தமிழ் அரசுக் கட்சியின் -16 ஆவது தேசிய மாநாடு ஆரம்பம்!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாநாடு நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்குக்கு அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like