டித்­த­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு முற்­றுப்­புள்ளி இடல் வேண்­டும். அங்கு அமை­தியை நிலை­நாட்ட வேண்­டும். தமி­ழர்­கள் அர­சுக்கு எதி­ரா­கக் போரா­ட­வில்லை என்­ப­தை­யும் இழந்த தமது உரி­மை­களை மீட்­டெ­டுப்­ப­தற்­கா­கவே போரா­டு­கி­றார்­கள் என்­ப­தை­யும் அரச தலை­வ­ரும், அர­சும் புரிந்­து­ கொண்­டால் அதுவே போது­மா­னது.

You might also like