தமிழின படுகொலையின் ஒரு தசாப்தம்!!

எஸ். தர்சன்

தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நடைபெற்று 10ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும், அந்தப் படுகொலைகள் நேற்றுத் தான் அரங்கேறியதான உணர்வை வரவழைக்கிறது முள்ளிவாய்க்கால்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எதைக் கொடுத்தாலும், இழப்புக்களின். வலியை எவ ராலும், ஈடுசெய்துவிடமுடியாது, உணர்வுகளைக் கட்டுப்படுத்திவிடமுடியாது என்பதற்கு 10 ஆண்டுகளின் பின்பும் ஆறாத் துயரோடு முள்ளிவாய்க்காலில் திரளும் தமிழினமே சான்று.

நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பாடு
முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் 10 ஆவது ஆண்­டாக நேற்­றும் முள்­ளி­வாய்க்­கால் நினை­வுத் தூபி­யில் எழுச்­சி­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டன. அதற்­கான ஏற்­பா­டு­களை இந்த முறை முள்­ளி­வாய்க்­கால் ஏற்­பாட்­டுக் குழு செய்­தி­ருந்­தது. ஏற்­பா­டு­கள் நேர்த்­தி­யாக வடி­வ­மைக்­கப்­பட்­டன. கடந்த ஆண்­டு­க­ளில் அர­சி­யல் கலப்­புக்­க­ளு­டன் நடை­பெற்ற இந்த நினை­வேந்­தல் இந்த முறை அதற்­கெ­னத் தெரிவு செய்­யப்­பட்ட நினை­வேந்­தல் குழு­வால் முன்­னெ­ டுக்­கப்­பட்­டது. நினை­வுத் தூபி­யைச் சுற்­றி­லும், மஞ்­சள், சிவப்­புக் கொடி­கள் பறக்­க­வி­டப்­பட்­டி­ருந்­தன.

ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட ஒளிச் சுடர்­கள் நடப்­பட்­டி­ருந்­தன. அந்­தச் சுடர்­கள் ஒவ்­வொன்­றி­லும், கற்­பூ­ரங்­க­ளும் தீப்­பெட்­டி ­க­ளும் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. உற­வு­களை நினைவு கூரு­வ­தற்கு ஏற்ப இந்த ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஒளிச்­சு­டர்­க­ளுக்கு அருகே மரக் கன்­று­கள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்த ஒளிச் சுடரை ஏற்­றும் உற­வு­கள் வீடு செல்­லும்­போது 10ஆவது ஆண்டு நினை­வாக அந்த மரக்­கன்­று­களை வீடு­க­ளில் நடுகை செய்­வ­தற்கு அங்கு அவை தயா­ராக வைக்­கப்­பட்­டி­ருந்­தன. கொன்­றொ­ழிக்­கப்­பட்ட எமது உற­வு­களை காலம் தோறும் நினைவு படுத்­து­வ­தற்­குச் சான்­றாக அவை அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தன. நினை­வேந்­த­லுக்­கான பொதுச் சுடர் ஏற்­றும் போது தடங்­கல்­கள் ஏற்­ப­டா­த­வாறு செய்­தி­யா­ளர்­க­ளுக்கு என்று தனி­யான இடம் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது. பொதுச் சுட­ருக்கு முன்­னால் குவிந்து ஒளிப்­ப­டங்­களை எடுத்து மக்­க­ளுக்கு இடை­யூறை ஏற்­ப­டுத்­தாது இருப்­ப­தற்­காக முற்­கூட்­டியே செய்­தி­யா­ளர்­க­ளுக்கு என்று தனி­யான மேடை அமைக்­கப்­பட்­டி ­ருந்­தது.

