திணறும் பங்களாதேஷ்!!

பங்­க­ளா­தேஷ் அணி நியூ­சி­லாந்­துக் குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கின்­றது. நேற்­று­முன்­தி­னம் ஆரம்­ப­மான முத­லா­வது டெஸ்ட் போட்­டி­யில் பங்­க­ளா­தேஷ் அணி தடு­மா­றி­யது. நேற்­றைய முதல் இன்­னிங்­ஸின் இரண் டாம் நாளில் நியூ­சி­லாந்து அணி வலு­வான நிலை­யில் உள்­ளது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்றி பெற்ற நியூ­சி­லாந்து அணி முத­லில் களத்­த­டுப்­பில் ஈடு­ப­டத் தீர்­மா­னித் தது. பங்­க­ளா­தேஷ் அணி முதல் இன்­னிங்­ஸில்­ 234 ஓட்­டங்­க­ளுக்­குள் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய நியூ­சி­லாந்து அணி­யின் ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீரர்­க­ளாக ராவல் அரைச் சதம் கடந்து 51 ஓட்­டங்­க­ளு­ட­னும், லாதம் 35 ஓட்­டங்­க­ளு­ட­னும் ஆட்­ட­மி­ழக்­காது நேற்­றைய இரண்­டாம் நாளுக்­கா­கக் கள­மி­றங்­கி­னர்.

இரு­வ­ரும் அணிக்கு சிறப்­பா­ன­ தொரு அடித்­த­ளத்­தை­யிட்­ட­னர். ஆரம்­பத் துடுப்­பாட்ட வீரர்­கள் இரு­வ­ரும் சதம் கடந்து அணிக்­குப் பலம் சேர்த்­த­னர். அணி 254 ஓட்­டங்­க­ளைப் பெற்ற போதே முத­லா­வது இலக்கு இழக்­கப்­பட்­டது. ராவல் 132 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார்.

இணைந்­தார் அணித் தலை­வர் வில்­லி­யம்­சன். லாதம் அதி­ர­டி­யா­கத் துடுப்­பெ­டுத்­தாடி 17 நான்கு ஓட்­டங்­கள், 3 ஆறு ஓட்­டங்­கள் அடங்­க­லாக 161 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார். ரெய்­லர் வெறும் 4 ஓட்­டங்­க­ளு­டன் எல்.பி.டபிள்யு முறை­யில் ஆட்­ட­மி­ழந்து பவி­லி­யன் திரும்­பி­னார். நான்­கா­வது இலக்­குக்­காக 100 ஓட்­டங்­கள் இணைப்­பாட்­ட­மாக பகி­ரப்­பட்­டது.

நிக்­கோ­லஸ் அரைச் சதம் கடந்து 53 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார். நாள் முடி­வில் அணி 4 இலக்­கு­களை இழந்து 451 என்ற இமா­லய ஓட்ட எண்­ணிக்­கை­யைக் குவித்­தது. களத்­தில் வில்­லி­யம்­சன் 93 ஓட்­டங்­க­ளு­ட­னும், வோக்­னர் ஓர் ஓட்­டத்­து­ட­னும் இருக்க ஆட்­டம் இடை­நி­றுத்­தப்­பட்­டது. நியூ­சி­லாந்து அணி 6 இலக்­கு­கள் கைவ­ச­மி­ருக்க 217 ஓட்­டங்­கள் முன்­னி­லை­யில் உள்­ளது.

பந்து வீச்­சில் சர்­கர் 2 இலக்­கு­க­ளை­யும், ஹசன் மிர்சா, முக­மத்­துல்லா தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

You might also like