திருக்­கே­தீச்சர அலங்­கார வளைவு – தடை உத்­த­ரவை கண்­டித்து பேரணி!!

மன்­னார்,  திருக்­கே­தீச்சர ஆலய வளை­வின் தடை உத்­த­ர­வைக் கண்­டித்து நாளை வெள்­ளிக்­கி­ழமை காலை 9 மணி­ய­ள­வில் வவு­னி­யா­வில் மாபெ­ரும் கண்­ட­னப் பேரணி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்று இந்து ஆல­யங்­க­ளின் ஒன்­றி­யத் தலை­வர் தெரி­வித்­துள்­ளார்.

இது குறித்து இந்து ஆல­யங்­க­ளின் ஒன்­றி­யத்­த­லை­வ­ரால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்ள­தா­வது:

மன்­னார் திருக்­கே­தீச்­வர ஆலய வீதி வளை­வுக்கு மீண்­டும் தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளதை கண்­டித்து, இந்­துக்­க­ளின் எதிர்ப்­புக்­களை வெளிப்­ப­டுத்­தும் நோக்­கு­டன் வவு­னியா பிர­தேச செய­ல­கப்­பி­ரிவு, வெங்­க­லச்­செட்­டி­கு­ளம் பிர­தேச செய­ல­கப்­பி­ரிவு, வவு­னியா வடக்கு பிர­தேச செய­ல­கப்­பி­ரிவு ஆகி­ய­வற்­றின் இந்து ஆல­யங்­க­ளின் ஒன்­றி­யங்­க­ளும், பொது இந்து அமைப்­புக்­க­ளும், இணைந்து எதிர்­வ­ரும் வெள்­ளிக்­கி­ழமை (நாளை) காலை 9 மணி­ய­ள­வில் கண்­ட­னப் பேர­ணியை நடத்த ஏற்­பாடு செய்­துள்­ளன.

வவு­னியா கந்­த­சாமி ஆல­யத்­தில் ஆரம்­பிக்­கப்­பட்டு வவு­னியா மாவட்ட செய­ல­கத்­துக்­குப் பேர­ணி­யாக சென்று மாவட்­டச் செய­ல­ரூ­டாக ஊடாக இந்து கலா­சார அமைச்­சுக்கு முறைப்­பாடு ஒன்­றைக் கைய­ளிக்­க­வும் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன – என்­றார்.

You might also like