நினை­வேந்­தல்
நினை­வேந்­தல் சரி­யாக 10.30 மணிக்கு ஆரம்­பிக்­கப்­பட்­டது. முன்­ன­தாக அந்­தப் பகு­திக்கு வருகை தந்த மதத் தலை­வர்­கள், அர­சி­யல்­வா­தி­கள், சிறப்­புத் தேவை­யு­டை­யோர் சுட­ரேற்­று­வ­தற்கு என்று தனி­யான இடம் ஒழுங்கு செய்­யப்­பட்­டது. அவர்கள் அந்த இடத்­துக்­குச் சென்று ஒளிச் சுடர்­களை ஏற்­ற­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டது. அதன்­படி நினை­வேந்­த­ லில் கலந்து கொண்ட பிர­மு­கர்­கள் குறித்த பகு­திக்­குச் சென்று ஒளிச் சுடர் ஏற்­றத் தயா­ராக இருந்­த­னர். அர­சி­யல் வாதி­கள் அனை­வ­ரும் சரி­ச­ம­மாக மதிக்­கப்­பட்­ட­னர். முன்­னு­ரிமை, முத­லி­டம் என்­பது தவிர்க்­கப்­பட வேண்­டும் என்­ப­தில் ஏற்­பாட்­டுக் குழு அதிக கவ­னம் செலுத்­தி­யுள்­ளது போலும்.

பொதுச் சுடர் ஏற்றி
அஞ்­சலி
முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்­கான பொதுச் சுட­ரைச் சிறுமி ஒரு­வர் ஏற்­றி­யி­ருந்­தார். அன்­னை­யின் மடி­யில் தவ­ழும் வய­தில், பால்­கு­டிக்­கும் பரு­வத்­தில், எட்டு மாதத்­தி­லேயே முள்­ளி­வாய்க்­கா­லில் தனது தாய், தந்­தையை இழந்­த­வள் அவள். தனது இடது கையை­யும் முள்­ளி ­வாய்க்­கா ­லில் பறி­கொ­டுத்து ஒற்­றைக் கையு­டன் போரின் சாட்­சி­யாக, இன அழிப்­பின் சாட்­சி­யா­கப் பொதுச் சுட­ருக்கு மிக­வும் பொருத்­த­மா­ன­வ­ளாக அவள் அதை ஏற்­றி­னாள். அதைத் தொடர்ந்து ஒளிச் சுடர்­கள் ஏற்றப்பட்­டன. கடும் காற்­றி­லும், உற­வு­கள் ஒளிச் சுடரை ஏற்றி உற­வு­களை அஞ்­ச­லித்­த­னர். உற­வு­களை நினைவு கூர்ந்து, அவர்­கள் இல்­லாத சோகத்தை தாங்க முடி­யாது கதறி அழு­த­னர். அந்த அழு­கு­ரல் பர­ வ­ல­டைந்­தது. ஆற்ற முடி­யாது புலம்­பி­னர். எத்­தனை ஆண்­டு­கள் ஆனா­லும் அந்த வலி எம்­ம­வர் இடத்­தில் என்­றுமே மறைந்­து­வி­டாது என்­பதை அந்த இடத்­தில் கூடி­யி­ருந்த அனை­வர் மன­தி­லும் ஆழப் பதிந்­தது.

மலர்­கள் தூவப்­பட்­டன. நினை­வேந்­த­லில் கலந்து கொண்ட அனை­வ­ரும் பொதுச் சுட­ருக்கு முன்­னால் வந்து மலர் தூவி உற­வு­களை அஞ்­ச­லித்­த­னர். உற­வ­க­ளைப் புதைத்த அந்த மண் கண்­ணீ­ரால் நனைந்­தது. கத­றி­ய­ழும் உற­வுக­ளுக்கு மதத் தலை­வர்­கள் ஆறு­தல் கூறி­னர். அவர்­களை ஆற்­றுப் படுத்­தி­னர். ஆனால் பீறிட்டு எழுந்த சோகத்­தை­யும், அழு­கை­கை­யும் எவ­ரா­லும் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

பசி­யாற்­றிய கஞ்சி
10.30 மணிக்கு ஆரம்­ப­மா­கிய நினை­வேந்­தல் சுமார் ஒரு மணி­நே­ரத்­தின் பின்­னர் நிறைவு பெற்­றது. கடும் வெயி­லை­யும் பொருட்­ப­டுத்­தாது, நினை­ வேந்­த­லில் கலந்து கொண்ட உற­வு­க­ளின் களைப்பை ஆற்­று­வ­தற்­கும் ஏற்­பாட்­டுக் குழு பின்­னிற் க­வில்லை. குளிர்­பா­னம், கஞ்சி போன்ற உண­வுப் பொருள்­களை வழங்­கி­யது. கடும் வெயி­லில் ஏற்­பட்ட களைப்­பை­யும், பசி­யை­யும் அந்­தக் கஞ்சி சிறி­தே­னும் போக்­கி­யது.

இம்­முறை தடை ஏது­மில்லை
தடை­க­ளைத் தாண்டி அஞ்­ச­லிக்­கப்­ப­டும் முள்­ளி­ வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்­வுக்கு 10ஆண்டு நிறை­வான நேற்று அரச படை­க­ளால் எந்த தடை­க­ளும் எற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மாறாக நினை­வேந்­த­லுக்­குத் திர­ளும் மக்­க­ளுக்­குப் பொலி­ஸார் பாது­காப்பை வழங்­கி­னர். தகுந்த பாது­காப்­பு­டன் நினை­வேந்­தல் இடம்­பெற்­றது என்­றும் கூறி­வி­ட­மு­டி­யும். எனி­னும் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து முல்­லைத்­தீவு செல்­லும் போதும், வரும் போதும் இரா­ணு­வத்­தின் சோத­னை­கள் அதி­க­ரித்­தி­ருந்­தன. குறித்த வழிப்­பா­தை­யில் 10க்கும் மேற்­பட்ட சோத­னைச் சாவ­டி­கள் அமைக்­கப்­பட்டிருந்தன

இரண்டு சாவ­டி­க­ளில் பதிவு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. தற்­கொ­லைக் குண்­டுத் தாக்­கு­த­லின் எதி­ரொ­லி­யாக அது இடம்­பெற்­றா­லும் மக்­கள் மத்­தி­யில் பயம் காணப்­பட்­டது. இந்­தத் தாக்­கு­தல்­க­ளைக் கார­ணம் காட்­டிப் படை­யி­ன­ரின் அச்­சு­றுத்­தல் முள்­ளி­வாய்க்­கா­லில் இருக்­கும் என்ற அச்­சத்­தால் உற­வு­க­ளில் சிலர் அங்கு வரா­தி­ருந்­த­தை­யும் அவ­தா­னிக்க முடிந்­தது.

ஓர­ணி­யில் அர­சி­யல் தலை­வர்­கள்.
அர­சி­ய­லில் போட்­டி­யிட்­டுத் தமக்­குள் அடித்­துக் கொள்­ளும் தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள், ஒரு­மித்து நினை­வேந்­த­லில் கலந்து கொண்­ட­னர். உயர்வு தாழ்­வின்றி அனை­வ­ரை­யும் சம­மாக மதிக்­கும் வகை­யில் அங்கே வைக்­கப்­பட்­டி­ருந்த ஒளிச் சுடர்­களை ஏற்றி அஞ்­சலி செலுத்­தி­னர். அது அதி­கம் சிலா­கித்த விட­ய­மாக இருந்­தது.
எவ­ருக்கு எந்த இடம் என்­பது குறிப்­பி­டா­மல், ஒளிச் சுடர் நடப்­பட்டிருந்தன. அதில் அர­சி­யல் தலை­வர்­கள் அஞ்­சலி செலுத்­த­லாம் என்று ஏற்­பாட்­டுக் குழு­வால் தெரி­விக்­கப்­பட்­ட­தற்கு இணங்­கக் கருத்து வேறு­பா­டு­கள், போட்­டி­கள், அகங்­கா­ரங்­கள் அத்­த­னை­யை­யும் ஓரம் கட்­டி­விட்டு அவர்­கள் அனை­வ­ரும் அஞ்­சலி செலுத்­தி­னர்.
இவ்­வாறு நடப்­பது இதுவே முதன்­மு­றை­ யாக இருக்­க­லாம். கொன்­றொ­ழிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­கி­டைக்க இது­போன்று இவர்­கள் அத்­தனை பேரும் ஒரு­மித்­துக் குரல் கொடுத்­தால், கொடுப்­பார்­களா?

 

You might also like